full screen background image
Search
Thursday 18 June 2026
  • :
  • :
Latest Update

‘தணல்’ திரைப்பட விமர்சனம்

‘தணல்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5

Casting : Atharvaa, Ashwin Kakumanu, Lavanya Tripathi

Directed By : Ravindra Madhava

Music By : Justin Prabhakaran

Produced By : Annai Film Production

அதர்வா முரளி நடித்திருக்கும் இந்த “தணல்” படம், சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஒரு பெரிய குற்றச் சதியை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கூறுகிறது. தொடக்கம் லேசாக, ஜாலியாக செல்லும் கதை, திடீரென பரபரப்பை கூட்டி, திரில்லர் சூழ்நிலையில் பார்வையாளரை இழுத்துச் செல்கிறது.

வில்லனாக வரும் அஸ்வின், கதாநாயகனை மிஞ்சும் வகையில் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். அவர் உருவாக்கும் பயம், போலீஸ் மீதான கோபம், பார்வையாளரை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால் கொள்ளை அடித்து பணத்தை வீணடிக்கும் பிளான் கொஞ்சம் ஒத்து வராத விஷயமாகவே தெரிகிறது.

நாயகி லாவண்யா அழகான நடிப்பில் காட்சிகளை அலங்கரிக்கிறார். அதேசமயம் ஷாராவின் காமெடி – ஐடியாக்கள் லேசான சிரிப்பை உண்டாக்குகின்றன. துணை நடிகர்களும் தங்கள் வேடத்தில் நன்றாகப் பொருந்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் சுரங்கக் காட்சிகளை நெருக்கடியுடன் படம்பிடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரனின் இசை, பாடல்களிலும் பின்னணியிலும் கதை சொல்லுதலை பலப்படுத்துகிறது. சில தர்க்க பிழைகள் இருந்தாலும், படம் விறுவிறுப்பை இழக்காமல் இருக்கிறது.

மொத்தத்தில், “தணல்” என்ற பெயருக்கேற்ற மாதிரி, நெருப்பாகவும், சுரங்கப்பாதை போலவும் இரட்டை அர்த்தத்தில் படத்தை நகர்த்தியுள்ளார் இயக்குநர். பரபரப்பான திரில்லர் ரசனை தேடுபவர்களுக்கு இது ஒரு சரியான படம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *