Categories
Cinema News Press Meet Videos

‘Blue Star’ Movie Audio Launch | Pa Ranjith, Ashok Selvan, Shanthanu, Keerthi Pandian

திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

என்ன பேசுகிறாரோ அது போலவே நடப்பவர் இயக்குநர் பா.ரஞ்சித்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நாயகன் அசோக்செல்வன்

”பா.ரஞ்சித் படங்களில் நான் இருப்பது எனக்குப் பெருமை” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா

”நம் நாடு மிக மோசமான நிலைக்கு போகாமல் நம்மால் முடிந்த அளவிற்குப் போராடுவோம்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித்

இன்று நம் நாடு இருக்கும் நிலையைப் பார்க்கும் போது “காலு மேல காலு போடு ராவண குலமே” என்று பாடத் தோன்றுகிறது – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்.

”நடிகை கீர்த்தி பாண்டியன் மிக தைரியமாகப் பேசி இருக்கிறார்” – “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் பா.ரஞ்சித்

நீலம் புரொடெக்ஷன்ஸ் சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் லெமன் லீப் கிரியேஷன்ஸ் சார்பாக ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், ப்ருத்வி, பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன் பேசும் போது,

இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்த்தால் நான் நடிக்க சம்மதித்தேன். படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநர் என்னிடம் இந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா.. ?? என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் எனக்கு இப்படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாமே பிடித்திருந்த்து. இப்படத்தில் இயக்குநர் ரஞ்சித் இருக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா..?? என்று கேட்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்து பேசினால் என்ன தவறு என்று கேட்கிறேன்..? நாம் உண்ணும் உணவு உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. நாம் அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. இன்று மிகமிக முக்கியமான நாள். இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, “ காலு மேல காலு போடு ராவணகுலமே ” என்று பாடத் தோன்றுகிறது. ” என்று பேசினார்.

”ப்ளு ஸ்டார்” படத்தின் நாயகன் அசோக்செல்வன் பேசும் போது,

இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெசல், ரொம்பவே பெர்ஷனலும் கூட.. ஏன் என்று கேட்டால் இந்தக் கதையா..?? இல்லை இக்கதையில் இருக்கும் அரக்கோணம் மக்களா.. ?? அவர்களின் வாழ்க்கை என் வாழ்க்கையோடு ஒத்துப் போனதா..? என்று சொல்லத் தெரியவில்லை. வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் யாரும் அரவணைத்து ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டாரக்ளா.. என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ப்ளு ஸ்டார் நம்பிக்கையை கொடுத்து, ஜெயிக்கிறோம் என்கின்ற உத்வேகத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது. ப்ளூ ஸ்டார் திரைப்படம் எனக்கு அத்தனையையும் கொடுத்திருக்கிறது. நான் வாழ்ந்த வாழ்க்கையை திரையில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மனைவியை கொடுத்திருக்கிறது. சிலர் பேசுவதற்கும் செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. பா.ரஞ்சித் அவர்கள் என்ன பேசுகிறாரோ.. அது போலவே நடப்பவர். அந்த மாதிரியான மனிதர்களை நான் பார்த்ததில்லை.
அவரை சூது கவ்வும் சக்சஸ் பார்ட்டியில் முதன் முறையாக பார்த்தேன். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். அன்று எப்படி இருந்தாரோ இன்றும் அதே போல் தான் இருக்கிறார். கோவிந்த் வசந்தா எங்கள் வாழ்க்கைகான மிகச் சிறந்த ஆல்பத்தைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். எந்தப் பட்த்தின் ஆடியோ வெளியீட்டிலும் நான் இவ்வளவு பேசியதில்லை. இப்படத்தில் நான் பேசுகிறேன் என்றால், இப்படத்தை நான் மிகவும் ஸ்பெஷலாக உணர்வதால் தான். எனக்கே சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை நான் போன ஜென்மத்தில் அரக்கோணத்தில் பிறந்திருப்பேனோ என்று. என்னுடன் நடித்த சாந்தனு மற்றும் ப்ருத்வி இருவருமே எனக்கு சகோதரகள் போன்றவர்கள். சக்திவேலன் கூறியது போல் நாங்கள் இருவரும் மூன்றாவது வெற்றிக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த வெற்றியை ப்ளூ ஸ்டார் கண்டிப்பாக கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்கும் எங்கள் படக்குழுவிற்கும், சக்திவேலன் அவர்களுக்கும் இருக்கிறது. எப்போதும் போல் பத்திரிக்கை நண்பர்களான உங்களின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்” என்று பேசினார்.

படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசும் போது,

அனைவருக்கும் நன்றி, ஸ்பெஷல் தேங்க்ஸ் டூ அறிவு. எனக்கு கம்போசிங்கில் நிறைய உதவிகள் செய்தார். ரஞ்சித் சார் படங்களில் நானும் இருப்பது எனக்கு மிகவும் பெருமை. இப்படத்தின் கம்போசிங் எனக்கு மிகவும் ஜாலியாக இருந்தது. ஜெயக்குமார் மிகச்சிறந்த மனிதர். இப்பட்த்தின் பின்னணி இசையை மிக ஜாலியாக உருவாக்கினோம். இப்படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

”ப்ளூ ஸ்டார்” படத்தின் இயக்குநர் ஜெயக்குமார் பேசும் போது,

எனக்கு மேடையில் பேச வராது. எடிட்டர் செல்வாவிடம் நேற்று கூட கண்டிப்பாக நான் வரணுமா.. இல்லை அப்படியே ஓடிவிடவா..?? என்று கேட்டேன்.. பதட்டத்தில் இப்பொழுது தயாரிப்பாளரின் பெயரைக் கூட மறந்துவிட்டேன். இது இசை வெளியீடு என்பதால் கோவிந்த் வசந்தாவிடம் இருந்து துவங்குகிறேன். அவரோடு பணியாற்றியது மிகச்சிறப்பான அனுபவம். எனக்கு இசை குறித்தெல்லாம் பெரிதாக தெரியாது. சொல்லப் போனால் எதுவுமே தெரியாது. எல்லாம் நான் கற்றுக் கொண்டது ரஞ்சித்திடம் இருந்து தான். ரஞ்சித் என் பக்கத்தில் இருப்பதால் சற்று தைரியமாக இருக்கிறது. இக்கதை என் பெர்ஷ்னல் லவ் ஸ்டோரி என்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. என்னைப் பார்த்தெல்லாம் யாரும் “ஒரு விஷயம் உன்னை அழ வைக்கிறது என்றால், அந்த விஷயத்திற்கு நீ உண்மையாக இருக்கிறாய் ” என்று சொன்னதில்லை. இப்படத்தை பொறுத்தவரை அறிவு மற்றும் கோவிந்த் வசந்தா இருவரும் பக்க பலமாக இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி. எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பனும் எங்கள் படத்தின் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்துக்கு அன்பும் நன்றியும் ” என்று பேசினார்.

இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் அவர்கள் பேசும் போது

இயக்குநர் ஜெய் இந்த இடத்தில் இந்த மேடையில் இருப்பது, பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயக்குமார் எந்தளவிற்கு எமோஷ்னலாக இருக்கிறானோ அதே அளவிற்கு நானும் எமோஷ்னலாக இருக்கிறேன். இப்படத்தின் தயாரிப்பாளர் கணேஷமூர்த்தி சாருக்கு மகிழ்ச்சி. எங்கள் தயாரிப்பில் உருவாகும் படங்களில் எப்பொழுதும் ஏதாவது பிரச்சனைகள் இருக்கும். ஆனால் சென்சாருக்கு சென்ற படம் ரிவைசிங் கமிட்டிக்கு போய் திரும்பி வருவது இது ஒன்று தான். யுஏ தந்திருக்கிறார்கள். எடிட்டர் செல்வா ஒரு கமர்ஸியல் எடிட்டர். அவன் இப்படம் கமர்ஸியலாக வெற்றி பெறும் என்று கூறினான். பார்க்கலாம். இப்படத்தில் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த உழைப்புக்கு ஏற்ற வெகுமதி வாழ்த்துக்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்படம் மிகச்சிறப்பான படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஜெயக்குமார் எப்படி மியூசிக் வாங்கப் போகிறான் என்று நினைத்தேன். நான் தான் இசை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்ரு கூறிவிடு, அவர் வேறு ஒன்று தருவார் என்று சொல்லி அனுப்பினேன். ஆனால் ஜெய் மற்றும் கோவிந்த் வசந்தாவிற்குமான அன்பும் பிணைப்பும் புரிதலும் மகிழ்ச்சியளிக்கிறது. மிகச்சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. இன்று அவரின் பாடல்கள் ப்ளூ ஸ்டார் படத்தின் முகவரியாக மாறி இருக்கிறது. அந்த உழைப்பிற்கு நன்றி.
நான், இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் தினகர் மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரு Entrance தேர்வுக்கான மையத்தில் படிக்கப் போகும் போது தான் பழக்கம் ஏற்பட்ட்து. கல்லூரியில் படிக்கும் காலத்தில் முதலாண்டில் நான் இயக்குநராக வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் ஜெயக்குமாரும் தினகரும் அனிமேட்டராக வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
பின்னர் நான் உதவி இயக்குநராக பணியாற்றும் பொழுது, அவர்கள் இருவரும் சம்பாதிக்கத் துவங்கிவிட்டார்கள். பின்னர் நான் கபாலி படம் செய்யும் போது, தினகர் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்தான். நான் மிகவும் கோபப்பட்டேன். நீ அனிமேட்டராக வேண்டும் என்றுதானே நினைத்தாய் என்று கேட்டேன். இல்லை நான் இயக்குநராக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். அதனால் அவனை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டேன். பின்னர் ஜெயக்குமார் என்னிடம் காலா திரைப்படத்தில் வந்து சேர்ந்து கொண்டான். என் நண்பர்கள் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வந்த பொழுது நான் அசெளகர்யமாக உணர்ந்தேன். ஏனென்றால் மற்ற உதவி இயக்குநர்களிடம் வேலை வாங்குவது போல் அவர்களிடம் வேலை வாங்க தயக்கமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்காமல் பிற உதவி இயக்குநர்களை எப்படி நடத்துவேனோ அது போலவே அவர்களையும் நடத்தினேன்.
அவர்களும் அதை புரிந்து கொண்டனர். ஜெயக்குமார் இயக்கிய டாக்குமெண்ட்ரியை பார்ததும் மிரண்டு விட்டேன். அவனை நீ சீக்கிரமே படம் செய் என்று உற்சாகப்படுத்தினேன். ஆனால் அவனிடம் இருந்து நான் வேறு மாதிரியான படைப்பைத் தான் எதிர்பார்த்தேன். அவன் தன் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு கமர்ஸியல் லைனில் ஒரு படம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் வாழ்க்கையில் இப்படி ஒரு காதல் இருந்தது, ப்ருத்வி செய்த கதாபாத்திரம் தான் ஜெயக்குமார் என்பதெல்லாம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் அவனுக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கமாட்டோம். கல்லூரியில் அவனைப் பார்க்கவே பயமாக இருக்கும். என்ன சொன்னாலும் கோபித்துக் கொள்வான். அவனை சமாதானப்படுத்தவே மூன்று நாட்கள் ஆகும்.
எப்பொழுதும் சுவற்றில் கைகளால் குத்திக் கொண்டு குங்ஃபூ பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பான். தினகரும் விரைவில் அவன் எடுத்து வரும் படத்தின் வெளியீட்டு விழாவில் உங்களை சந்திப்பான். கீர்த்தி பாண்டியன் மிக தைரியமாக மேடையில் பேசி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். இன்று நம் நாடு மிக மோசமான காலகட்ட்த்தை நோக்கிப் போய் கொண்டு இருக்கிறது. அதைத் தடுப்பதற்கு எவ்வளவு தூரம் திரைப்படக் கலையைக் கொண்டு போராட முடியுமோ, நாமெல்லாம் இணைந்து அதற்காக போராடுவோம். படத்தில் நடித்த பிற கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும். மகிழ்ச்சி.” என்று பேசினார்.

Categories
Cinema News Press Meet Videos

‘Por Thozhil’ Movie Thanks Giving Meet | Sarathkumar, Ashok Selvan, Nikhila Vimal

*போர் தொழில் திரைப்பட வெற்றி விழா!*

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், எப்ரியஸ் ஸ்டுடியோ எல்எல்பி, E4 எக்ஸ்ப்ரிமண்ட்ஸ் எல் எல் பி ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடிப்பில் வெளியான பரபரப்பான சைக்கோ திரில்லர் படம் “போர் தொழில்”. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளை திருவிழாக்கோலமாக மாற்றியிருக்கிறது. இன்று வரையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையரங்குகளை ஆக்கிரமித்திருக்கும் இப்படத்தின் வெற்றி விழா, இன்று சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் சுனில் பேசுகையில், ” போர் தொழில் டிரெய்லர் வந்தபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் எனச் சொன்னேன். 30 நாட்களைக் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. விக்னேஷ் ராஜா மிக அற்புதமான படத்தைத் தந்துள்ளார். அசோக் செல்வன், சரத்குமார் நல்ல நடிப்பைத் தந்துள்ளார்கள். இது தமிழில் எங்களுக்கு அறிமுகப்படம். ஒரு நல்ல தரமான படத்தைத் தந்தது மகிழ்ச்சி. உங்கள் ஆதரவால் தான் இந்தப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. ”என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், ” இந்தப் படம் எங்களுக்கான வெற்றி மட்டும் இல்லை, தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது, நல்ல படத்திற்கு ரசிகர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். அது போல இந்த படத்திற்கும் ஆதரவு கொடுத்தீர்கள். நன்றி, படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது, இது ஒரு சாதாரண விஷயமில்லை, அது மட்டுமல்ல.. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் எங்களுக்கு நன்றி கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது , இயக்குநர் ஒரு அசாத்திய வெற்றியைக் கொடுத்து விட்டு அமைதியாக அமர்ந்துள்ளார், இவர் கண்டிப்பாக ஒரு சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் ஆச்சரியம் இல்லை , தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நன்றி. அவருக்குத் தேவையான வெற்றியை இப்படம் கொடுத்துள்ளது, பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான E4 எக்ஸ்ப்ரிமெண்ட்ஸ் எல் எல் பி முகேஷ் R மேத்தா பேசுகையில், ” உங்கள் அனைவருக்கும் நன்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். அடுத்ததாக ரசிகர்கள் அவர்கள் படத்தின் டிவிஸ்ட்டை உடைக்காமல் படத்தைப் பாராட்டி, வரவேற்பு தந்தார்கள். அசோக் செல்வன், சரத்குமார் அவர்களின் கதாபாத்திரத்தைப் புரிந்து அட்டகாசமாக நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா மிக அற்புதமாக இப்படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி இருந்தாலும் நல்ல கதைகள் கண்டிப்பாக ஓடும், மக்கள் திரையரங்கத்திற்கு வருவார்கள் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. தொடர்ந்து இது மாதிரி நல்ல படங்களைத் தருவோம் நன்றி” என்றார் .

ஒளிப்பதிவாளர் கலைச் செல்வன் பேசுகையில், ” நான் பாலு மகேந்திரா சாரின் கல்லூரியில் படித்தேன், அவர் எப்போதும் சொல்வது ஒரு வார்த்தை தான், ‘படத்தின் ஸ்கிரிப்ட் தான் படத்தைத் தாங்கும்’ என்று சொல்வார், அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, விக்னேஷ் தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருந்தார், அவரின் பார்வை தான் இந்தப்படம், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார் .

விநியோகஸ்தர் தீபா பேசுகையில், ”
எனக்கு முகேஷ், அசோக் செல்வனைப் பல காலமாகத் தெரியும். இந்தப்படம் எங்களிடம் வந்த போதே, இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும் எனத் தெரியும். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் தொடர்ந்து நல்ல படங்களைத் தந்து வருகிறார்கள். இந்தப்படத்தைச் சின்ன சின்ன நாடுகளில் கூட எங்களால் விநியோகம் செய்ய முடிந்தது. படத்திற்கான வரவேற்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. இப்படம் இன்னும் யூகே வில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. அசோக் செல்வன், சரத்குமார் இருவரும் தங்கள் முழு ஒத்துழைப்பைத் தந்தார்கள். தொடர்ந்து படத்தை புரமோட் செய்தார்கள். நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. தொடர்ந்து நல்ல படங்களைத் தருவோம் நன்றி” என்றார்.

