full screen background image
Search
Saturday 17 January 2026
  • :
  • :
Latest Update

‘மாண்புமிகு பறை’ திரைப்பட விமர்சனம்

‘மாண்புமிகு பறை’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Leo Sivakumar, Gayathri Rema, Ariyan, Kajaraj, Rama, Ashok Raja, Cheranraj, Kadhal Sukumar, Jayakumar Ponsuresh, Aranga Gunaseelan

Directed By : S. Vijay Sukumar

Music By : Deva

Produced By : Siya Productions

மாண்புமிகு பறை படம் பறை இசை, நட்பு, கலாச்சாரம், சமூக அவமதிப்பு – இந்த எல்லாத்தையும் மையமாக வைத்து எடுத்த ஒரு sincere முயற்சி. வெற்றி (லியோ சிவகுமார்) – எழில் (ஆரியன்) என்ற இரண்டு நெருங்கிய நண்பர்கள் ஆதிபறை என்ற பறை குழுவை நடத்தி வர்றாங்க. அழிந்து வர்ற பறை இசையை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து, அந்தக் கலைக்கும் கலைஞர்களுக்கும் மரியாதை வாங்கித் தரணும்னு கனவு காண்றாங்க. ஆனா சமூகம் முழுக்க முழுக்க அவர்களுக்கு துணை நிற்கல; பறை இசையையும் அதைப் வாசிக்கிறவர்களையும் இழிவா பார்ப்பவர்களால நிறைய பிரச்சனைகள் வருது. அந்த எல்லாத்தையும் தாண்டி அவங்க நினைச்சதை சாதிச்சாங்களா இல்லையா என்பதுதான் கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் அதோட நோக்கம். பறை இசையின் பெருமையையும், அந்தக் கலைக்கு கிடைக்க வேண்டிய மரியாதையையும் சொல்லணும்னு உண்மையா முயற்சி பண்ணிருக்காங்க. பறை வாசிக்கும் காட்சிகள், விழாக்கள், சடங்குகள் எல்லாம் மரியாதையோட காட்டப்படுது. நட்பு, கனவு, போராட்டம் எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல மெசேஜ் தருது.

ஆனா நடிப்புல சில குறைபாடுகள் இருக்கு. லியோ சிவகுமார் ஒரு நல்ல மனிதரா, வெற்றி என்ற கதாபாத்திரமா சரியா வந்தாலும், பறை இசைக்கலைஞரா முழுசா நம்ப வைக்கல. பறை வாசிக்கும்போது அந்த உணர்ச்சியும் உடல் அசைவும் குறைஞ்சிருக்கு. ஆரியனும் உணர்வுப்பூர்வமா நடித்தாலும், பறை கலைஞர் என்ற அடையாளம் அழுத்தமா பதியல. அதே சமயம் காயத்ரி ரெமா தனது நடிப்பால் படத்துக்கு நல்ல பலம் சேர்க்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதியில அவர் கதாபாத்திரம் மனசை தொடுது.

மற்ற துணை நடிகர்கள் அவர்களுக்கு கொடுத்த வேலையை ஓரளவு சரியா செய்திருக்காங்க. இசை ஆட்டம் போட வைக்கும் வகையில இருந்தாலும், பறை இசையின் ஆத்மாவை முழுசா உணர வைக்கிற அளவுக்கு இல்லை. பின்னணி இசை சுமார்தான். கிராமத்து காட்சிகளை ஒளிப்பதிவு அழகா காட்டுது. எடிட்டிங் ஒழுங்கா இருந்தாலும், படத்துக்கு வேகம் அல்லது சுவாரஸ்யம் அதிகமா சேர்க்கல.

இயக்குநர் விஜய் சுகுமார் பறை இசையின் பெருமையையும், அந்தக் கலைஞர்கள் எப்படி ஒதுக்கப்படுறாங்கன்னு சொல்ல முயற்சி பண்ணிருக்கார். ஆனா அதே நேரத்துல சாதி பிரச்சனை, ஆணவக் கொலை விஷயங்களை அதிகமா பேசுறதால, பறை இசைதான் மையம் என்ற உணர்வு சில இடங்கள்ல மங்கிப் போகுது. திரைக்கதை சில இடங்கள்ல வழக்கமான பாதையில போனாலும், படத்தின் நேர்மையும் உணர்ச்சியும் அதை மீட்டெடுக்குது.

மொத்தத்துல, ‘மாண்புமிகு பறை’ நல்ல நோக்கமும் சமூக அக்கறையும் கொண்ட படம்.
குறைபாடுகள் இருந்தாலும், பறை இசைக்கும் அதன் கலைஞர்களுக்கும் மரியாதை தேடும் முயற்சிக்காக பார்க்கலாம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *