‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
Casting : Keerthy Suresh, Radhika Sarathkumar, Super Subbarayan, Sunil, Ajay Ghosh, Redin Kingsley, John vijay, Kalyan Master, Suresh Chakravarthy, Kathiravan, Sendrayan, Augustin, Blade Shankar, Ramachandran, Akshatha Ajith, Kuhasini, Gayatri Shan
Directed By : JK.Chandru
Music By : Sean Roldan
Produced By : Passion Studios & The Route – Sudhan Sundaram & Jagadish Palanisamy
‘ரிவால்வர் ரீட்டா’ ஒரு பிளாக் காமெடி படம் என்ற பெயரில் வந்தாலும், முழுக்க காமெடி ஓடும் படமாக இல்லாமல், சில இடங்களில் மட்டும் சிரிப்பு வரும் வகையில் முடிகிறது. கதை – பாண்டிச்சேரியின் பெரிய ரவுடியான சூப்பர் சுப்பராயன், ஓடித்தப்பி கீர்த்தி சுரேஷின் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த குழப்பத்தில் கீழே விழுந்து இறந்து போகிறார். இதை குடும்பத்தினர் மறைக்கப் பார்க்க, மறுபக்கம் ரவுடியின் மகன் சுனில் தந்தையை தேடி வர, சிலர் உடலை பிடித்து 5 கோடி சம்பாதிக்க முயற்சிக்க, போலீஸ் ஜான் விஜயும் தனக்குள்ள பழியை தீர்க்க விரும்ப… இப்படி எல்லோரும் ஒரே உடலைப் பிடித்து ஓடும் குழப்பமே இந்த படத்தின் முழு கதை.
இந்த குழப்பத்தில் கீர்த்தி சுரேஷின் குடும்பம் எப்படி சிக்கிக்கொள்கிறது, எப்படி தப்பிக்கிறது என்பதையே பிளாக் காமெடி ஜானரில் சொல்ல முயற்சி.
கீர்த்தி சுரேஷ், முயற்சி நிறைய பண்ணியிருக்கிறார். சில காட்சிகளில் ரொம்ப நல்லா வேலை செய்கிறது, சில காட்சிகளில் காமெடி அவரை விட்டு ஓடிவிடுகிறது. ஆனாலும் ரீட்டா என்ற கதாபாத்திரத்தில் fresh-ஆவும், smart-ஆவும் தெரிகிறார்.
ராதிகா தான் படத்தில் biggest plus. அவங்க innocent humour சில காட்சிகளில் உண்மையிலேயே சிரிக்க வைக்கிறது. கூடவே கீர்த்தியையும் overshadow பண்ணும் இடங்கள் உண்டு.
சுனில் (Dracula Bobby) தோற்றத்திலும் யதார்த்தமாகவும் இருந்தாலும், கேரக்டர் சரியாக பயன்படுத்தப்படவில்லை. ரெடின் கிங்ஸ்லியின் comedy style ஆரம்பத்தில் சரி, ஆனால் அதையே படம் முழுவதும் repeat பண்ணிடுவதால் சலிப்பு வரும். Ajay Ghosh இருந்த இடங்களில் சிரிப்பு வரக்கூடிய scenes கொஞ்சம் வேலை செய்கிறது. John Vijay-ன் பாதி-வில்லன், பாதி-காமெடி ரோல் ஒன்றும் பெரிய தாக்கம் விடவில்லை.
மற்ற supporting cast–ல் தெரிந்த முகங்கள் நிறைய இருந்தாலும், கதைக்கு பெரிதாக strength கொடுக்க முடியவில்லை.
படத்தின் பெரிய குறை — கதை பழைய formula. இதே மாதிரி confusion comedy–யை பல வருடங்களுக்கு முன்பே பார்த்துபட்டிருக்கிறது. First half ஓட்டத்தில் போகும் போல இருந்தாலும், second half drag ஆகி, சில scenes தேவையில்லாமல் நீள்கிறது. இதுதான் engagement குறைக்கிறது.
மொத்தத்தில்,இந்த ‘ரிவால்வர் ரீட்டா’ புதியதோ, விறுவிறுப்போ இல்லாத, சில சிரிப்புகளுடன் போகும் ஒரு கருப்பு நகைச்சுவை முயற்சி.






























