Categories
Cinema News

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம் ‘ படத்தின் தொடக்க விழா

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம் ‘ படத்தின் தொடக்க விழா

வி ஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் ‘டயங்கரம்’ படத் தொடக்க விழா


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘டயங்கரம்’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது.

நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும்’ டயங்கரம்’ எனும் திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராகவும், அஸார் நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. அத்துடன் படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தத் திரைப்படம் இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றும், காமெடி, எமோசன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடித்தல் உள்ளிட்ட இளைஞர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக ‘டயங்கரம் ‘ இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.‌

படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் – வி‌ ஜே சித்து- இளவரசு கூட்டணியில் வெளியான இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ – இணையத்தில் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VELS FILM INTERNATIONAL LAUNCHES ‘DAYANGARAM’ – DIRECTORIAL DEBUT OF VJ SIDHU

Chennai, India: The grand launch ceremony of “Dayangaram”, produced by Vels Film International under the banner of Dr. Ishari K. Ganesh, was held with grandeur at L.A. Studio, Nungambakkam, Chennai.

The film marks the directorial debut of popular digital star and ‘Dragon’ fame actor VJ Sidhu, who also plays the lead role in this exciting new venture titled “Dayangaram.”

The film features a stellar ensemble cast including Natti Natraj, Kali Venkat, Ilavarasu, Nithin Sathya, Harshath Khan, and Adithya Kathir, among others in prominent roles.

Technical Crew:
Director & Lead Actor: VJ Sidhu | Producer: Dr. Ishari K. Ganesh (Vels Film International) | Cinematography: P. Dinesh Krishnan | Music: Sidhu Kumar | Editor: Pradeep E. Raghav | Costume Designer: A. Keerthi Vasan | Choreographer: Azhar

Rooted in the lifestyle and aspirations of today’s youth, “Dayangaram” is a comedy-entertainer filled with humor, emotions, and the spirit of self-discovery. The film aims to strongly resonate with the younger generation while providing wholesome entertainment for all audiences.

The music of the film will be released under the Vels Music International label.

Speaking about the project, the team shared that “Dayangaram” will capture the vibrant energy, humor, and heartfelt emotions of modern youth, promising a refreshing cinematic experience.

The launch event witnessed the presence of several notable personalities from the Tamil film industry, who extended their best wishes to the Dayangaram team for a successful journey ahead.

Further updates regarding the shooting schedule and theatrical release will be officially announced soon by the production team.

Meanwhile, the official announcement video featuring Vels Film International Producer Dr. Ishari K. Ganesh, VJ Sidhu and Ilavarasu has already crossed over 3 million views online, creating remarkable buzz ahead of the film’s release.

Categories
Cinema News

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், நம் மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த, ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் பல ஆச்சரியமான தகவல்களுக்கு காத்திருங்கள்!

Press Note

Vels Film International Limited is proud to announce its next ambitious project starring the iconic actor Chiyaan Vikram and directed by the acclaimed filmmaker Prem Kumar. Known for his profound storytelling and emotional depth, Prem Kumar teams up with Chiyaan Vikram, celebrated for his versatile performances, to create what promises to be an extraordinary cinematic experience.

Produced by Dr. Ishari K. Ganesh under the prestigious banner of Vels Film International Limited, this upcoming film is expected to blend powerful storytelling with stellar performances, further enriching Tamil cinema. More details regarding the title, cast, and crew will be revealed soon.
Stay tuned for further updates.

Categories
Cinema News

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் “டயங்கரம்” விஜே சித்து எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் “டயங்கரம்” விஜே சித்து எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தனது அடுத்த பெரும் முயற்சியாக விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமைப்படுகிறது.

*டயங்கரம் ” என்கிற இந்தப் படம் விஜே சித்துவின் யூடியூப் வீடியோக்களில் பிரபலமாக பயன்படுத்திய வசனத்தை தலைப்பாக கொண்டுள்ளது. அந்த வார்த்தைக்கு இப்போது திரையில் புதிய பரிமாணத்தில் அதிரடியும் உணர்ச்சி கலந்த கலகல காலேஜ் கேம்பஸ் குரலாக உருவாகிறது.

தனது துள்ளலான பேச்சுத் திறன் யூத் கனெக்ட் மற்றும் சமூக ஊடகங்களில் அசைக்க முடியாத பெர்சனாலிட்டி மூலம், விஜே சித்து தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். சினிமா இயக்குனராகவும் ஹீரோவாகவும் புதிய அவதாரம் எடுத்திருப்பது அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படிக்கல் ஆகும்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ் இந்த அறிவிப்பை தொடர்ந்து கூறியதாவது…
பிரதீப் ரங்கநாதன், ஆர் ஜே பாலாஜி போன்ற அறிமுக இயக்குனர்களையும் நடிகர்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது வேல்ஸ் நிறுவனத்தின் பெருமை. அதைப்போலவே இப்போது விஜே சித்துவை அறிமுகப்படுத்துவது உற்சாகத்தை தருகிறது. இன்றைய இளைஞர்களின் குரலாகவும் நேர்மையான அழுத்தமான என்டர்டெய்னராகவும் அவர் திகழ்வார்.

தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டு விஜே சித்து கூறியதாவது…
சினிமா எப்போதுமே எனது கனவு. எப்போது எப்படி என்று தெரியவில்லை ஆனால் ஒருநாள் கண்டிப்பாக அடையப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு வந்தேன், யூடியூப்-காக வீடியோஸ் எடுக்கிற இடத்தில் இருந்து செட்டில் ஆக்சன் சொல்ற இடத்துக்கு வந்திருக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது. “டயங்கரம் “ஒரு படம் மட்டும் இல்லை அது என் குரல், என் கோபம், என் ஸ்டைல், என் வாழ்க்கை, உங்களோட அதை நான் பகிர்ந்து கொள்வது ரொம்ப சந்தோசமா இருக்கு.
இந்த படம் தற்போது பிரி ப்ரொடக்ஷனில் உள்ளதாகவும் தற்போதைய நிலையில் மிக விரைவில் சூட்டிங் துவங்கவிருக்கிறது என்றும் வேல்ஸ் நிறுவனம் இதை ஒரு முழுமையான தியேட்டர்க்கான என்டர்டைனராக உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் மற்றும் ரிலீஸ் திட்டங்கள் போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

VELS FILM INTERNATIONAL ANNOUNCES ‘DAYANGARAM’ — VJ SIDHU’S
DIRECTORIAL DEBUT AND FIRST LEAD ROLE
Chennai, May 2, 2025:

Vels Film International Ltd., one of Tamil cinema’s most dynamic and forward-thinking production houses, is proud to announce its next major venture — ‘DAYANGARAM’, a film written, directed by, and starring VJ Sidhu in his debut as both filmmaker and lead actor.

Titled after the viral word popularised by Sidhu through his YouTube videos, ‘DAYANGARAM’ now finds new meaning on the big screen — a lively, attitude-driven campus entertainer brimming with energy, humour, and emotion.

From hosting top-rated shows to becoming a digital phenomenon, VJ Sidhu has built a strong bond with today’s youth through his wit, honesty, and relatability. His leap to cinema has been long anticipated, and this project marks a major milestone in his creative evolution.

Dr. Ishari K. Ganesh, Chairman and Founder of Vels Film International, shared:
“Over the years, Vels has had the honour of introducing fresh talent into Tamil cinema. After successfully launching names like Pradeep Ranganathan and RJ Balaji, I’m proud to now present VJ Sidhu — a voice of today’s youth, a natural entertainer, and a promising new filmmaker.”

VJ Sidhu Says:
“Cinema has always been the dream. I never knew when or how it would happen — but I always knew I wanted to be part of it. From shooting
YouTube videos to calling ‘action’ on my own set, this journey has been filled with hustle, self-doubt, and countless late nights. DAYANGARAM isn’t just a film — it’s me. It’s my fun, my youth, my livelihood, my life. I can’t wait to share it with all of you.”
Currently in pre-production, the film is set to go on floors shortly. Backed by Vels Film International as a full-fledged theatrical entertainer, ‘DAYANGARAM’ promises to deliver a bold, vibrant, and culturally rooted cinematic experience — told through Sidhu’s unmistakably sharp and satirical lens.
Further announcements regarding the cast, crew, and release details will be shared in the coming weeks.

Categories
Cinema News

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் ‘சிங்கப்பூர் சலூன்’, ‘ஜோஷ்வா இமைப் போல் காக்க’, ‘பி டி சார்’ என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படம் தயாராகவுள்ளது. இதில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தை 2025 ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.