‘வெஞ்சென்ஸ்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Abarnathi, Ilavarasu, JohnVijay, Livingston, Y. Gee. Mahendran, Kaali Venkat, Saravana subbiah, Suresh Chakravarthi
Directed By : Rahul Ashok
Music By : Karthik Raja
Produced By : Ac Productions – A.P. Ashok Kumar
‘வெஞ்சென்ஸ்’ நம்ம இப்போ தினமும் பார்க்கும் அரசியல் சம்பவங்களையும் அதிகார விளையாட்டையும் அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட கதை. 2042 ல நடக்குது என்று சொல்லினாலும், அது ஒரு லேபிள் மாதிரி தான் இருக்கும், கதை முழுக்க நம்ம தற்போதைய அரசியலைத்தான் நினைவுபடுத்தும்.
கதை ஒரு சாதாரண பெண்ணான வேணி எப்படி வளர்ந்து ஒரு சக்திவாய்ந்த அதிகாரியாக மாறுகிறாள் என்பதிலிருந்து தொடங்குகிறது. சிறுவயதில் யாராலும் கவனிக்கப்படாத அவள், எல்லாரும் தன்னை பற்றி பேசணும் என்ற எண்ணத்தோடு படித்து ஐஏஎஸ் ஆகி கலெக்டர் ஆகிறாள். ஆரம்பத்தில் நேர்மையான அதிகாரி மாதிரி இருந்தாலும், படிப்படியாக அதிகாரமும் புகழும் அவளை வேற மாதிரி மாற்ற ஆரம்பிக்கிறது. தன்னை யாரும் மீறக்கூடாது, எல்லாரும் தன்னை கவனிக்கணும் என்ற எண்ணத்தில் அரசியல் ஆட்டங்களில் இறங்கி, பெரிய பெரிய தலைவர்களையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறாள்.
இதற்கிடையில் மத்திய அரசியலில் பெரிய ஆளாக இருக்கும் ஒரு அமைச்சருடன் அவளுக்கு நடக்கும் மோதல் கதைக்கு விறுவிறுப்பை தருகிறது. ஒரு பக்கம் அதிகாரம், இன்னொரு பக்கம் அரசியல் சதி, இதுக்கு நடுவில் வேணி எப்படி தன் ஆட்டத்தை ஆடுகிறாள் என்பதுதான் படத்தின் மையம். இறுதியில் வரும் ட்விஸ்ட் கதை முழுக்க ஒரு வேற கோணத்தில் பார்க்க வைக்கிறது.
நடிப்பில் அபர்ணதி இந்த படத்தை முழுக்க தூக்கி நிறுத்துகிறார். அவர் வேணியாகவே வாழ்ந்த மாதிரி தெரிகிறார். குறிப்பாக அதிகாரம், கோபம், ஆசை எல்லாத்தையும் கண்களிலேயே காட்டுகிறார். ஒரு பெண் அதிகாரம் கைக்கு வந்த பிறகு எப்படி மாறுவாள் என்பதையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜான் விஜய் வில்லனாக வழக்கமான ஸ்டைலில் மிரட்டுகிறார், ஆனால் சில இடங்களில் ஓவராக போகும் உணர்வு வருகிறது. இளவரசு, காளி வெங்கட், லிவிங்ஸ்டன் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்கள் வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்.
இசை மற்றும் ஒளிப்பதிவு நல்ல ஆதரவாக இருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை பல காட்சிகளில் பதட்டத்தை கூட்டுகிறது. ஒளிப்பதிவும் காட்சிகளை நன்றாக காட்டுகிறது. அரசியல் சூழ்நிலைகளையும் காட்சிகளையும் அழகாக எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் பலம் அதன் ஐடியா. ஒரு பெண்ணின் அதிகார வெறி, புகழ் போதை, அரசியல் சதி எல்லாத்தையும் சேர்த்து சொல்ல முயற்சி செய்திருப்பது புதுசாக இருக்கிறது. அதே சமயம் கதையில் சில குறைகளும் இருக்கிறது. குறிப்பாக திரைக்கதை சில இடங்களில் சிதறிப்போவது போல இருக்கும். சில காட்சிகள் நம்பகமாக தெரியாது. முக்கியமான அரசியல் கதாபாத்திரங்களை சற்றே பலவீனமாக காட்டியிருப்பது குறையாக தெரிகிறது. மேலும் படம் கொஞ்சம் நீளமாக இருப்பதும் ஒரு மைனஸ்.
மொத்தத்தில், ‘வெஞ்சென்ஸ்’ ஒரு வித்தியாசமான முயற்சி அபர்ணதியின் நடிப்பு மற்றும் சில விறுவிறுப்பான காட்சிகளுக்காக இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.



















