full screen background image
Search
Tuesday 21 July 2026
  • :
  • :
Latest Update

‘பராரி’ திரைப்பட விமர்சனம்

‘பராரி’ திரைப்பட ரேட்டிங்: 3/5

Cast&Crew

Harisankar
as Maran

Sangeetha Kalyan
as Devaki

Guru Rajendran
as Vedi

Samrat Suresh
as Samart

Pugazh Mahendran
as Jagan

Berm Nath
as Jaya Kumar

Director Ezhil Periyavede

படத்தில் நடித்த நடிகர்,நடிகைகள் பெரும்பாலும் புதுமுகங்களே இருந்தாலும் கதையின் நன்மைக்கேற்ப கைதேர்ந்த நடிகர்களை போல் நடித்திருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கர்நாடக மாநில எல்லை பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை பேசியிருக்கிறது.

பட்டியலினத்தை சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே யார் பெரிய ஆள் என்கிற மோதல் அடிக்கடி நடக்கிறது. ஊருக்கு பொதுவான வேடியப்பன் கோவில் கும்பிடுவது முதல், ஊருக்கு பொதுவான தண்ணீர் தொட்டி பிரச்சனை வரை அடிக்கடி சண்டை நடக்கிறது.

நாயகன் ஹரிசங்கர், சாதி ரீதியாக ஒடுக்கப்படும்போது குமுறுவதும் மொழி ரீதியாக ஒடுக்கப்படும் நேரத்தில் சீறுவதும் காதலியிடம் இணங்குவதும் என எல்லா நேரங்களிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகி சங்கீதா கல்யாண் எளிமையான அழகும் இயல்பான நடிப்புமாக வலம் வருகிறார்.அவருடைய பாத்திரப்படைப்புக்கேற்ற செயல்பாடுகளைச் செய்திருப்பது நன்று.

எதிர்மறை நாயகனாக நடித்திருக்கும் புகழ் மற்றும் குரு ராஜேந்திரன், பிரேம்நாத் ஆகியோரும் கவனிக்கத்தக்க நடித்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் மற்றும் ஜி.முத்துக்கனி ஆகியோரது உழைப்பில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் தாழ்வில்லை.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், கதாபாத்திரங்களுக்கு மட்டுமின்றி கதைக்களத்துக்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் கதையின் தன்மையைக் கூடுதலாக உணர வைத்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்குள் இருக்கும் சாதிப் பிரிவினைகள் அதிலும் ஆதிக்கச் சாதி என்றாலே அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் என்கிற எண்ணத்தை மாற்றியிருக்கிறார். கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ் போன்றோரை அம்பலப்படுத்தும் விதமாகக் காட்சிகள் வைத்திருக்கிறார்.அவருடைய தோற்றம் பிரதமர் போல் இருப்பது கூடுதல் குறியீடு.

கன்னட வெறியனை கதாநாயகியை விட்டு அறைய விட்டது,வர்க்கம் ஒன்றாக இருக்கும்போது சாதிப்பெருமை சிறுமைகள் எதற்கு? என்கிற கேள்வியைக் கேட்டிருப்பது உழைக்கும் வர்க்கம்தான் மனிதம் போற்றுகிறது அவர்களுக்குள் எவ்விதப் பிரிவினையும் தேவையில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பது ஆகியனவற்றால் தன் தனித்தன்மையை நிறுவியிருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ‘பராரி’ சாதி மொழி இனத்தைப் பற்றி ஒவ்வொரு தமிழனுக்கும் நங்கூரமிட்டு இருக்கிறது. பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *