Categories
Cinema News

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimpse Promises A Fun-Filled Ride

யோகி பாபு- சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு (Nayavayu Chitralu’s) தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’ (Golden Bhagyam) டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள். இரண்டு பேனர்களின் முதல் தயாரிப்பு முயற்சியாக இந்தப் படம் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழு இன்று டைட்டில் வெளியீட்டு கிளிம்ப்ஸை வெளியிட்டது. இந்தப் படம் முற்றிலும் தனித்துவமான கருத்துருவை தாங்கி வருகிறது.

இது வழக்கமான தெலுங்கு அல்லது தமிழ்ப் படம் அல்ல, மாறாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளையும், இரண்டு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்களையும் ஒன்றிணைக்கும் ‘ Telumil ’ படைப்பு.

கிளிம்ப்ஸ் ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை ரசிக்கிறது, அதே நேரத்தில் தமிழ் கதாபாத்திரம் சாம்பாருடன் இட்லியை ரசிக்கிறது.

எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் போது காட்சியும், கொண்டாட்டமும் வேறு நிலைக்குச் செல்கிறது.

யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் அதைத் தொடர்ந்து வருகிறது. இருவரும் வெள்ளை நிற உடையில் தோன்றுகின்றனர். பின்னர் இயக்குநர் அவர்களின் கதையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளிக்கிறார். அது காதலுடன் க்ரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை என்று வெளிப்படுத்துகிறார். அத்துடன், ‘கோல்டன் பாக்கியம்’ கிளிம்ப்ஸ் டைட்டில் வெளியீடு நிறைவடைகிறது .

இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இரண்டு காமெடி நடிகர்களை ஒரு பைலிங்குவல் கிராஸ்ஓவர் என்டர்டெய்னருக்காக ஒன்றிணைத்து இயக்குநர் பவன் பாசம்செட்டி தனித்துவமான ஒன்றை முயற்சித்துள்ளார். கூடுதல் சுவாரஸ்யமாக, தெலுங்கு நடிகர் சத்யா தமிழ் பேசுவதையும், தமிழ் நட்சத்திரம் யோகி பாபு தெலுங்கு பேசுவதையும் காண முடிகிறது. கிளிம்ப்ஸில், காட்சிகளின் பின்னணியில் பிரம்மாண்டமான மல்டி-ஸ்டாரர் கட்அவுட்களுடன், அவர்களை ஒரு மிகப்பெரிய தெலுங்கு – தமிழ் காம்பினேஷனாக முன்னிறுத்துகிறது.

கிளிம்ப்ஸைப் பார்க்கும்போது, படம் முன்னணி நடிகர்களின் தனித்துவமான கெமிஸ்ட்ரியை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான என்டர்டெய்னராக இருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

யோகி பாபு மற்றும் சத்யா இருவரும் படத்தின் மிகப்பெரிய நகைச்சுவை பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் தனித்துவமான காமெடி ஸ்டைல் மற்றும் அபாரமான டைமிங் முதல் முறையாக இந்த படத்தில் ஒன்றிணைகிறது.

ஜெயஸ்ரீ (Jayashree) மற்றும் அதிராஜ் (Athiraj) கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர் (Vennela Kishore), சுதர்சன் (Sudharshan), கிஷோர் திருமலா(Kishore Tirumala), ரோகிணி(Rohini), தனிகெள்ளா பரணி (Tanikella Bharani) மற்றும் சுனில் ரெட்டி (Sunil Reddy) ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் திறமையான தொழில்நுட்பக் குழுவும் இடம் பெற்றுள்ளது. மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் பப்லு அஜு ( Bablu Aju) ஒளிப்பதிவை கையாள, பவன் CH (Pawan CH) இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சிவா காமேஷ் D (Siva Kamesh D) கவனிக்க, எடிட்டிங்கை ரவி தேஜா கிரிஜாலா (Ravi Teja Girijala) மேற்பார்வையிடுகிறார்.

அறிவிப்புக்கு மற்றொரு நகைச்சுவைத் தொடுதலைச் சேர்க்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் படத்தை சங்கராந்தி வெளியீடாக அறிவித்து, பின்னர் சங்கராந்தியை அடித்துவிட்டு, இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

படத்தின் நடிகர்கள்: யோகி பாபு, சத்யா,ஜெயஸ்ரீ, அதிராஜ், வென்னேல கிஷோர், சுதர்சன், கிஷோர் திருமலா, ரோகிணி, தனிகெள்ளா பரணி மற்றும் சுனில் ரெட்டி

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: பவன் பாசம்செட்டி
தயாரிப்பாளர்கள்: நாகார்ஜுனா ரெட்டி & பவன் பாசம்செட்டி
பேனர்கள்: ட்ரீம் மூவி மேக்கர்ஸ், நயவாயு சித்ராலு
இசை: பவன் CH,நிதிஷ் ஜான்
ஒளிப்பதிவு: பப்லு அஜு
எடிட்டர்: ரவிதேஜா கிரிஜாலா
தயாரிப்பு வடிவமைப்பு : சிவா காமேஷ் D
மக்கள் தொடர்பு: யுவராஜ்

Yogi Babu, Satya ,Pawan Basamsetti, Nagarjuna Reddy, Dream Movie Makers, Nayavayu Chitralu’s Telumil Film Titled Golden Bhagyam, Title Glimpse Promises A Fun-Filled Ride

Comical powerhouses Yogi Babu and Satya are coming together for a new comedy entertainer, with Rangabali fame Pawan Basamsetti directing the film. Nagarjuna Reddy and Pawan Basamsetti are jointly producing the project under the banners of Dream Movie Makers and Nayavayu Chitralu. The film marks the maiden production venture of both banners. The team today unveiled the title reveal glimpse, offering a glimpse into the unique concept.

Interestingly, this is not a conventional Telugu or Tamil film, but a ‘Telumil’ project that brings together Telugu and Tamil languages along with popular actors from both industries. The glimpse begins on a humorous note, with a Telugu man and a Tamil man enjoying their respective favourite foods while proudly claiming that their cuisine is the best. The Telugu character relishes biryani with a cool drink, while the Tamil character enjoys idli with sambar. Their light-hearted argument takes a fun turn when another person interrupts them and points out that there is a much bigger combination in store.

That leads to the stylish introduction of Yogi Babu and Satya who appear in traditional white-and-white attire. The director then gives them an intriguing description of their story, revealing that it blends love with crime and action elements. The glimpse concludes with the title reveal, Golden Bhagyam.

Director Pawan Basamsetti attempts something distinctive by bringing together two of the most popular comedy actors from Telugu and Tamil cinema for a bilingual crossover entertainer. Adding to the fun, Telugu actor Satya is seen speaking Tamil, while Tamil star Yogi Babu speaks Telugu. The glimpse also playfully presents them as a major Telugu-Tamil combination, with massive multi-starrer cutouts featured in the backdrop. Going by the glimpse, the film promises to be an out-and-out entertainer built around the unique chemistry of its lead actors.

Yogi Babu and Satya are expected to be the film’s biggest source of humour, with their individual comic styles and impeccable timing coming together for the first time in this setting. Jayashree and Athiraj play the female leads, while Vennela Kishore, Sudharshan, Kishore Tirumala, Rohini, Tanikella Bharani and Sunil Reddy are part of the prominent supporting cast.

The film also features an accomplished technical crew. Malayalam cinema cinematographer Bablu Aju is handling the visuals, while Pawan CH is composing the music. Kamesh is in charge of the production design, with Ravi Teja Girijala overseeing the editing.

Adding another humorous touch to the announcement, the makers initially announced the film for a Sankranthi release, only to move it beyond Sankranthi and eventually announce its arrival simply within the year. The playful announcement perfectly matches the fun spirit of the project.

Cast: Yogi Babu, Satya,Jayashree, Athiraj, Vennela Kishore, Sudharshan, Kishore Tirumala, Rohini, Tanikella Bharani, and Sunil Reddy

Technical Crew:
Writer, Director: Pawan Basamsetti
Producers: Nagarjuna Reddy & Pawan Basamsetti
Banners: Dream Movie Makers, Nayavayu Chitralu
Music: Pawan CH,Nitish John
DOP: Bablu Aju
Editor: Raviteja Girijala
Art director: Siva Kamesh D
PRO: Yuvraaj

Categories
Cinema News Press Meet Videos

‘Kuiko’ Movie Press Meet

இயக்குனர் வெற்றி பெறனும், மக்களுக்கு குய்கோ படம் போய்ச்சேரனும் – நடிகர் விதார்த்

மலையாளப் படங்களைப் போல் திரைக்கதை கொண்டது குய்கோ திரைப்படம் – நடிகர் இளவரசு

விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம் – இயக்குனர் அருள் செழியன்

நவம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது குய்கோ

எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்,
“மலைக்கிராமத்துக்கான கதை என்றதும், மனதில் ஏற்காடு, ஊட்டி போன்ற விஷுவல் கண் முன் தோன்றும். அவர் லோக்கேஷனை ஃபோட்டோஸாகக் காட்டினார். இந்தக் கதை உருவான இடத்துல ஒரு வருடம் பயணித்து, ஒவ்வொரு சீசனும் எப்படி இருக்கும் எனச் சொன்னார். அழகிய கிராமம் எனச் சொல்வது சுலபம். ஆனா அதைக் காட்சிப்படுத்துவது சவாலா இருக்கும். லோக்கேஷனைப் பார்த்துடலாம் எனக் கேட்டேன். அந்தக் கிராமத்தில் மொத்தம் 40 வீடுதான் இருந்தது. அந்த ஊரில் இறங்கியதும் சிக்னல் கட்டாகிடுச்சு. அந்த ஊர் முழுவதும் பூந்தோட்டமாக இருந்தது. அந்த ஊர்ல பூக்களைப் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல பசுமையான லோக்கேஷனாகப் பார்த்து வச்சுட்டு வந்தோம். ஆனா படம் தள்ளிப் போய் மே மாசத்து வெயிலில் ஷூட்டிங் போகும்படி இருந்தது. ‘வேலூரில் மே மாசம் ஷூட்டிங்கா?’ என பயமுறுத்தினாங்க. எல்லோரும் பயமுறுத்தின மாதிரி மலை எங்களை பயமுறுத்தலை. ஆனா மலையில் இருந்து இறங்கிய ரெண்டு நாளும் வெயில் நல்லா காட்டிடுச்சு. ஒரு பாடல் படப்பிடிப்புக்காகப் பார்த்த இடத்தில் வனத்துறையின் அனுமதி இல்லாததால், வேற லோக்கேஷன் பார்த்தோம். அணைக்கட்டு முருகர் கோயில் பக்கத்தில் இருக்கும் மலையில் ஷூட்டிங் போனோம். அதனால் வேலூரை ஸ்விட்சர்லாந்து மாதிரி காட்ட முடிஞ்சது.”

யோகிபாபுவிற்கு ஜோடியாக ஜோடியாக நடித்திருக்கும் துர்கா பேசியதாவது,
“விதார்த் சார் என் காட்ஃபாதர். இதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நானும் இளவரசு சாரும், ஒருநாள் ஷூட்டிங் முடித்துவிட்டு காஃபி குடித்துக் கொண்டே பேசினோம். அவர் பேசினாரு, பேசினாரு, அவ்ளோ ஞானத்தை எங்க ஒளிச்சு வச்சார் எனத் தோணுமளவுக்குப் பேசினார். யோகிபாபு சாரு, நார்மலா நாம எல்லாரும் ஸ்க்ரீன்ல பார்க்கிற மாதிரி தான் இருப்பார். சிரிச்சுட்டே, சிரிக்க வச்சுட்டே இருப்பார்.”

நடிகர் முத்துக்குமார் பேசியதாவது,
” சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு நிறைய கதை சொன்னாங்க. அருள்செழியன் சொன்ன கதை ரொம்பச் சுவாரசியமாக இருந்தது. எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய படம். எனக்கு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரக்டர். வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை இதுல சொல்லியிருக்கார். இந்தப் படம் எந்தச் சூழ்நிலையிலும் பார்வையாளர்களை ஏமாத்தாது. நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கும்.”

நடிகர் இளவரசு பேசியதாவது,
“இளம் பத்திரிகையாளர்களுக்கு சினிமா கனவு இருந்தா சீக்கிரம் சினிமாக்கு வந்துடுங்க. காத்திருக்காதீங்க. இப்பவே வந்து சினிமாவுல முட்டுங்க, மோதுங்க. பத்திரிகை துறை உங்க நேரத்தையும் உழைப்பையும் உறிந்துவிடும். நல்லவேளையா அருள்செழியன் இப்பயாவது வந்துட்டார். படம் கிடைச்சிடுச்சு, செல்லப்பிள்ளை யோகிபாபு, ஃபெர்பார்ம் பண்ற ஹீரோ விதார்த், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் உள்ள வந்துட்டாங்க. ஆனா முதல் நாள் ஷூட்டிங்கில், அறுபது சீனில் எதை முதல் ஷாட்டாக வைப்பீங்க? அகிரா குரோசாவோவாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை வரும். அதைச் சமாளிக்க, அசோசியேட் இயக்குநர், கேமராமேன் என இருவரின் தயவு அவசியம் தேவை. அப்படியொரு டீம் அருள் செழிலனுக்கு அமைஞ்சது. அதைத் தாண்டி, இந்தப் படத்துல என்ன சிறப்பு? மலையாளப்படத்துல தான் நூல் பிடித்தாற்போல் சுவார்சியம் குறையாமல் டக்கு டக்குன்னு திரைக்கதை அமைச்சுட்டே போவாங்க. சினிமாவுல, கதையை விட திரைக்கதை தான் ரொம்ப முக்கியம். அது சில ஸ்க்ரிப்ட்க்கு அமையும். இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. அவர் கதையில், ஃப்ரீசர் பெட்டிக்கு ஒரு எமோஷன் வச்சு அருமையான திரைக்கதையாக அமைச்சிருக்கார்.

பெண்கள் பொதுவாகத் தன்னை அழகாகக் காண்பிச்சுக்க நினைப்பாங்க. இந்தப் படத்துல, கதாநாயகி ஸ்ரீபிரியங்கா எண்ணெய் ஒழுகும் முகத்தோடு நின்னுட்டிருந்தாங்க. நான் போய், ‘டச் அப் பண்ணிக்கோம்மா’ எனச் சொன்னேன். ‘இல்ல சார், கதைக்கு இப்படித்தான் இருக்கணும்’ எனச் சொன்னாங்க. கன்டினியுட்டி மிஸ் ஆகிடக்கூடாதுன்னு சிச்சுவேஷனுக்கு ஏற்ற முகத்துடன் இருக்கணும் என ஒரு கதாநாயகி படத்தோடு இன்வால்வ் ஆகி நடிச்சது ஆச்சரியமாக இருந்தது.

விதார்த்திற்கு அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை. விமல், விதார்த், விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோவின் நண்வர்களாக நடிச்சு இப்போ ஹீரோவாகி இருக்காங்க. விதார்த் சினிமாவுல சாதிச்சது தெரியும். ஆனா அவர் பாரதம் நாடகத்துல, துச்சாதனாக துயில் உறியுற காட்சி நடிச்சுட்டு, ஸ்க்ரீனுக்குப் பின்னாடி போறப்ப அவர் மேல தண்ணி ஊத்தினா, பொஸ்ஸ்ன்னு ஆவி போகும். பொசுக்குன்னு தண்ணி ஊத்தினா ஆவி பறக்கும். ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாகவே மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமே இல்லை. அவர் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகணும். இது ஓட வேண்டிய படம். படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படுத்தலாம்.”

நடிகை ஸ்ரீபிரியங்கா பேசியதாவது,
“எங்க படத்தோட தலைப்பு மட்டும் வித்தியாசமானது இல்லை. எங்க டீமே வித்தியாசமானதுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கு. ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காண்பிச்சிருக்கார். படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகுது. அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க.” என்றார்.

