‘வெள்ளகுதிர’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Harish Ori, Abirami Bose
Directed By : Saranraj Senthilkumar
Music By : Bharath Asigavan
Produced By : Harish Ori
‘வெள்ளகுதிர’ ஒரு மனசுக்குள் நெருக்கமான கிராமத்து படமாக இருக்கு. கதை என்னான — நாயகன் கதிர் (ஹரிஷ் ஓரி) பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு செய்த தவறுகளால் குடும்பம் சிக்கலில் விழ, நகரத்தை விட்டு தங்களது மலைக் கிராமத்துக்கு திரும்ப வேண்டிய நிலை வருகிறது. இது அவர்களுக்குப் பின்னடைவாக இருந்தாலும், அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் ஒரு வழியாகி விடுகிறது.
அங்கே கதிர், ஊர்ல மக்களின் குடும்ப திருமணம் நடைபெறுகிற போது மட்டும் சிலர வீட்டில் குடிக்கும் “மூலிகை ரசம்” என்ற பானத்தை குடிப்பார்கள் அதன் சுவையும்,மதிப்பு அதில் இருக்கும். கதிர் அதை தொழிலாக மாற்றி நிறைய பணம் பாத்து முன்னேற தொடங்குகிறார். இதுவே அவருக்கு ஒரு புதுப் பாதை. ஆனால் இந்த முன்னேற்றத்தால்தான் ஊர்ல மக்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்து சுற்றுலா திட்டம் போட நினைக்கும் முன்னாள் ஊர் தலைவர் ஏழுவனுடன் மோதல் ஆரம்பமாகிறது. அதுதான் கதையின் மையக்கரு.
கதிரின் பேராசையில் தொடங்கிய வாழ்க்கை, கிராமத்தில் சந்திக்கும் உண்மை மனிதர்கள், குடும்பம், மனைவி ஆகியோரின் மூலம் எப்படி மாறுகிறது என்பதுதான் இதில் நன்றாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக கதிர்–கயல் (அபிராமி போஸ்) இடையேயான கணவன்–மனைவி உணர்வு படத்துக்கும் நிறைய உயிர் கொடுக்கிறது. மனைவி தன்னால் முடிந்ததை செய்து, ஊருக்காகவும், குடும்பத்துக்காகவும் நிற்கும் விதம் படத்தில் நல்ல உணர்ச்சியை தருகிறது.
நடிகர்கள் எல்லாரும் இயல்பாகவே நடிச்சிருக்காங்க. ஹரிஷ் ஓரி கதிர் கெட்ட சிந்தனைகள் இருந்தாலும் மனசு நல்லவன், அதை வெளிப்படுத்தியிருப்பது கதைக்கு பொருத்தமாக இருக்கிறது. அபிராமி போஸ் கிராமத்து பெண்ணாக அழகாகவும், அளவான நடிப்பாலும் நிறைவு. மற்ற நடிகர்களும் முகம் தெரியாதவங்க இருந்தாலும், சூழலை ரியலாக காட்ட உதவி செய்கிறார்கள்.
இசை, காட்சிப்பதிவு டெக்னிக்கல் பக்கம் எல்லாம் படத்துக்கு பெரிய பலம். பாடல்கள் இல்லாமலே பின்னணி இசை சூழலை உயர்த்துகிறது. ராம் தேவின் ஒளிப்பதிவு கிராமத்தின் நிதானத்தையும், இயற்கை அழகையும் சரியாகப் பிடித்திருக்கிறது. எடிட்டிங்கும் வேகமாக இல்லாமல் நிதானமாக படம் போக உதவுகிறது.
இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார், மலைக் கிராம மக்களின் பிரச்சனைகள், நில அபகரிப்பு, அரசியல் விளைவுகள் எல்லாம் பேசினாலும், அதையே ஒரு சஸ்பென்ஸ்–கமர்ஷியல் டச் கொடுத்து சொன்னது படத்தை சலிப்பில்லாமல் நகர்த்துகிறது. “மூலிகை ரசம்” மாதிரி புதியதாக சேர்த்திருப்பதும் கதையை வேறுபடுத்துகிறது.
மொத்தத்தில்,இந்த ‘வெள்ளகுதிர’ சாதாரண கிராமக் கதையை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லும் ஒரு நேர்த்தியான படம்



















