Categories
Cinema News

கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது*

*சூர்யா சிவகுமார்,அஜய் தேவ்கன்,நாக சைதன்யா, ராஜ் பி.ஷெட்டி வெளியிட்ட ‘பாலன் தி பாய்’ டிரெய்லர்*

Trailer Link : https://youtu.be/l3II2wligeA?si=c0_K79WWbFMM547N

கேன்ஸ் திரைப்பட விழாவின் Marche du Film-ல் வெற்றிகரமான திரையிடலுக்குப் பிறகு, “பாலன் தி பாய்” படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அறிவிப்பு மற்றும் முதல் போஸ்டர் வெளியீட்டில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் டிரெய்லர், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களால் பல மொழிகளில் வெளியிடப்பட்டது.

அஜய் தேவ்கன் (இந்தி), சூர்யா சிவகுமார் (தமிழ்), நாக சைதன்யா (தெலுங்கு), ராஜ் பி.ஷெட்டி (கன்னடம்) ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் இந்தப் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்து, படத்திற்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

டிரெய்லர், அடையாளம், பொறுப்புணர்வு மற்றும் உயிர்பிழைப்பு ஆகிய ஆழமான மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தை பிரதிபலிக்கிறது. சஸ்பென்ஸ், உணர்ச்சி மற்றும் பரபரப்பு நிறைந்த இந்த டிரெய்லர், பார்வையாளர்களுக்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த பயண அனுபவத்தை அளிக்கிறது.

சிதம்பரம் இயக்கத்தில், ஜீத்து மாதவன் எழுதிய பாலன் தி பாய் திரைப்படம், தனித்துவமான கதைசொல்லல் பாணியைக் கொண்ட இரு புகழ்பெற்ற படைப்பாளர்களை இணைக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Suriya Sivakumar,Ajay Devgn,Naga Chaitanya and Raj B.Shetty extend their warm wishes to Balan The Boy trailer across languages; an emotionally charged journey of identity and survival set to release in theatres on 19th June*

_TRAILER OUT NOW_

_Link_ : https://youtu.be/l3II2wligeA?si=c0_K79WWbFMM547N

Ever since its successful showcase at the Marché du Film during the Cannes Film Festival, Balan The Boy has made a remarkable impact. The film has been generating curiosity ever since its announcement and the release of its first poster. As anticipation around the film continues to grow, leading stars from across the Indian film industry came together to unveil the trailer in multiple languages. Ajay Devgn, Suriya Sivakumar, Naga Chaitanya and Raj B.Shetty shared the trailer of the film in Hindi, Tamil,Telugu and Kannada respectively.

The actors took to their social media extending their best wishes to the trailer and the film. The trailer offers a glimpse into a deeply human and emotionally resonant cinematic experience rooted in themes of identity, belonging, and survival. Packed with suspense, emotion, and intrigue, the trailer promises a compelling and thought-provoking journey.

Directed by Chidambaram and written by Jithu Madhavan, Balan The Boy brings together two acclaimed storytellers known for their distinctive narrative voices, further building anticipation among audiences.

_KVN Productions and Thespian Films Present Balan The Boy. Directed by Chidambaram and written by Jithu Madhavan, the film is jointly produced by KVN Productions & Thespian Films. Balan The Boy releases in cinemas on 19th June 2026 in Malayalam, Hindi, Telugu, Tamil and Kannada.

Categories
Cinema News

க்ரைம் திரில்லர் படமாக “டெக்ஸ்டர்”,தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் வெளி வருகிறது

க்ரைம் திரில்லர் படமாக “டெக்ஸ்டர்”,தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் வெளி வருகிறது

சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனாக பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுப்பிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா ? என்று திகிலுடன் சமீபத்தில் வந்த ராட்சசன், போர் தொழில் படங்களின் வரிசையில் விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் திரில்லருடன்
மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குனர் சூரியன்.G.

ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ் S.V தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ள இப்படத்தை சூரியன்.ஜி
இயக்கியுள்ளார்.

ராஜீவ் கோவிந்த் மற்றும் அபிஷேக் ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

வில்லன்களாக ஹரிஷ் பெர்டி, நடிக்க அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு –
ஆதித்ய கோவிந்தராஜ்

இசை- ஸ்ரீநாத் விஜய்
பாடல்கள்- மோகன்ராஜன்

படத்தொகுப்பு-
ஸ்ரீனிவாஸ் பி.பாபு

சண்டை பயிற்சி- அஷ்ரப் குருக்கள் & கே.டி வெங்கடேஷ்
நடனம் – சினேகா அசோக்

மக்கள் தொடர்பு -வெங்கட்

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்ஸ் –
ஷார்வாக் V.N – ஹர்ஷா .N

கதை – சிவம்
தயாரிப்பு -பிரகாஷ் S.V
திரைக்கதை
வசனம் இயக்கம்-
சூரியன்.G

இப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ… என்ற மனதை வருடும் பாடலும்

மிளிரும் பின்னாலி சுழலும் விழிகாரி…எனும் துள்ளலிசை பாடலும் இடம்பெற்றுள்ளது.