நடிகர் தேனப்பன் பேசுகையில், ” இந்த கம்பெனியை பற்றி நான் பெரிதும் கேள்விப் பட்டதில்லை. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும், படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர், இயக்குநரின் மனைவி எங்கள் அனைவருக்கும் ஒரு வாழ்த்து கடிதம் எழுதினார். அது எனக்கு மறக்க முடியாத தருணம், இயக்குநர் தனக்குத் தேவையானது கிடைக்கும் வரை விட மாட்டார், அது தான் அவருக்கு இப்படி ஒரு வெற்றியைக் கொடுத்துள்ளது, கண்டிப்பாக அவர் நல்ல நல்ல படங்களை எடுப்பார். அவருக்கு எனது வாழ்த்துகள், படக்குழு அனைவருக்கும் நன்றி” என்றார்.

பாடலாசிரியர் & எழுத்தாளர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ”தயாரிப்பாளருக்கு நன்றி. இதை ஒரு வியாபாரமாகப் பார்க்காமல் ஒரு படமாக நம்பி இந்தப் படத்தை உருவாக்கியதற்கு நன்றி, இந்தப் படத்தில் ஒரே ஒரு பாடல்தான். அது படத்தின் இறுதியில் வரும். அதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி, இதை நான் நன்றி கூறும் மேடையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

எழுத்தாளர் ஆல்ஃபிரட் பிரகாஷ் பேசுகையில், ” நிறைய மீம்கள் போர் தொழில் சம்பந்தமாக இணையத்தில் வந்தது. படத்தை மிகப்பெரிய வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இவ்வளவு பெரிய வரவேற்பைத் தந்த உங்கள் அனைவருக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்” என்றார்.

ஒலிக்கலவை பொறியாளர் ஹரி பேசுகையில், ” திரில்லர் படத்திற்குத் தேவை சவுண்ட் மிக்ஸிங் தான். இந்தப் படத்தில் இயக்குநருக்கு அதில் ஒரு தெளிவு இருந்தது. எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், ” ஒரு நாள் மிட் நைட் அசோக் செல்வன் போன் செய்தார். ‘பிரதர் நான் போர் தொழில் என்று ஒரு படம் செய்கிறேன். படத்தில் ஒரே ஒரு பாடல் தான். ஆனால் நீங்கள் இந்தப்படத்துடன் இணைய வேண்டும்’ என்றார். டிரெய்லர் பார்த்தவுடனே இந்தப்படம் நல்ல படமாக இருக்குமெனத் தோன்றியது. பொதுவாக அறிமுக இயக்குநர் படங்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம். இந்த வருடம் ‘டாடா’ , ‘குட் நைட்’ படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் இணைந்தது மகிழ்ச்சி. அசோக் செல்வனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை லிசா சின்னு பேசுகையில், ” முதல் முறையாக நான் ஒரு மேடையில் நிற்கிறேன். மிகவும் பெருமையாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பல நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர், பத்திரிக்கையாளர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் தான் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள், இயக்குநர் விகனேஷ் ராஜா என்னைத் தேர்வு செய்யும்போதே சொன்னார். இது சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமென்று சொன்னார். அது நடந்து விட்டது, அதற்கு நன்றி , படக்குழு அனைவருக்கும் நன்றி” என்றார்.

சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு பேசுகையில், ” தேனப்பன் சார், என்னைக் கஷ்டப்படுத்தி விட்டார்கள் என்றார். என்னையும் கடுமையாக கஷ்டப்படுத்தினார்கள். நான் வேலை பார்த்த மலையாள படத்தைப் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். இயக்குநர் பிழிந்தெடுத்துவிட்டார். ஆனால் படத்தை அற்புதமாக உருவாக்கினார். படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சுந்தர் பேசுகையில், ” விக்னேஷ் சார் என்னைக் கூப்பிட்டுப் பேசியபோது என்னை நடித்துக் காட்டச் சொன்னார். நான் நிறையப் படங்கள் செய்துள்ளேன் என்றேன். ஆனால் எனக்காகச் செய்து காட்டுங்கள் என்றார். அப்போதே என்னை பெண்டு நிமிர்த்த ஆரம்பித்து விட்டார். சரத்குமார் சார் சிரிக்காமல் நடித்த ஒரே படம் இது தான். அவரால் சிரிக்காமல் இருக்க முடியாது. இப்படத்தில் அவரை பார்த்து ரசித்தோம். படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றி” என்றார்.

நடிகர் ஹரீஷ் பேசுகையில், ” படம் ரிலீஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரண்ட்ஸ் என்னைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். நான் நடித்ததில் மிக வித்தியாசமான கேரக்டர் இது தான். என் பெற்றோருக்குப் பிடித்த படம் இது தான். என்னைப் போன்ற புதுமுகத்துக்கு திறமையை மதித்து இம்மாதிரி கேரக்டர் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த மாதிரி படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு நன்றி” என்றார்.

நடிகை நிகிலா விமல் பேசுகையில், ” இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக இருந்தது, இந்தப் படத்தின் மூலம் பலருக்கு நான் அறிமுகமாகியுள்ளேன், படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி , இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்குத் தூக்கமே இல்லை. படம் முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் இருந்தது, எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அசோக் மற்றும் சரத்குமார் சாருக்கு மிகவும் நன்றி. படப்பிடிப்பில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள், இந்த கதாபாத்திரத்தை எழுதிய இயக்குநருக்கு நன்றி, E4 என்டர்டெயின்மென்ட் இன் முதல் படத்தில் நான் இருந்தேன். அதே போல் இந்தப் படமும் வெற்றி என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,
ஊடக பத்திரிக்கையாளர் அனைவருக்கும் என் நன்றி” என்றார்.

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ”இது சக்ஸஸ் மீட் என்பதை விட தேங்ஸ் மீட் என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் இப்படத்தை தங்கள் படமாகக் கொண்டாடினார்கள். ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தைப் போட்டுக்காட்டினோம். யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விடுவார்களோ..! என்ற பயம் இருந்தது. ஆனால் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், பாஸிட்டிவான விமர்சனம் தந்தார்கள். உங்கள் எல்லோர்க்கும் நன்றி. கடந்த வருடம் நிறையப் படங்கள் செய்தேன். படம் நல்ல படமென்றாலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகவில்லை. எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் செய்கிறோமா..? என கேள்வி வந்தது. அதற்கெல்லாம் பதிலாக இந்தப்படம் வந்துள்ளது. எல்லோரும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சரத்குமாருடன் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. விக்னேஷ் ராஜாவை அனைவரும் பாராட்டுவதைக் கேட்கும்போது, நண்பனாக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனோடு குறும்பட காலத்திலிருந்து பழகி வருகிறேன், தான் என்ன எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பான். அவன் இன்னும் உயரம் செல்வான். தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு படம் எடுத்ததற்கு நன்றி. ஒரு வசனம் சொல்லி முடிக்கிறேன், இந்தப்படத்தில் ஒரு வசனம் வரும் “உன் வேலையைச் சரியா செஞ்சா மரியாதை தானா வரும்” அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”விக்னேஷ் ஒரு நல்ல இயக்குநராக வருவார் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதை விடப் பெரிய இயக்குநராக வந்து விட்டார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இயக்குநர் அனைவரையும் செதுக்கி இருந்தார். தனக்குத் தேவையான கதாபாத்திரத்தை அப்படியே கொண்டு வந்துள்ளார். இயக்குநர் ஒரு ஹாலிவுட் தரத்தை இப்படத்திற்குக் கொடுத்துள்ளார். இந்தப் படமும் ஹாலிவுட் பட வெற்றி போலப் பல நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் இன்றும் பல திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக இது ஒரு புதிய சாதனை படைக்கும். விக்னேஷ் நமக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். அசோக் ஒரு நல்ல நடிகர் மற்றும் நடிகை நிகிலா அருமையாகத் தனது கதாபாத்திரத்தை நடித்துள்ளார். படக்குழு அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை நம்பி படமாக்கியதற்கு நன்றி. ஒளிப்பதிவாளர் மிகவும் அற்புதமாகப் பணி செய்துள்ளார். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி எனக்குக் கிடைத்துள்ளது. படக்குழு அனைவருக்கும் நன்றி. இதையெல்லாம் தாண்டி பத்திரிக்கையாளர்கள் உங்களுக்குத்தான் மிகவும் நன்றி கூற வேண்டும். உங்களின் கருத்துதான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் நன்றி” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில், ” என்னோட முதல் நன்றி தயாரிப்பாளர்களுக்கு தான். இந்தகதையை கேட்டு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. அப்ளாஸ் படம் ஒப்பந்தமானவுடன் படத்தை கமர்ஷியல் ஆக்குகிறோம் என கெடுக்காமல், நீங்கள் நினைத்ததை.. எழுதியதை… எடுங்கள் என்றார்கள். அறிமுக இயக்குநருக்கு இது எவ்வளவு பெரிய வரமென்பது உங்களுக்கு புரியும். யுவராஜ் பம்பரமாக சுழன்று வேலை செய்தார். சக்திவேல் சார் ஒவ்வொரு படத்தையும் பக்காவாக டிசைன் செய்கிறார். அவருக்கு நன்றி. தீபா மேடமுக்கு நன்றி. எடிட்டர் ஶ்ரீஜித் சாரங் மிக அட்டகாசமாக செய்துள்ளார். இசையில் ஜேக்ஸ் பிஜாய் மிரட்டியிருந்தார். அவர் தான் அடம்பிடித்து படத்தின் கடைசியில் பாட்டு வைத்தார். இப்போது அந்த பாட்டில்லாமல் அந்தப்படத்தை நினைக்க முடியவில்லை. சவுண்டிங்கில் மிரட்டி விட்டார். படம் முழுக்க அதன் உணர்வை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது இசையும் சவுண்டும் தான். அதை மிகச்சிறப்பாக செய்தார்கள். இந்தப்படத்தில் உழைத்த அத்தனை பேரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை 2010 ல் நடப்பதாக எடுத்தோம். அதற்கான சிஜி படம் முழுக்க இருக்கிறது. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் எல்லோருக்கும் நன்றி. ஆல்ஃபிரட்டையும் என்னையும் தனியாக மனதில் பிரித்து பார்க்க முடியவில்லை. நாங்கள் இருவருமே ஒரே ஆள் தான். இப்படி ஒரு ரைட்டர் கிடைப்பது வரம். நிகிலா விமல் கேரக்டர் அவர் கதையில் இல்லாத பலத்தை நடிப்பில் கொண்டு வந்தார். அசோக் செல்வன் காலேஜ் படிக்கும் போதிருந்து தெரியும், அப்போதே யாராவது குறும்படம் எடுத்தால் ஓடிப்போய் நடிப்பான். அப்போது அவன் ஏற்படுத்திய நெட்வொர்க் இப்போது எல்லோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இன்னும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்துவான். சரத்குமார் சாரை நன்றாக நடிக்க வைத்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 150 படத்தில் நடித்தவருக்கு என்ன சொல்ல முடியும்… இந்தப்படத்தில் செய்தது எல்லாமே அவரே செயத்தது தான். என்னை விட அவருக்கு தான் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. சரத்பாபு சார் முதலில் நடிப்பாரா ?, அவருக்கு புரியுமா? என்று பயமாக இருந்தது. ஆனால் அவர் மிக அப்டேட்டாக இருந்தார். அவர் கேட்ட கேள்வியால் படத்தில் சில பகுதிகளை மாற்றி எழுதினோம். அவர் படம் பார்க்க முடியாதது வருத்தம். இறுதியாக ஊடகங்களுக்கு ரெண்டு நாள் முன்னரே படத்தை போட்டுக்காட்டலாம் என்ற போது… யாராவது டிவிஸ்ட்டை உடைத்து விட்டால்..! என்ற பயம் வந்தது. சக்தி சார் அப்படி செய்ய மாட்டார்கள் என்றார். அதேபோல் ஒருவர் கூட டிவிஸ்ட்டை உடைக்காமல், படம் பிரீமியர் ஆனவுடனே இணையத்தில் படத்தை பற்றி புகழ்ந்து எழுத ஆரம்பித்து விட்டார்கள். விளம்பரம் செய்யாத ஒரு படம், பத்திரிக்கை விமர்சனங்களால்.. ரசிகர்களால் ஓடும் என்பதற்கு இந்தப்படம் உதாரணம். அனைவருக்கும் நன்றி” என்றார்.