‘ரஜினி கேங்க்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
Casting : Rajini Kiishen, Dwiwika, Munishkanth, Motta Rajendran, Cool Suresh, Kalki
Directed By : M.Ramesh Baarathi
Music By : M.S.Jones Rupert
Produced By : Mishri Enterprises – C.S. Padamchand, C. Ariyant Raaj & Rajini Kiishen
ரஜினி கிஷன் – த்விவிகா காதலர்கள். ஊரை விட்டு ஓடி திருமணம் செய்ய வரும்போது முனீஷ்காந்த் காரில் லிப்ட் கொடுத்துவிடுகிறார். வழியில் திருடன் கல்கியும் சேர, இந்த குழுவே ஒரு தெரியாத இடத்துக்கு சென்று விடுகிறது. இவர்களை பல காரணங்களுக்காக பலர் தேடி வருவது ஒரு பக்கம்… இதற்கிடையே ரஜினி–த்விவிகா கல்யாணமும் நடந்து விடுகிறது.
படம் ஆரம்பத்தில் முழுக்க காமெடி ஸ்டைலில் நிறைய ஜாலியாக போகும். ஆனால் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று படம் ஹாரர் ஜானருக்கு திரும்பி மாறுகிறது. ரஜினி திருடிய தாலியில் இருக்கும் சாபம்தான் கதையை வேறு பாதைக்கு தள்ளுகிறது. மைனா காட்டும் விசித்திரமான, கடுப்பான நடத்தை எல்லாம், பின்னால் ஒரு துயரமான அத்துமீறல் கதையுடனான பொன்னரசி ஆவி இருப்பதை மெதுவாக வெளிப்படுத்துகிறது.
படத்தின் முதல் பாதி நகைச்சுவையும் பதட்டமும் கலந்த ஒரு ஓட்டத்தில் போகிறது. மைனாவின் நடத்தில் மெல்ல மெல்ல வரும் மாற்றங்கள் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. இரண்டாம் பாதியில் மட்டும் கதை முழுக்க ஹாரருக்கு மாறி, பொன்னரசியின் துயரமான கடந்தகாலத்தை வெளிப்படுத்துகிறது. சில காட்சிகள் நன்றாக பதட்டம் கொடுத்தாலும், பல இடங்களில் வேகம் சீர்குலைவு, டோன் மாறுதல், ஓரளவு பழக்கமான விஷயங்கள் காரணமாக சீராகப் பிடிக்காமல் போகிறது.
நடிப்பில் ரஜினி கிஷன் நல்லே இருக்கிறார். காமெடி, காதல், குழப்பம்—எதிலும் லாசாக நடித்து கதை எங்கே கொண்டு செல்கிறது என்பதில் உணர்வு காட்டியிருக்கிறார். த்விவிகாவின் நடிப்பு, குறிப்பாக ஆவி பிடிக்கும் பகுதிகளில், கதைக்கு இன்னொரு லெவல் சேர்க்கிறது.
மொட்ட ராஜேந்திரன், முனீஷ்காந்த், கூல் சுரேஷ் என காமெடி ரவுண்ட் கொடுக்க வந்தவர்கள் சில இடங்களில் சிரிப்பை கொடுத்தாலும், பல நேரங்களில் ரியாக்ஷன்களும் சத்தங்களும் காரணமில்லாமல் நீண்டு, சலிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களை எழுதும் விதமே அவர்களது மதிப்பை குறைத்துவிட்டது.
இசையும், ஒளிப்பதிவும் சறுக்காமல் கமர்ஷியல் ஸ்டைலில் வேலை செய்கிறது. பாட்டுகள், வண்ணமயமான காட்சிகள்—all okay. ஆனால் எடிட்டிங்கில் கொஞ்சம் கட்டுப்பாடு இருந்தால் படம் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘ரஜினி கேங்க்’ சில சிரிப்பு, சில ஸ்பூக்கி சின்கள், சில உணர்ச்சி — இதையெல்லாம் லைட்டாக கலந்த ஒரு ‘சரி, ஒருமுறை பார்க்கலாம்’ வகை சூப்பர்நேச்சுரல் காமெடி-ஹாரர்.





