நடிகர் விதார்த் பேசியதாவது,
“இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணிதாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்‌ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணிதாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன். இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், ‘என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?’ என ‘ஃப்ரீஸர் பாக்ஸ்’ கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும். மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்த போது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அப்போ, ‘நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதை தான். அவ்வளவு அழகான கதை. எப்படி ‘ஒரு கிடாரியின் கருணை மனு’ படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் T. அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறனும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரனும்” என்றார்.

இசையமைப்பாளர் அந்தோணி தாசன் பேசியதாவது,
“என்னைப் பெத்தெடுத்த எங்கம்மாவுக்கு நன்றி. கோ.மு.-ல ஆரம்பிச்சு கோ.பி.-ல முடியுது. கொரோனாக்கு முன்னாடி தொடங்கி, கொரோனாக்குப் பின்னாடி வெளியாகப் போகுது. படம் தொடங்கி 5 வருஷமாகுது. கலச்சாரத் தூதுவனா, மக்களை சந்தோஷப்படுத்துற பணியை மண்ணுக்குப் போறவரை செய்வேன். நான் கரகாட்டக் கலைஞன் என்பதால் நடனமும் ஆடுவேன். படத்துல, பாடல்களுக்கு நானே ஆடுறேன் எனக் கேட்டுப் பார்த்தேன். இயக்குநர் ஒத்துக்கலை. அவரது அடுத்த படத்துல எனக்கு முக்கியமானதொரு கதாபாத்திரம் தருவாருன்னு நம்புறேன்.” என்றார்.

இயக்குநர் அருள்செழியன் பேசியதாவது,
“ஜீ தமிழ்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது, 3 ஸ்க்ரிப்ட் பெளண்ட் பண்ணேன். அதுல ஒன்னுதான் ஆண்டவன் கட்டளை. மணிகண்டனோட ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டுப் பாராட்டுறதுக்காகக் கூப்பிட்டேன். அப்போ அவர் எனது ‘ஆண்டவன் கட்டளை’ கதையைக் கேட்டார். அவர் மூலமாக ஃப்ரீசர் பெட்டி கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, கடைசி விவசாயி தயாரிப்பாளர் சமீர் பரத் அழைத்தார். யோகிபாபுவுக்கு, ஆண்டவன் கட்டளை சமயத்திலேயே கதை சொல்லியிருந்தேன். கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கார். விதார்த், மிகச் சிறந்த மனிதராக இருக்கிறார். யோகிபாபுவின் தேதி கிடைக்காததால், அவரது போர்ஷனை முதலில் முடிச்சோம். விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.

இளவரசு அண்ணனிடம் கதை சொன்னேன். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து, ‘மூன்று மணிக்கு முழிப்பு வந்தது, இந்தக் கதை பற்றித்தான் யோசிச்சிட்டிருந்தேன். ரொம்பப் பிரமாதமாக இருக்கு’ என்றார். 2019 இல் படம் தொடங்கி தாமதம் ஆன பொழுதெல்லாம் மிக உறுதுணையாக இருந்தார். ஆயிரம் சினிமாக்கு பைனான்ஸ் பண்ணவரிடம் கூட்டிட்டுப் போனார். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அக்கறையோடு இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவி பண்ணார்.

வெறொரு படத்திற்காக அந்தோணிதாசன் இசையமைத்த, ‘ஏ! சிரிப்பழகி’ பாட்டை, ‘எனக்கு வேணும்’னு கேட்டு வாங்கினேன். ராஜேஷ் யாதவ் வேகமாக 35 நாளில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கார். படத்தில் மோசமான கெட்ட பாத்திரங்களே இல்லை. ஏன் போலீஸை மட்டும் கெட்டவங்களா காட்டியிருக்கீங்க என சென்சாரில் கேட்டனர். 35 வருஷமா பத்திரிகையாளரா வேலை பார்த்தேன். நான் பார்த்த விஷயங்களைக் கொஞ்சம் நையாண்டியாக டீல் பண்ணேன் எனச் சொன்னேன்.”

குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். திரையரங்குகளில், நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Trailer Link ▶ https://youtu.be/3Z1ygKa09q0