இதன் படப்பிடிப்பு குடகு மலை,கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது.
நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரியில் வெளிவர திட்டமிடப்பட்டுள்ளது.

Categories
Cinema News

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார். “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில் தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள். சமீபத்தில் வெளியான ஃப்ரீ லுக் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் வெளியிட்டனர். கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார் வெளியிட்ட இந்த போஸ்டர், அத்வேயை டைட்டில் ரோலில், சுப்ரமண்யா என்று அறிமுகப்படுத்துகிறது. நீளமான முடி மற்றும் தாடியுடன், அத்வே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில், போஸ்டரில் அழகாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிக்கிறார். அவர் கண்களில் தீவிரம் தெரிகிறது. அவர் காட்டில் இருக்கிறார் மற்றும் ஒரு மர்மமான இடத்தின் நுழைவாயிலில் குண்டர்கள் அவரை துரத்துகிறார்கள். மாறுபட்ட வகையிலான இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

“சுப்ரமண்யா” திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் “சுப்ரமண்யா” பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் : அத்வே.

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பு நிறுவனம் : எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ்
வழங்குபவர்கள்: ஸ்ரீமதி பிரவீணா கடியாலா & ஸ்ரீமதி ராமலட்சுமி
தயாரிப்பாளர்கள்: திருமால் ரெட்டி & அனில் கடியாலா
இயக்குநர் : பி.ரவிசங்கர்
இசை: ரவி பஸ்ரூர்
ஒளிப்பதிவு : விக்னேஷ் ராஜ்
எடிட்டர்: விஜய் எம் குமார்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: உல்லாஸ் ஹைதூர் மக்கள் தொடர்பு : யுவராஜ்.

Kannada Superstar Dr. Shiva Rajkumar Launched Attention-grabbing First Look Of Advay, P Ravishankar, Thirumal Reddy, Anil Kadiyala, SG Movie Creations Pan India Film Subrahmanyaa

Popular actor and dubbing artiste P. Ravishankar is introducing his son Advay as a hero with his latest directorial venture “Subrahmanyaa”. Thirumal Reddy and Anil Kadiyala are bankrolling this socio-fantasy adventure prestigiously under the banner of SG Movie Creations. Smt Praveena Kadiyala and Smt Ramalakshmi present the movie which had its pre-look unveiled recently to superb response.

On the auspicious occasion of Vinayaka Chaturthi, the makers of Subrahmanyaa unveiled the film’s first look poster. The poster launched by Kannada superstar Dr. Shiva Rajkumar introduces Advay in the titular role as Subrahmanyaa. Sporting long hair and a beard, Advay looks handsome and elegant in the poster in a specially designed outfit, though he gives a serious gaze. We can see the intensity in his eyes. He is in jungle and at the entrance of a mysterious place with goons chasing him. The first look poster grabs everyone’s attention.

With 60% of production completed, post-production is actively underway at Red Chillies Studios in Mumbai. VFX and CGI work is also in progress at leading studios across Mumbai, Hyderabad, Bangalore, and Chennai.

The film boasts top-notch technical expertise, with music by Ravi Basrur (known for KGF and Salaar), cinematography by Vignesh Raj, editing by Vijay M Kumar, and production design by Ullas Hydur (Sapta Sagaradache and Charlie 777).

Subrahmanyaa is set for a Pan India release in Telugu, Kannada, Tamil, Malayalam, and Hindi.

Cast: Advay.

Technical Crew:
Banner: SG Movie Creations
Presents: Smt Praveena Kadiyala & Smt Ramalakshmi
Producers: Thirumal Reddy & Anil Kadiyala
Director: P.Ravishankar
Music: Ravi Basrur
DoP: Vignesh Raj
Editor: Vijay M Kumar
Production Designer: Ullas Hydur
PRO : Yuvraaj

Categories
Cinema News

உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது!

உகாதி ஸ்பெஷல் கொண்டாட்டமாக, ஏப்ரல் 12 முதல், நடிகர் விஸ்வக் சென்னின் “காமி” திரைப்படம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில், ZEE5 இல் திரையிடப்படுகிறது!

