Categories
Cinema News

Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, Anil Ravipudi, Sahu Garapati, Shine Screens’s #VenkyAnil5 #NkrAR2, Presented By Suresh Productions, Zee Studios, Smt Archana Launched Grandly

விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

சம்கிராந்தி 2027-ஐ குறிவைத்து ஒரு அதிரடி கூட்டணி உருவாகியுள்ளது. விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம் மற்றும் ஹிட் மெஷின் அனில் ரவிபுடி இணையும் முழுநீள கொண்டாட்ட பொழுதுபோக்கு திரைப்படமான #VenkyAnil5 & #NkrAR2 தற்போது உருவாகி வருகிறது. ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹு கரபாட்டி தயாரிக்கும் இந்தப் படத்தை, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சுமதி. அர்ச்சனா மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்குகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

படத்தின் பிரம்மாண்டமான முஹூர்த்த விழா மற்றும் பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர், இயக்குநர் அனில் ரவிபுடி மற்றும் தயாரிப்பாளர் சாஹு கரபாட்டியிடம் திரைக்கதையை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தனர். முஹூர்த்த காட்சிக்காக, விக்டரி வெங்கடேஷ், கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி இடம்பெற்ற முதல் காட்சிக்கு அல்லு அரவிந்த் கிளாப் அடித்தார். சுரேஷ் பாபு கேமராவை இயக்கி வைத்தார். புகழ்பெற்ற இயக்குநர் கே. ராகவேந்திர ராவ் முதல் காட்சியை இயக்கினார்.

#VenkyAnil5 & #NkrAR2 திரைப்படம், அனில் ரவிபுடியின் பாணியில் உருவாகும் முழுமையான சங்கராந்தி கொண்டாட்ட திரைப்படமாக இருக்கும். அதிரடியான நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணையும் தனித்துவமான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இப்படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு அனில் ரவிபுடியின் தொடர்ச்சியான வெற்றி சாதனைகள், வித்தியாசமான நட்சத்திர கூட்டணி மற்றும் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

தொழில்நுட்பக் குழுவிலும் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் G.V பிரகாஷ் குமார் இசையமைக்க, சமீர் ரெட்டி ஒளிப்பதிவை கவனிக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பாளராகவும், A.S. பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். S. கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராக செயல்படுகிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

நடிகர்கள்:
விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி

தொழில்நுட்பக் குழு:
கதை, இயக்கம்:அனில் ராவிபூடி
தயாரிப்பாளர்:சாஹு காரபாட்டி
வழங்குபவர்கள்: சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா
இசை: G.V பிரகாஷ் குமார்
நிர்வாக தயாரிப்பாளர்: S.கிருஷ்ணா
ஒளிப்பதிவாளர்: சமீர் ரெட்டி
படத்தொகுப்பு: தம்மிராஜு
கலை இயக்குநர்: A.S. பிரகாஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, Anil Ravipudi, Sahu Garapati, Shine Screens’s #VenkyAnil5 #NkrAR2, Presented By Suresh Productions, Zee Studios, Smt Archana Launched Grandly

A crazy combination is gearing up for Sankranthi 2027 as Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, and Hit Machine Anil Ravipudi join forces for a full-fledged festive entertainer, #VenkyAnil5 & #NkrAR2. Produced by Sahu Garapati under the Shine Screens banner, the project is presented by Suresh Productions, Smt. Archana and Zee Studios. Keerthy Suresh and Krithi Shetty play the female leads. The film was officially launched with a grand muhurtham ceremony and pooja, attended by the core team along with several special guests.

Dil Raju and Shirish formally handed over the script to director Anil Ravipudi and producer Sahu Garapati, to start the proceedings. For the grand muhurtham ceremony, Allu Aravind sounded the clapboard for the first shot featuring Victory Venkatesh, Kalyan Ram, Keerthy Suresh, and Krithi Shetty, while Suresh Babu switched on the camera. Legendary filmmaker K Raghavendra Rao directed the inaugural shot.

#VenkyAnil5 & #NkrAR2 promises to be a quintessential Anil Ravipudi-style Sankranthi entertainer packed with nonstop fun and laughter. The exciting combination of Venkatesh and Kalyan Ram adds further weight to the project, making it one of the most anticipated festive releases in the making.

Despite being only recently launched, the film has already generated strong buzz, thanks to Anil Ravipudi’s impressive blockbuster track record, the unique star combination, and the backing of some of the industry’s most prominent production houses.

