Categories
General News Press Meet Videos

வணிகர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி!

வணிகர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி!

யு.பி.ஐ. (UPI) பணப்பரிவர்த்தனை மீதான வரிவிதிப்பை எதிர்த்து, 12.10.2026 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, நமது மாநிலத் தலைவர் அன்பிற்குரிய A.M. விக்கிரமராஜா அவர்கள், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக, UPI தொடர்பான நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இன்று (13.10.2026) தகவல் வெளியாகியுள்ளது.


வணிகர்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து, முனைப்புடன் செயல்பட்டு வரும் நமது தென்பாண்டி சிங்கம் A.M. விக்கிரமராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

வணிகர் நலனே நமது இலக்கு! வணிகர் ஒற்றுமையே நமது பலம்!