Categories
Cinema News

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“புருஷன்” திரைப்படத்தை Benzz Media Pvt Ltd சார்பில் A.C.S.அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து, பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். இப்படத்தை சுந்தர் சி இயக்க, விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, திரைப்பட வர்த்தக வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த படம், சுந்தர் சி – விஷால் கூட்டணி இணையும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுந்தர் சி – விஷால் – ஹிப்ஹாப் தமிழா கூட்டணி, முன்னதாக வெளியான “ஆம்பள” திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைவது, ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திரைக்கதை மற்றும் வசனம் – வெங்கட் ராகவன்.

சமீபத்தில் வெளியான “புருஷன்” படத்தின் அறிவிப்பு வீடியோ, அதிரடி மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் ரசிகர்களை கவர்ந்து, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. குறுகிய நேர வீடியோவிலேயே, சுந்தர் சி-யின் தனித்துவமான கமர்ஷியல் பாணி வெளிப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

இப்படத்தில் நாயகியாக தமன்னா நடிக்க, பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். “கமர்ஷியல் கிங்” சுந்தர் சி-யின் முத்திரையுடன், குடும்பத்தோடு ரசித்து கொண்டாடும் ஒரு முழுமையான கமர்ஷியல் எண்டர்டெயினராக புருஷன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், நடிகர்–நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Sundar C, Vishal and Hiphop Tamizha Join Together for a New Commercial Entertainer – Purushan!

The successful Sundar C – Vishal combination is back once again with a brand-new commercial entertainer titled Purushan, which is set to begin shooting very soon. The official announcement has created strong excitement among fans and within the Tamil film industry.

Produced by A. C. S. Arun Kumar of Benzz Media (P) Ltd, along with Khushbu Sundar under Avni Cinemax (P) Ltd, Purushan is directed by Sundar C and stars Vishal in the lead role. Popular musician Hiphop Tamizha has been roped in as the music director for the film. The project has now been officially announced, generating significant buzz across trade circles.

This marks the fourth collaboration between Sundar C and Vishal, a duo known for delivering successful commercial entertainers. Notably, the Sundar C – Vishal – Hiphop Tamizha combination reunites after their earlier film Aambala, further adding to the anticipation surrounding Purushan. Screenplay & Dialogues by Venkatt Ragavan

The recently released announcement video of Purushan impressed audiences with its energetic blend of action and comedy, quickly going viral on social media. Even in its brief runtime, the video clearly showcased Sundar C’s trademark commercial style, significantly raising expectations for the film.

The film features Tamannaah Bhatia as the female lead, while popular comedian Yogi Babu plays a key role. With the unmistakable stamp of “Commercial King” Sundar C, Purushan is being shaped as a full-fledged, family-friendly commercial entertainer, with the shoot expected to commence shortly. Further details regarding the cast and technical crew will be officially announced soon.

Categories
Cinema News

அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு அகில இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

அஜித், சூர்யா, தனுஷ், விஷால், அல்லு அர்ஜுன் என ஐந்து முன்னணி நடிகர்களின் படங்களோடு அகில இந்திய திரையுலகையே தன் இசையால் கலக்கும் தேவி ஶ்ரீ பிரசாத்

டிஎஸ்பி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், தனது அதிரடி மற்றும் ஆத்மார்த்த இசையால் தென்னிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே ஈர்த்து வருகிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத்தின் அதிரடி இசையில் உருவான ‘புஷ்பா’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் முதல் முறையாக ஒரே சமயத்தில் 5 மொழிகளில் ஹிட் அடித்தது இவரது முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களாலும் இவரது இசை ரசிக்கப்படுகிறது. வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இவர் புகழ் பெற்றிருப்பதே இதற்கு சான்று.

இந்நிலையில், 5 முன்னணி நட்சத்திரங்களில் திரைப்படங்களுக்கு இவர் தற்போது இசையமைத்து வருகிறார். அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’, சூர்யா நடிக்கும் ‘கங்குவா’, தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘குபேரா’, விஷால் நடிக்கும் ‘ரத்னம்’, மற்றும் ‘புஷ்பா’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா 2’ என்று தேவி ஶ்ரீ பிரசாத்தின் இசை ஆதிக்கம் நீண்டு கொண்டே செல்கிறது.

மேற்கண்ட ஐந்து திரைப்படங்களும் பிரபல இயக்குநர்களால் (குட் பேட் அக்லி – ஆதிக் ரவிச்சந்திரன், கங்குவா – சிவா, குபேரா – சேகர் கம்முலா, ரத்னம் – ஹரி, புஷ்பா 2 – சுகுமார்) இயக்கப்பட்டு, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன. வித்தியாசமான கதைக் களங்களோடு பன்மொழிகளில் பிரம்மாண்ட படைப்புகளாக இவை தயாராகி வருகின்றன. இவற்றின் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக இசையை தேவி ஶ்ரீ பிரசாத் வழங்கி வருகிறார்.

