full screen background image
Search
Saturday 17 January 2026
  • :
  • :
Latest Update

‘மகாசேனா’ திரைப்பட விமர்சனம்

‘மகாசேனா’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Vemal, Srushti Dange, Yogi Babu, John Vijay, Kabir Duhan Singh, Mahima Ghupta, Vijay Cheyon, Alfred Jose, Siva Krishna Shubhagi Jha, Ilakiya

Directed By : Dhinesh Kalaiselvan

Music By : A. Praveen Kumar

Produced By : Marudham Productions

மஹாசேன்ஹா படம் பழங்குடி வாழ்க்கை, காடு, தெய்வ நம்பிக்கை, யானை – இந்த எல்லாத்தையும் சேர்த்து ஒரு வித்தியாசமான கதையை சொல்ல வருது. பழங்குடியினரான விமல், சேனா என்ற யானையை வளர்க்கிறவர். அவங்க கிராமத்து கோவிலில் இருக்கிற யாழீஸ்வரன் சிலையை திருட வனத்துறை அதிகாரி ஜான் விஜய் திட்டம் போடுறார். இதுக்கிடையில் மதம் பிடிச்ச யானை விமலின் மகளை தாக்கிட்டு காட்டுக்குள்ள போயிடுது. யானையை தேடி காட்டுக்குள் போகும் விமல், அந்த சிலை கடத்தல் விஷயத்துல மாட்டிக்கிறாரா, யானைக்கு என்ன ஆகுது அப்படின்னுதான் கதை.

படத்தின் ஐடியா நல்லா இருக்கு. பழங்குடி கலாச்சாரம், காடு, ஆன்மீகம் எல்லாத்தையும் இணைக்க முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா அதை திரைக்கதையில சரியா கொண்டு வரல. முதல் பாதியில நிறைய கதைகள் ஆரம்பிக்குது – பழங்குடிகளுக்குள்ள பிரச்சனை, வனத்துறை அரசியல், கோவில் சிலை மர்மம். ஆனா எதுவுமே ஆழமா போகல. சீன்ல இருந்து சீனுக்கு திடீர்னு குதிக்கிற மாதிரி இருக்கு.


இரண்டாம் பாதியில மாயாஜாலம், சாமி விஷயம் எல்லாம் அதிகமா வருது. ஆனா அதுவும் குழப்பமா தான் இருக்கு. விமல் – யானை சேனா இடையில இருக்க வேண்டிய உணர்ச்சி பெரிய தாக்கத்தை கொடுக்கல. சில துணைக் கதைகள் நடுவுலேயே விட்டுடுற மாதிரி தோணுது. நடிப்பைப் பார்த்தா, விமல் நாயகனாக இல்லாம ஒரு சாதாரண கதாபாத்திரம் மாதிரியே வர்றார். பழங்குடியினராக நடித்ததுக்கான முயற்சி அதிகமா தெரியல. சிருஷ்டி டாங்கே வீரமான பெண் கதாபாத்திரமா வந்தாலும், பல காட்சிகள்ல அந்த தைரியம் வெளிப்படல. யோகி பாபு காமெடி எடுபடல. ஜான் விஜய் வழக்கம்போல ஓவர் ஆக்டிங் தான். வில்லன் கபீர் துஹான் சிங் உட்பட மற்ற துணை நடிகர்கள் எல்லாம் அவர்களுக்கு கொடுத்த வேலையை ஓரளவு சரியா செய்திருக்காங்க.

டெக்னிக்கலா படம் கொஞ்சம் நல்லா இருக்கு. காட்டுக் காட்சிகள், மலைப் பகுதி எல்லாம் கண்ணுக்கு அழகா இருக்குது. ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்துது. இசை பாடல்கள் சுமார்தான், ஆனா பின்னணி இசை காட்சிகளுக்கு ஒத்துப்போகுது. எடிட்டிங் தான் பெரிய பிரச்சனை – மூணு விதமான கதைகளை சேர்க்க முயற்சி பண்ணி தடுமாறிடுச்சு.

மொத்தத்துல,இந்த ‘மஹாசேன்ஹா’ படம் நல்ல ஐடியாவும் வித்தியாசமான களமும் இருந்தாலும், தெளிவில்லாத திரைக்கதை, சீரற்ற போக்கு காரணமாக எதிர்பார்ப்பை முழுசா பூர்த்தி செய்யாத ஒரு முயற்சிப் படம் தான்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *