‘ரஸாகர்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Bobby Simha, Tej Sapru, Makarand Deshpande, Raj Arun, Vedhika, AnnusriyaTripathi
Directed By : Yata Satyanarayana
Music By : Bheems Ceciroleo
Produced By : Samarveer Creations LLP
ஐதரபாத், இந்தியாவுடன் இணைய மறுத்ததோடு, துருக்கிஸ்தான் என்ற தனி நாடாக உருவெடுப்பதற்கான முயற்சியில் இறங்கியது. அவர்களுடைய முயற்சியை இந்தியா எப்படி முறியடித்து, ஐதராபாத் சமாஸ்தானத்தை இந்துஸ்தானுடன் இணைத்தது? என்ற வரலாற்று உண்மையை விவரிப்பது தான் ‘ரஸாகர்’ படத்தின் கதை.
சொல்லப்படாத வரலாற்று உண்மைகளை மையமாக கொண்டு வடிமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகள், ஐதராபாத் சமஸ்தானத்தை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள், அங்கிருந்த இந்துக்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பதை மட்டுமே விவரித்துள்ளது.
ஐதராபாத்தை ஆண்ட மிர் உஸ்மான் அலிகான் வேடத்தில் நடித்திருக்கும் மகரந்த் தேஷ் பாண்டே, அசிம் ரஸ்வி வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் அர்ஜூன், சந்தாவாவாக நடித்திருக்கும் வேதிகா, எம்மடி ராஜி ரெட்டியாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சர்தார் வல்லபாய் பட்டேல் வேடத்தில் நடித்திருக்கும் தேஜ் சப்ரு உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள்.
1947ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், துப்பாக்கிகள், கிராமம் என்று கலை இயக்குநர் திருமலா எம்.திருப்பதியின் அனைத்து வேலைகளும் ரசிக்கும் படியாக உள்ளது.
இதுவரை யாரும் சொல்லாத வரலாற்று உண்மையை ரத்துமும், சதையுமாக சொல்லியிருக்கும் இயக்குநர் யதா சத்யநாராயணா, படம் முழுவதும் இந்துக்களுக்கு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளை திரையில் காட்டியுள்ளார்.
மொத்தத்தில், இந்த ரஸாகர் திரைப்படம் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடிக்கவில்லை.