The film boasts a top-notch technical team, with leading music director GV Prakash Kumar composing the soundtrack, Sameer Reddy handling the cinematography, Tammiraju taking care of the editing, and AS Prakash overseeing the art direction. S Krishna serves as the executive producer. Preparations are underway to commence the regular shoot soon.

Cast: Victory Venkatesh, Nandamuri Kalyan Ram, Keerthy Suresh, Krithi Shetty

Technical Crew:
Writer, Director: Anil Ravipudi
Producer: Sahu Garapati
Presents: Suresh Productions, Zee Studios, Smt Archana
Music: GV Prakash Kumar
Executive Producer: S Krishna
Cinematographer: Sameer Reddy
Editor: Tammiraju
Art Director: AS Prakash
PRO: Yuvraaj
Marketing: Haashtag Media

Categories
Cinema News Press Meet

ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’

ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’

*ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது.*

லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின் உடைய இந்த திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும், தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளார். அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார்.

நடிகை நயன்தாரா இப்போது தனது மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த “லேடி சூப்பர் ஸ்டார் 75” திரைப்படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான நிலேஷ் கிருஷ்ணா கூறும்போது,
“எனது முதல் படத்தை ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன். நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் திருமதி நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது . இது அவரது 75வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன் உள்ளேன். திரைப்படத் உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குனர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இணைந்தது குறித்து ZEE Studios தென்னக தலைவர் திரு. அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், “லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் இந்த மதிப்புமிக்க படத்தில் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருபது ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாரா உடைய நடிப்பில் , திறமையான நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. Zee Studios ல், மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம். இந்த படம் அதில் ஒரு சிறந்த படியாக அமையும்.

“நயன்தாரா 75” திரைப்படத்தில் தமிழ் திரைத்துறையின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் – தினேஷ் கிருஷ்ணன் (ஒளிப்பதிவு), ஜாக்கி (கலை), பிரவீன் ஆண்டனி (எடிட்டிங்), அனு வர்தன்-தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பு), சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனிங்), சுரேஷ் சந்திரா-ரேகா D one (மக்கள் தொடர்பு) இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

*ZEE Studios, Trident Arts and Naad Sstudios proudly presents ‘Lady Superstar 75’*

*Actress Nayanthara’s new movie tentatively titled ‘Lady Superstar 75’, produced by ZEE Studios, Trident Arts and Naad Sstudios was launched this morning (July 12, 2022) with a simple ritual ceremony. This is going to be Nayanthara’s 75th film in an illustrious career spanning almost 2 decades.*

Lady Superstar, Nayanthara’s colossal journey as an extremely hard working and versatile performer has kept her career graph soaring at a jet speed progression. Courtesy of her spellbinding performances and the strong characters she essays, she has consistently entertained audiences across the globe for almost two decades.

The actress has now signed her milestone 75th project to be directed by debutant, Nilesh Krishnaa. The movie tentatively titled “Lady Superstar 75” is produced by Zee Studios, Trident Arts and Naad Sstudios and was launched this morning in Chennai with a simple ritual.

*Nilesh Krishnaa, writer and director of this film*, says, “I feel extremely happy, blessed, and grateful for the opportunity to direct my maiden venture under Trident Arts and Zee Studios, two prestigious production houses that have played a very important role to elevate the stature of Indian cinema, in the last few decades. It is also very surreal to acknowledge Mrs. Nayanthara, the one and only Lady Superstar, who will be leading this project as its protagonist, Sathyaraj sir,Jai & Redinkingsley are also part of our projects.As this is her 75th film, I’m deeply committed to delivering the trust and confidence she has in us. A large volume of what I’ve learnt about filmmaking comes from Director Shanker, my guru, alma mater, and mentor, to whom I pledge this opportunity. My sincere salutations to him, as we gear up to walk the talk and commence shooting, soon.”

Commenting on the association, Mr. Akshay Kejriwal, Head – South Movies, Zee Studios, says “We are extremely delighted and proud to announce our collaboration on this very prestigious milestone film of Lady Superstar, Nayanthara. She has consistently enthralled audiences across the Globe for close to two decades and it is our absolute honour and privilege to present this film helmed by the supremely talented, Nilesh Krishnaa. At Zee Studios, our aim is to create content that entertains and inspires people and this film is a positive step in that direction.

“Nayanthara 75” features some of the greatest technicians in the Tamil Industry – Dinesh Krishnan (DOP), Jacki (Art), Praveen Antony (Editing), Anu Vardhan-Dinesh Manoharan (Costume Designing), Suren & Alagiyakoothan (Sound Designing), Kabilan (Publicity Designing), Suresh Chandra-Rekha D’One (PRO).