full screen background image
Search
Thursday 25 June 2026
  • :
  • :
Latest Update

‘யோலோ’ திரைப்பட விமர்சனம்

‘யோலோ’ திரைப்பட ரேட்டிங்: 2/5

Casting : Dev, Devika, Badava Gopi, VJ NIkki

Directed By : Sam.S

Music By : Sagishna Xavier

Produced By : Mahesh Selvaraj

யூடியூப் பிராங்க் சேனல் நடத்தும் தேவ் தான் படத்தின் நாயகன். எப்போதும் பிறரை எரிச்சலூட்டிப் பரபரப்பை உருவாக்கும் இந்த மனிதன் வாழ்க்கையில் சிக்கிக் கொள்வது தான் கதையின் மையம். தேவிகா (நாயகி) ஒரு சாதாரண பெண் போலத் தோன்றினாலும், அவளுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்ததும் குடும்பமே குழம்பி போகிறது. பாஸ்போர்ட் ஆதாரம், சாட்சிகள் – எல்லாம் வர, பார்வையாளரே குழப்பத்தில் ஆழ்கிறார்.

இந்த சூழலில் தேவிகா உண்மையைத் தேட, அவளே கணவன் என சொல்லப்படும் தேவிடம் உதவி கேட்பது வித்தியாசமான திருப்பம். அடுத்தடுத்த காட்சிகளில் கொலை வழக்கு, கைது, விவாகரத்து – என்று படம் பல திருப்பங்களைக் காட்டுகிறது. சில சமயம் அமானுஷ்யமா? சில சமயம் கிரைம் திரில்லரா? இல்லை நகைச்சுவையா? என்ற கேள்வி பார்வையாளரையே குழப்புகிறது.

தேவ் – தேவிகா ஜோடி சரியாக பொருந்தியுள்ளனர். ஆனால் விஜே நிக்கியின் பாத்திரம், இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொள்வது போன்ற காட்சிகள் மிகையாகத் தோன்றுகின்றன.

நகைச்சுவைக்கு போதிய இடம் இருந்தும், அதை முறையாக வெளிக்கொண்டு வரவில்லை. சில நேரங்களில் “டார்லிங்” படத்தின் சாயல் அதிகமாகப் பட்டது. ஆனாலும் சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு, சகீஷனா சேவியரின் இசை – இரண்டும் படத்துக்கு நிறம் சேர்த்திருக்கின்றன. காட்சிகள் கலர்ஃபுல்லாக, இளமைத் தன்மையோடு காட்சியளிக்கின்றன.

மொத்தத்தில், கதை சிக்கலாகச் செல்லாமல் எளிமையாக்கியிருந்தால் “யோலோ” இன்னும் பிரகாசமாக இருந்திருக்கும். இருந்தாலும், சிறு குறைகளை புறந்தள்ளி, பொழுதுபோக்காக ரசிக்கக் கூடிய படம்.

மொத்தத்தில் இந்த ‘யோலோ’ குழப்பமும் கலாட்டாவும் கலந்து வந்த படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *