Categories
Cinema News

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas’ The Paradise Raw Statement Promises A Gritty & Epic Journey

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – ஸ்ரீகாந்த் ஓடெலா – சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘தி பாரடைஸ் ‘ படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ எனும் திரைப்படத்திலிருந்து ரா ஸ்டேட்மெண்ட் எனும் பெயரில் பிரத்யேகமான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடினமான மற்றும் காவிய வடிவிலான பயணத்தை உறுதியளிக்கிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம்- அவருடைய திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாக இருந்தது. அவர் தன்னுடைய சௌகரியமான தளத்திலிருந்து விலகி, ஒரு கரடு முரடான கிராமிய கதாபாத்திரத்திற்கு மாறி இருக்கிறார். திரைப்பட ஆர்வலர்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்காத ஒன்றை தற்போது நானி மீண்டும் வழங்குவதற்கு தயாராக உள்ளார். அவர் SLV சினிமாஸ் – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி ஆகியோருடன் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான படத்திற்காக இணைகிறார். இவர்கள் இணைந்திருக்கும் புதிய படம் ‘தி பேரடைஸ்’. தற்போது தயாரிப்பின் தொடக்க நிலையில் உள்ளது. மேலும் நானியை இதற்கு முன் ஏற்றிராத தைரியமான- மிக வலிமையான கதாபாத்திரத்தில் தோன்றுவதையும் உறுதியளிக்கிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘ரா ஸ்டேட்மென்ட்’ எனும் பெயரில் பிரத்யேக வீடியோவை வெளியிட்டனர். அந்த காணொளியின் முதல் காட்சியிலிருந்து ‘ரா – RAW’ என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.‌ சூழல் – மொழி- கதை – பின்னணி – ஆகியவை கரடு முரடானவை மற்றும் பண்படுத்தப்படாதவை. இந்தக் காட்சி ஒருவகையான மறுப்புடன் தொடங்குகிறது. அசலான உண்மை – அசலான மொழி – ஆகியவை வரவிருக்கும் விசயங்களுக்கான த்வொனியை அமைக்கிறது. ஒரு சக்தி வாய்ந்த குரல் வழியாக இக்கதையின் மையம் குறித்து விவரிக்கப்படுகிறது.

அதில், ” வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களை பற்றி எழுதி இருக்கிறார்கள். ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள் – தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல.. ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை. ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழு சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்த காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கதை இது. அந்த இளைஞன் ஒரு தலைவராக மாறிய கதை…” என அந்த குரல் விவரிக்கிறது.‌

இந்தக் குரல் அப்பட்டமான காட்சிகளுடன் இணைந்து பார்வையாளர்களை அது விவரிக்கும் சமூகத்தின் வேதனையை உணர அனுமதிக்கிறது. தொடக்கக் காட்சியில் இறந்த உடல்களால் சிதறடிக்கப்பட்ட சேரிகளையும், அதன் மேலே அச்சுறுத்து வகையில் காகங்கள் பறப்பதையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் ஒரு மிகப்பெரிய வெடிப்பிற்குள் கதாநாயகன் நானியின் பிரவேசத்தை குறிக்கிறது. அவர் எதிர்பாராத தோற்றத்தில் தோன்றுகிறார். காலணிகளில் கட்டப்பட்ட கை கடிகாரம்- தண்ணீரிலிருந்து இழுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி – கரடு முரடான தோற்றம் – இதனுடன் அவர் உறுதி குலையாமல் நடந்து ..தனது மக்களை பெருமையுடன் வழி நடத்துகிறார். அவரது முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அவரது உடல் மொழி – தோரணை – குரலின் ஆற்றல் – அவருடைய உடல் அமைப்பு மற்றும் இரட்டை ஜடையுடனான சிகை அலங்காரத்தால் சிறப்பிக்கப்படுகிறது. அத்துடன் கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் உடனடியாக காட்சிப்படுத்துகிறது. ‘ஹீரோ’ என்ற வார்த்தையால் அலங்கரிக்கப்பட்ட அவர் அணிந்திருக்கும் பெல்ட் – மக்களின் தலைவராக அவருடைய பங்களிப்பையும் குறிக்கிறது.

இந்த ரா ஸ்டேட்மென்ட் மூலம் ‘தி பாரடைஸ்’ படத்திற்காக இன்றுவரை நானியின் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் தீவிரமான கதாபாத்திரத்தை காட்சிப்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. அவரது அற்புதமான மேக்ஓவர் பார்வையாளர்களுடன் நிறைய பேசுகிறது. மேலும் அவரது முகத்தில் தெளிவான பார்வை இல்லாவிட்டாலும் அந்த கதாபாத்திரத்தின் சித்தரிப்பும்.. உணர்வும்… வலிமையும்… நேர்த்தியாக வெளிப்படுகின்றன. இது ஆரம்பம் மட்டும்தான். மேலும் படம் – கிளர்ச்சி மற்றும் தலைமைத்துவ உலகத்திற்குள் ஒரு முரட்டுத்தனமான மற்றும் காவியம் சார்ந்த பயணமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா மீண்டும் ஒரு கற்பனை திறன் மிகு படைப்பாளியாக தன்னை நிரூபித்துள்ளார். முதல் காட்சியிலிருந்து பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு முரட்டுத்தனமான மற்றும் மூழ்கடிக்கும் உலகத்தை திறமையாக உருவாக்கியிருக்கிறார். அவரது வித்தியாசமான கதை சொல்லல் ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுகிறது. மேலும் அவர் நானியின் திரை தோற்றத்தை அசலான தீவிரம் நிறைந்த கதாபாத்திரமாக முன் வைப்பதையும் மறு வரையறை செய்கிறார். இது இந்த வீடியோவில் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று. நானியின் கையில் உள்ள பச்சை குத்தியிருப்பது..போன்ற விவரங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துவதாகும். இந்த சிறிய காட்சியின் அம்சம்- கதாபாத்திரத்தின் தனிப்பட்ட பரிணாம வளர்ச்சியின் சக்தி வாய்ந்த அடையாளமாக மாறுகிறது.

ரா ஸ்டேட்மென்ட் காணொளியில் இப்படத்தில் பணியாற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலும் சிறப்பாக விளங்குகிறது. ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ அனிருத் இசையமைக்கிறார்.

தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை அவினாஷ் கொல்லா மேற்கொள்வது இந்தத் திரைப்படத்தின் தனித்துவமான அம்சமாகும். இயக்குநர் ஓடெலா உருவாக்கும் உலகம் நம்பக்கூடிய வகையில் உருவாகிறது. கதாபாத்திரங்கள் அணியும் உடைகள் முதல் அரங்க வடிவமைப்பு வரை ஒவ்வொரு விவரமும் பார்வையாளர்களை இந்த தீவிரமான பிரபஞ்சத்தில் மூழ்கடிக்கும். படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கையாள்கிறார். SLV சினிமாஸின் தயாரிப்பின் தரம் என்பது சர்வதேச அளவிலானது. படத்தின் பிரம்மாண்டம் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரியும். இவை சொல்லப்படும் கதையின் அளவை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் மெருகூட்டுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , மற்றும் ஸ்பானிஷ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் ரா ஸ்டேட்மென்ட் எனும் பிரத்யேக வீடியோ பார்வையாளர்களுக்கு
எதிர்பாராததை வழங்குகிறது. ஒரு புதிய தரத்தை உருவாக்கி. சிறப்பான சினிமாவிற்கான தரத்தை மேலும் உயர்த்துகிறது. இந்த காணொளியின் வீடியோவின் கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி மொழி பதிப்புகள் விரைவில் வெளியிடப்படும். இதன் உலகளாவிய ஈர்ப்புடன் படம் உலகம் முழுவதும் வெளியிடப்படும்.

நடிகர்கள் : நானி

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடெலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ்
ஒளிப்பதிவு : ஜி கே விஷ்ணு
இசை : அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு : நவீன் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas’ The Paradise Raw Statement Promises A Gritty & Epic Journey

Dasara marked a significant departure for Natural Star Nani, who stepped out of his comfort zone to portray a rugged, rustic character- something movie buffs hadn’t expected from him. Now, Nani is set to impress once again, as he teams up with director Srikanth Odela and producer Sudhakar Cherukuri of SLV Cinemas once again for an even bigger project. Their new film, titled The Paradise, is currently in the early stages of production and promises to showcase Nani in yet another bold, larger-than-life role.

Today, the makers unveiled the glimpse of the film, titled Raw Statement, and the name says it all. From the very first frame, one can understand why the term “raw” is used. The atmosphere, language, narrative, and backdrop are unapologetically gritty and unrefined. The glimpse opens with a disclaimer—raw truth, raw language, setting the tone for what’s to come. A powerful voiceover delivers the core of the story, saying, “In history, everyone has written about parrots and pigeons, but no one has ever written about crows born of the same species. This is the story of those crows whose stomachs burned with hunger… The cries of the corpses that have been walking for ages… A tale of a community raised on blood, not milk, from their mother’s breast… A spark ignited that filled the entire community with enthusiasm. Crows who had once been belittled now held swords in their hands. This is the story of a rebellious young man who united those crows… The story of that young man becoming a leader…”

The weight of the voiceover, combined with the stark imagery, allows viewers to feel the anguish of the community it describes. The opening shots show slums littered with dead bodies, with crows ominously flying above. Then, a massive explosion marks the entry of the protagonist, Nani, who emerges in an unexpected get-up. Sporting a rugged look, including a watch strapped to his shoes and a country-side gun pulled from the water, he walks with a fierce determination, leading his people with pride. Although his face remains hidden, the sheer power of his body language and posture, highlighted by his muscular physique and double braids, immediately convey the intensity of the character. His belt, emblazoned with the word HERO, symbolizes his role as the leader of his people.

This Raw Statement hints that The Paradise will feature Nani’s most raw and intense character to date. His striking makeover speaks volumes, and even without a clear view of his face, the emotion and strength of his portrayal come through strongly. This is just the beginning, and the film promises to be a gritty and epic journey into a world of rebellion and leadership.

Director Srikanth Odela has once again proven himself as a visionary filmmaker, masterfully constructing a gritty and immersive world that captivates audiences from the very first frame. His exceptional storytelling shines through with every scene, as he redefines Nani’s on-screen presence by presenting a character filled with raw intensity. One of the most compelling aspects of the glimpse is the meticulous attention to detail, such as the tattoo on Nani’s hand. This seemingly minor visual element becomes a powerful symbol of the character’s personal evolution.

From a technical standpoint, Raw Statement excels in every department. Cinematographer GK Vishnu delivers breathtaking visuals that perfectly capture the film’s unrelenting energy and intense atmosphere. Rockstar Anirudh Ravichander’s electrifying score stands out, enhancing the high-stakes narrative with every beat. His music amplifies the adrenaline-pumping moments, adding another layer of depth to the experience.

The production design by Avinash Kolla is another standout element of Raw Statement. The world Odela creates is raw, gritty, and utterly believable. Every detail, from the costumes to the set design, immerses the audience in this intense universe. The editing is by Navin Nooli. The production values from SLV Cinemas are exceptional. The film’s scale and grandeur are palpable in every frame, with a level of polish that underscores the magnitude of the story being told.

The Raw Statement, released in five languages—Telugu, Tamil, Hindi, English, and Spanish — delivers the unexpected, setting a new standard and raising the bar for cinematic excellence. The Kannada, Malayalam & Bengali versions of the glimpse will be released shortly. With its universal appeal, the film will have a pan-world release.

Cast: Nani

Technical Crew:

Writer, Director: Srikanth Odela
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
DOP: GK Vishnu
Music: Anirudh Ravichander
Editing: Navin Nooli
Production Designer : Avinash Kolla
PRO: Yuvraaj
Marketing: First Show

Categories
Cinema News

Rockstar Anirudh Ravichander Comes On Board For Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas The Paradise!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் இணைந்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் !!

நானி நடிக்கும் “தி பாரடைஸ்” படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத் !!

தசரா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, நேச்சுரல் ஸ்டார் நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் அதிரடி திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு, நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த சமூக வலைத்தள பதிவில் நானி கூறியுள்ளதாவது…: “நாங்கள் எங்கள் ஹாட்ரிக்கில் இணைந்துள்ளோம் 🙂 இது அற்புதமான காவியமாக இருக்கும். #Paradise இப்போது N’Ani’Odela படம். அன்புள்ள @anirudhofficial ♥️ உங்களை வரவேற்கிறோம்”

இதற்கு பதிலளித்துள்ள அனிருத், “இந்த திரைப்படம் ஸ்பெஷலான ஒன்று. என் அன்பான @NameisNani மற்றும் @odela_srikanth 💥💥💥 லெட்ஸ் கோ கிரேஸி ⚡️⚡️⚡️ எனக்குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்திற்காக ஒரு சக்திவாய்ந்த மாறுபட்ட அழுத்தமிகு திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இப்படம் நானியை முற்றிலும் புதிய, வெகுஜன அவதாரத்தில் காட்டும். நடிகர் நானி மிகவும் தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க பாத்திரத்தில் நடிக்கிறார்.

தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு, மிகப்பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படத்தை உருவாக்குகிறார். நடிகர் நானியின் திரை வாழ்க்கையில், மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இப்படம் இருக்கும்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

நடிகர் : நானி

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் : ஸ்ரீகாந்த் ஒடேலா தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி
பேனர்: SLV சினிமாஸ்
இசை – அனிருத் ரவிச்சந்தர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ

Rockstar Anirudh Ravichander Comes On Board For Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas The Paradise!

Natural Star Nani is all set to reunite with director Srikanth Odela and producer Sudhakar Cherukuri of Sri Lakshmi Venkateswara Cinemas (SLV Cinemas) for their highly anticipated second project together The Paradise, following the blockbuster success of Dasara. The new film, titled The Paradise, is set to go on floors soon. The pre-production works are in full swing, and Nani is also sweating out in gym to prepare for his character.

Rockstar Anirudh Ravichander is confirmed to score the music for the movie. The film marks the third time Nani and composer Anirudh have teamed up, continuing their successful partnership after the hits Jersey and Gangleader. Their past collaborations have delivered great musical success, and expectations are high for the upcoming project.

Nani’s post reads: “We’re on our hat-trick 🙂 This will be epic. #Paradise is N’Ani’Odela Film now. Welcome on board, dear @anirudhofficial ♥️”

In response, Anirudh shared, “This one is special. My dear @NameisNani and @odela_srikanth 💥💥💥 వెర్రిగా పోదాం ⚡️⚡️⚡️”

Srikanth Odela has crafted a powerful and larger-than-life story with an intense, gripping screenplay that promises to present Nani in an entirely new, mass-driven avatar. The actor will be playing his most intense and dynamic role yet.

Producer Sudhakar Cherukuri is fully invested in realizing this grand vision, ensuring that the film is made on a lavish scale. With a significant budget backing the project, this film is poised to become Nani’s most high-budget venture to date.

Details about the rest of the cast and crew will be revealed in due course.

Cast: Nani

Technical Crew:

Writer, Director: Srikanth Odela
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
Music: Anirudh Ravichander
PRO: Yuvraaj
Marketing: First Show

Categories
Cinema News

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela2 Launched Majestically

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘#நானிஓடேலா 2 ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘தசரா’ எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ #நானி ஓடேலா 2 ‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘இந்த திரைப்படம் ‘தசரா’ திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என நானி அண்மையில் தெரிவித்திருந்தார்.

‘தசரா’ திரைப்படம் ஏராளமான விருதுகளை குவித்து பெரும் புகழை பெற்றுள்ளதால், இந்த பான் இந்திய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உற்சாகத்துடன் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான தொடக்க விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் நவராத்திரி திருவிழாவை தேர்வு செய்தனர்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா அழுத்தமான மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதையை அடர்த்தியான திரைக்கதையுடன் வடிவமைத்துள்ளார். இதில் நானியை இதற்கு முன் கண்டிராத வகையில் மாஸான கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தவிருக்கிறார். இதற்காக நடிகர் நானி.. அவருடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். இது அவரது நடிப்பில் தயாராகும் மிகவும் கொடூரமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். பன்முக ஆளுமைக்கு பெயர் பெற்ற நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றிகரமான மற்றும் டைனமிக் கூட்டணியுடன் தயாராகும் இந்த திரைப்படம்.. நானியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும்.

நடிகர்கள் : நானி

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela2 Launched Majestically

Natural Star Nani is reuniting with director Srikanth Odela and producer Sudhakar Cherukuri of Sri Lakshmi Venkateswara Cinemas (SLV Cinemas) for their highly anticipated second collaboration, following the sensational hit Dasara. The new film, tentatively titled #NaniOdela2, was announced earlier with an eye-catching poster, and Nani recently stated that this project aims to create 100 times the impact of Dasara.

With Dasara receiving numerous awards and achieving immense popularity, excitement for this Pan India film is palpable. The makers chose the auspicious occasion of Dussehra to hold a majestic launch event.

Srikanth Odela has crafted a compelling and larger-than-life story with a gripping screenplay that will present Nani in a never-before-seen mass character. The actor is set to undergo a transformation for this role, making it his most ferocious character yet.

Sudhakar Cherukuri, a passionate producer, is committed to making the film on a substantial budget. Nani, known for his versatility, is thrilled to explore diverse subjects and is eager to collaborate once again with Srikanth Odela. This project in the successful and dynamic combination is going to be the most expensive movie for Nani.

This highly anticipated project is set to elevate storytelling, production quality, and technical prowess to new heights. More details are awaited.

Cast: Nani

Technical Crew:
Writer, Director: Srikanth Odela
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
PRO: Yuvraaj
Marketing: First Show

Categories
Cinema News

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் ‘#நானிஓடெல்லா 2’

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘#நானிஓடேலா 2’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ‘#நானிஓடேலா 2 ‘ அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘தசரா’ படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ‘தசரா’ படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கும் வகையில் புதிய திரைப்படத்தில் இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

குறிப்பாக ‘தசரா படத்தினை விட நூறு மடங்கு அதிகமாக பார்வையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் உருவாகும்’ என இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ‘#நானி ஓடேலா 2’ பற்றிய உற்சாகம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் படமாக்கப்பட்ட பிரத்யேக காணொளி மூலம்… திரைக்குப் பின்னால் பணியாற்றிய புகைப்படத்தை இயக்குநர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனித்துவமான மற்றும் அழுத்தமான படைப்பை வழங்குவதற்கான குழுவினரின் உறுதிபாட்டையும் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பேசுகையில், ” கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி ‘தசரா’ படத்தின் இறுதி காட்சி படமாக்கப்படும் போது காட்சி நிறைந்த உடன் ‘கட்’ என சொன்னேன். தற்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று மீண்டும் ‘ஆக்சன்’ என சொன்னேன். இதன் போது ‘#நானிஓடேலா 2’ படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான பிரத்யேக காணொளியை படமாக்கினோம்.‌ இதற்கு இடையில் 48, 470, 400 வினாடிகள் கடந்து விட்டது. ஒவ்வொரு வினாடியும் என்னுடைய அடுத்த படத்திற்கான அர்த்தமுள்ள உழைப்புக்காக செலவிடப்பட்டிருக்கிறது. எஸ் எல் பி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில் நானி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், தசரா படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ‘ #நானிஓடேலா 2’ திரைப்படம் உருவாகும் என நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

இது தொடர்பாக நானி பேசுகையில், ” இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பைத்தியக்காரத்தனமான அன்பு என் வாழ்க்கையில் மீண்டும் வந்து விட்டது. இதனை கண்டு தரிசிக்க தயாராக இருங்கள்” என்றார்.

இவர்களின் இத்தகைய பேச்சு தனித்துவமான மற்றும் பரபரப்பான கதை அம்சத்தை சுட்டிக் காட்டுகிறது. இந்த திரைப்படத்தில் இதற்கு முன் ஏற்றியிராத கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய சினிமா அனுபவத்திற்கு ‘ #நானிஓடேலா 2’ களம் அமைக்கிறது .

எஸ். எல். வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா இணைந்திருக்கும் இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாகிறது.

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins

Natural Star Nani is on a roll, having recently captivated audiences with his performances, and he’s set to turn heads once more with the announcement of Nani-Odela 2. Following the immense success of their first collaboration Dasara which grossed over 100 crores, Nani and director Srikanth Odela are teaming up again for a project that promises to be even bigger.

The excitement around Nani-Odela 2 is evident, especially with Odela’s statement that this new movie will create 100 times the impact of Dasara. The director, who shared a behind-the-scenes snap from the recently shot announcement video, expressed his commitment to deliver a compelling product.

“March 7th 2023 – Na first cinema #Dasara ki nenu cheppina last “cut, shot ok.” September 18th 2024 – back to saying “Action” for the announcement video of #NaniOdela2. 48,470,400 seconds have passed! Each second was spent with utmost sincerity for my next. And I promise to create 100 times the impact of #Dasara with #NaniOdela2 stated Srikanth Odela.

Nani has teased fans with his response, declaring, “This one’s madness is back in my life. Be prepared to be blown away.” This hints at a unique and thrilling narrative that could showcase Nani in an unprecedented role, setting the stage for a truly fresh cinematic experience.

Sudhakar Cherukuri will produce the film under the SLV Cinemas banner, and this will be the most expensive movie for both Nani and Srikanth Odela.

Categories
Cinema News

Dasara Trio Is Back- Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, Sri Lakshmi Venkateswara Cinemas #Nani33 Announced

மீண்டும் இணையும் தசரா கூட்டணி – நானி 33 படத்தின் அறிவிப்பு வெளியீடு

காதல் மற்றும் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான தசரா திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா அமைந்தது. இந்த நிலையில், தசரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் புதிய படத்தில் இணைகிறார். நானி 33 என தற்காலிக தலைப்புடன் துவங்கப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (எஸ்.எல்.வி. சினிமாஸ்) சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.

தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருந்தார்.

புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நானியின் முகம் மாசாக காட்சியளிக்கிறது. இத்துடன் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான போஸ்டரில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

முதல் போஸ்டரில் இருந்தே அடுத்த படம் ரத்தம் தெறிக்கும் வகையில் ஆக்ஷன் கதைக்களம் கொண்டிருக்கும் என்பதை படக்குழு தெரியப்படுத்தி இருக்கிறது. ஸ்ரீகாந்த் தனது அடுத்த படத்திலும் நானியை சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்க தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி முடிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட ஜானரில் படமெடுக்காமல், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில், இவர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் மீண்டும் இணைய இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

படக்குழுவினர்

நடிகர் – நானி

தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: ஸ்ரீகாந்த் ஒடேலா
தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி
பேனர்: எஸ்.எல்.வி.சினிமாஸ்
பி.ஆர்.ஓ: சதீஸ்குமார்
மார்கெட்டிங்: பர்ஸ்ட் ஷோ

Dasara Trio Is Back- Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, Sri Lakshmi Venkateswara Cinemas #Nani33 Announced

The period love and mass action drama Dasara was one of the biggest hits of 2023, and it was the highest grosser for almost everyone associated with including Natural Star Nani. The Dasara trio is back. Nani will be teaming up with director Srikanth Odela again for a new film #Nani33 to be produced by Sudhakar Cherukuri of Sri Lakshmi Venkateswara Cinemas (SLV Cinemas).

Srikanth Odela made an impressive debut with Dasara, which won critical accolades, besides becoming a commercial hit. The director was appreciated for his abilities as a writer and director. He presented Nani in a never-before mass character.

The announcement poster is painted red, indicating the violence, whereas Nani appears in a massy avatar with a beard and twirled moustache. He sports stylish shades and smokes a cigar elegantly. You don’t need an identity to be a leader, reads on the poster. In fact, Nani’s face and all are designed with the crowd in the background, hinting at his character.

Violence takes its right form before the revolution begins. Srikanth readied another winning script for Nani to present him in another power-packed character. Get ready for blood-shed soon with Nani33. Hold your breath for this one.

Sudhakar Cherukuri is a passionate producer who will be making the new movie on a huge budget. Nani, who is not sticking to one particular genre, is attempting all kinds of subjects, and he is excited to work again with Srikanth Odela.

Needless to say, the film in this crazy and blockbuster combination is going to be bigger, in terms of story span, making, and technical standards as well.

The makers have announced the release of the yet-to-be-titled flick in the summer of 2025.

Cast: Nani

Technical Crew:
Writer, Director: Srikanth Odela
Producer: Sudhakar Cherukuri
Banner: SLV Cinemas
PRO: SATHISH KUMAR
Marketing: First Show