Categories
Audio Launch Cinema News

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல் 

Samuthirakani-Thambi Ramaiah star in new Family Drama ‘Vinodhaya Sitham’, a ZEE5 Original Film from October 13

Directed by Samuthirakani

ZEE5 has consistently entertained fans with back-to-back top-notch quality content which included ‘Ka Pe Ranasingam’ ‘Madhil’ ‘Malaysia to Amnesia’ , “Dikkilona” and many more. ZEE5 has many more interesting projects in the pipeline for its subscribers.

ZEE5 is proud to announce their next original film, “Vinodhaya Sitham”, a Family Drama with its share of humour. The Original Film is slated to release this October 13th on ZEE5. Samuthirakani and Thambi Ramaiah play the lead roles in the film. The film is directed by Director/ Actor Samuthirakani himself and is produced by Abirami Ramanathan.

The film also stars Munishkanth, Sanchita Shetty and Jayaprakash. The camerawork is handled by Ace Cinematographer Ekambaram and the film is edited by Ramesh.

Samuthirakani – Director, Actor:
“Human minds behaves in a funny way. We cannot control them. This is the baseline of this Script. Every single person will connect with this film personally. This Script will converse with the Audience. Very thrilled to show this film to the viewers”

Munishkanth – Actor:
“I am very happy to be part of Samudrakani’s direction. This film will give me fame like my previous hit films Mundasupatti, Pasanga 2, maanagaram and maragadhanaanayam.

Thambi Ramaiah – Actor:
“This Story connects to all the masses. The Viewers will feel like completing a philosophical novel and they will love it.”

Sanchitha Shetty – Actress
“All the Parents and Kids will love this Movie totally. It will be a family entertainer and I cannot reveal any surprises about the movie at this stage. I am very excited about this film”

Abirami Ramanathan – Producer:
“Vinodhaya Sitham will be an answer to each and every single person who believes he is the only one who can take care of his family and all will be shattered after his loss. Very happy to collaborate with Zee5 on creating this original film”

A ZEE5 Original Film – ‘Vinodhaya Sitham’ is officially premiering on October 13th on ZEE5

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல் 

‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது. 

இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார். 

மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். 

சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையானமுறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின்கதையை  உணர்ந்துகொள்ளமுடியும். இந்த கதை பார்வையாளர்களுடன்உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்குகாண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார்

தம்பி இராமையாஅவர்கள், ‘இந்த கதை அனைத்துமக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலைமுடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார்.

முனிஸ்காந்த்அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார். 

சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாகவிரும்புவார்கள். இது ஒரு குடும்பபொழுதுபோக்காக இருக்கும். இந்தபடத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”. 

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனதுகுடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும்என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும்  தகுந்தபதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’.இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில்மிக்க மகிழ்ச்சி” என்றார்.

ஜீ5ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13  அன்றுஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது

Categories
Audio Launch Cinema News

முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம்

முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம்




மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்


2020 ல் ஜீ5 ‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’ ‘முகிலன்’ ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘மதில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சோசியல்-டிராமா படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். 

‘மதில்’ படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவை மேற்கொள்ள எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

“இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இதுவரை நான் குடும்ப படங்கள் அல்லது நகைச்சுவை படங்கள் தான் இயக்கியிருக்கிறேன். இப்போது தான் முதல் முறையாக சமூக படம் இயக்கியுள்ளேன். மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. பல சூழ்நிலைகளில் நமக்கு மேல் இருப்பவர்களின் அதிகாரத்தை கண்டு, அஞ்சி நாம் அமைதியாக இருந்து விடுகிறோம். இவற்றுக்கு எதிரான நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அவசியம் ‘மதில்’ படத்தில் விளக்கப்பட்டுள்ளது” என்று இயக்குனர் மித்ரன் ஜவஹர் கூறினார்.  

“இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான கதை இது. நமது மதில் சுவர்களை கஷ்டப்பட்டு  அலங்கரிக்கிறோம், தூய்மையாக வைத்திருக்கிறோம். ஆனால் வேறு யாரோ அதை பயன்படுத்துகின்றனர், சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை பற்றி படம் பேசுகிறது .” என்று மைம் கோபி கூறினார்

 “பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பு, அரசியல்வாதிகளுக்கு வகுப்பு, பொது மக்களுக்கு பொறுப்பு, களவாணி தனத்துக்கு மறுப்பு, காவல்துறைக்கு சிறப்பு, ‘தனக்கென்ன’ என்பவர்களுக்கு படிப்பு, திறமையானவர்களின் நடிப்பு, மொத்தத்தில் ‘மதில்’ ஒரு தில்லான படைப்பு.” 

மனசாட்சி சொல் படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் ‘மதில்’ “. என்று கூறினார் கே. எஸ்.  ரவிகுமார் அவர்கள்.

ஜீ5 ஒரிஜினல் படமான ‘மதில்’ ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது

KS Ravikumar stars in new Social Drama ‘Mathil’, a ZEE5 Original Film
Directed by Mithran Jawahar


In 2020, ZEE5 entertained fans with back-to-back top-notch quality content which included ‘Lock Up’ “Ka Pae Ranasingam’ ‘Mugilan” and many more. 2021 will be another blockbuster year with interesting projects in the pipeline for its subscribers.

ZEE5 is proud to announce their next original film, a hard-hitting social drama with Legendary Director KS Ravikumar in the Lead. Titled ‘Mathil’,  directed by Popular filmmaker Mithran Jawahar and is Produced by Singa Sankaran under SS Group.

The film also stars Mime Gopi, Madhumita, Kathadi Ramamurthy and Lollu Sabha Swaminathan. The camerawork is handled by G.Balamurugan, the film is edited by M.Thiyagarajan.

Director Mithran Jawahar  said, “Mathil speaks about an important issue. An issue that will relate to  everyone who work hard and build their houses from their savings. This is a special and challenging movie for me. I have till now done only family dramas or hilarious contents. This is the first time I am doing a movie on a social cause.  There are situations in life where we fear the power above us and back down. But the need to express our emotions and stand up for our rights is stressed in the film”.

Mime Gopi said, “Much needed content for the times. We take efforts to build our wall, decorate it, keep it clean. But random people come and use it for their own interests and even own it. I don’t know what will happen if we question their act. But we should. This is what Mathil speaks of” 

KS Ravikumar said, “ What is happening in our neighbourhood is shown in the movie. It is a lesson for politicians. Reminds us of our responsibility. A full stop to needless illegal acts and a salute to the police force. An eye-opener for the selfish who stay away.  In short, Mathil is a movie where a bold and responsible father faces a problem and overcomes it..”

A ZEE5 Original Film  – ‘Mathil’ is officially premiering on April 14th on ZEE5