இந்து ஐந்து படங்களை தவிர பவன் கல்யாண் நடிப்பில் ‘ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ‘உஸ்தாத் பகத்சிங்’, நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிக்கும் ‘தாண்டேல்’, புதுமுகங்கள் நடிக்கும் ‘ஜூனியர்’ உள்ளிட்ட மேலும் பல திரைப்படங்களுக்கும் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு நின்று விடாமல் மக்கள் பெருமளவில் திரளும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பாடி தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை இவர் உற்சாகப்படுத்தி வருவதும் அனைவரும் அறிந்ததே.

இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் அதி தீவிர பக்தரான தேவி ஶ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவிற்கே இளையராஜா சமீபத்தில் நேரில் சென்று வாழ்த்தியது தேவி ஶ்ரீ பிரசாத்தை அளவில்லாத மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

“என்னுடைய இசைப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு மனமார்ந்த நன்றி. ஐந்து முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைக்கும் இந்த பெருமையான தருணத்தில் ரசிகர்கள் விரும்பும் இசையை தொடர்ந்து வழங்கி அவர்களை மகிழ்விப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்,” என்று தேவி ஶ்ரீ பிரசாத் கூறினார்.

RockStar #DeviSriPrasad who is rocking Indian film industry with his stunning music, signs films of South-Indian top stars 🌟

#UstaadBhagatSingh #GoodBadUgly #Kanguva #Kubera #Rathnam #Pushpa2TheRule #Thandel

@PawanKalyan #AjithKumar @Suriya_offl @dhanushkraja @VishalKOfficial @alluarjun @chay_akkineni

#Hari @directorsiva @aryasukku @sekharkammula @Adhikravi @harish2you @chandoomondeti

@ThisIsDSP @onlynikil

Devi Sri Prasad who is rocking Indian film industry with his stunning music signs films of five top stars- Ajith, Suriya, Dhanush, Vishal, Allu Arjun

Music composer Devi Sri Prasad, fondly called as DSP by his fans, is making huge waves not just in South India but in the entire Indian film industry with his riveting and soulful music.

‘Pushpa’ which had solid musical score by Devi Sri Prasad created a record after all its songs became chartbusters in 5 languages simultaneously, and the album is considered one of his major milestones. His music is enjoyed not only by fans in India and the diaspora accross the world but also by foreigners. His popularity in countries including Bangladesh is an open secret.

In a major development, DSP is currently composing music for the films of 5 leading stars. He has signed Ajith’s ‘Good Bad Ugly’, Suriya’s ‘Kanguva’, Dhanush’s ‘Kubera’, Vishal’s ‘Rathnam’ and Allu Arjun’s ‘Pushpa 2’.

All the above five films are directed by famous directors (Good Bad Ugly – Adhik Ravichandran, Kanguva – Siva, Kubera – Sekhar Kammula, Rathnam – Hari, Pushpa 2 – Sukumar) and bankrolled by leading production houses. These are being made as mega-budget movies in multiple languages with totally different storylines. Devi Sri Prasad is providing tailor-made music according to their needs.

Devi Sri Prasad is working on many other films including Pawan Kalyan-starrer ‘Ustad Bhagat Singh’ directed by Harish Shankar, Naga Chaitanya-Sai Pallavi-starrer ‘Thandel’ and ‘Junior’ with debutants besides these five films. It is well known that apart from composing music for films, he also participates in mega events and entertains the fans with his unique style of performance.

Devi Sri Prasad, who is an ardent admirer of maestro Ilaiyaraaja, is touched and delighted over the recent visit of the Isaignani to his studio.

“I am grateful to the fans and the film industry for their continued support in my music journey. I feel it is my duty to continue to entertain fans by giving them the music they love. I am proud of composing music for five major films,” says Devi Sri Prasad.

Categories
Cinema News

ஆட்டோக்களை திரையரங்கிற்குள் அனுமதிக்க வேண்டும் – விஷால் பேச்சு!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விஷால் நடிக்கும் கத்திசண்டை படத்தை தயாரித்து வருகிறார். படம் வருகிற 23 ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது…

முன்பெல்லாம் திரையரங்குகளில் அதிகமாக ஆடோக்காரர்கள் தான் முதல் காட்சி பார்பார்கள். பார்த்துவிட்டு அவர்கள் தங்கள் நண்பர்களிடமும் , தங்களது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடமும் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் போய் பாருங்கள் என்று சொல்வார்கள்.அதை கேட்டு திரையரங்குகளுக்கு கூட்டமும் வரும் படமும் நன்றாக போகும். ஆனால் இப்போது ஆடோக்களை தியேட்டர்களில் அனுமதிப்பதில்லை.
ஆனால் எங்கள் “ கத்திசண்டை “ படம் மூலம் அதற்க்கு ஒரு விடிவுகாலம் பிறக்க உள்ளது. நான் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் இந்த படத்தை வெளியிடும் கேமியே பிலிம்ஸ் ஜெயகுமார், படத்தின் இயக்குனர் சுராஜ் ஆகியோர் அனைத்து திரையரங்க உரிமையாளர்களிடம் கத்திசண்டை படத்திற்கு ஆட்டோக்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்குமாறு பேசி வருகிறோம். நிச்சயம் இது நடக்கும் என்றார்.