~ வித்யாதர் ககிதா இயக்கியுள்ள, காமி திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் ~

சென்னை, 3 ஏப்ரல் 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தெலுங்கு பிளாக்பஸ்டர் ‘காமி’ திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவித்துள்ளது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, இந்த தெலுங்குப் படம் ஏப்ரல் 12 முதல், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ZEE5 இல் பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளது. கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வி செல்லுலாய்டு வழங்க, அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதா எழுதி, இயக்கியுள்ள “காமி” திரைப்படத்தில், விஷ்வக் சென், சாந்தினி சௌத்ரி, அபிநயா, ஹரிகா பெடடா மற்றும் முகமது சமத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் வித்யாதர் ககிதாவின் தெலுங்கு படமான ‘காமி’ ஒரு உணர்ச்சிகரமான கதையையும், ஒரு அட்டகாசமான சினிமா அனுபவத்தையும் ஒருங்கே தரும் படைப்பாக அமைந்துள்ளது. விஷ்வக் சென் மற்றும் சாந்தினி சௌத்ரியின் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களின் வழியே, மனித மனத்தின் விசித்திரங்களைப் பேசுவதுடன், ஆத்மாவின் தேடலை ஆராய்வதோடு, வாழ்வின் காலக்கடிகரமாக, விந்தை காட்டும் படைப்பாக உருவாகியுள்ளது. இயற்கையை மாற்ற முயலும் மனிதகுலத்தின் முயற்சி, பேரழிவு விளைவுகளை உருவாக்கும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

காமி, ஷங்கரின் (விஷ்வக் சென்) பயணத்தை விவரிக்கிறது, மனித ஸ்பரிசத்தை உணர முடியாத ஒரு அரிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு அகோரி தான் ஷங்கர். துரோணகிரி மலையில் 36 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மர்மமான காளானான மாலிபத்ராவைத் தேடி அவர் செல்கிறார். வழியில், ஷங்கர் இதேபோன்று அந்த காளானைத் தேடும் நுண்ணுயிரியலாளர் ஜானவியை (சாந்தினி சௌத்ரி) சந்திக்கிறார். அவர்களின் விதி, இமயமலையின் பனிக்குளிரில் அவர்களை அலைக்கழிக்கிறது. இன்னொரு புறம் இந்தக்கதை இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு அம்சமாக அறியப்பட்ட தேவதாசி பாரம்பரியத்தின் பாதகங்களைப் பேசுகிறது. ஷங்கர், ஜானவி பயணம் வெற்றி பெறுமா ? ஏப்ரல் 12 ஆம் தேதி ZEE5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்.., “எங்கள் கடைசித் தெலுங்கு டிஜிட்டல் பிரீமியரான ஹனுமான் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, ZEE5 இல் நாங்கள் மற்றொரு திரையரங்க பிளாக்பஸ்டரான, காமி படத்தைக் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். இப்படத்தைத் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத்தில் தருவதன் மூலம் எங்கள் பிராந்திய பார்வையாளர்களை மகிழ்விப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து மொழிகளிலும் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதே எங்கள் நோக்கமாகும், பார்வையாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறந்த சினிமா அனுபவங்களைப் பெற வேண்டுமென்பதே எங்கள் விருப்பமாகும். காமி அதன் திரையரங்க வெளியீட்டின் போதே பார்வையாளர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தற்போதைய ZEE5 டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் பெரும் வரவேற்பைக் குவிக்குமென நம்புகிறோம்.

கார்த்திக் குல்ட் கிரியேஷன்ஸின் தயாரிப்பாளர் கார்த்திக் ஷபரீஷ் கூறுகையில்.., “ZEE5 உடன் இணைந்து காமியை 190+ நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் நாங்கள் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் படம் திரையரங்குகளுக்கு அப்பால் பார்வையாளர்களைச் சென்றடைவதைப் பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். திரையரங்க ஓட்டத்தின் போது ரசிகர்களிடம் இருந்து எங்களுக்குக் கிடைத்த அன்பும் ஆதரவும் அமோகமாக இருந்தது. மேலும் தற்போது ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியரிலும் அதே வரவேற்பைப் பெறுவோம் என நம்புகிறோம். காமி திரைப்படத்தின் மனதைக்கவரும் உருவாக்கம், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறோம்.

இயக்குநர் வித்யாதர் கூறுகையில், “காமி படத்தை உருவாக்குவது பல சவால்கள் நிறைந்த பயணமாக இருந்தது, ஆனால் இப்படத்திற்குப் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்கள் எங்களை பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இப்படத்திற்காக நாங்கள் ஐந்து வருடங்களுக்கும் மேலாகக் கடின உழைப்பைத் தந்துள்ளோம், இப்போது ZEE5 இல் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டிஜிட்டல் பிரீமியர் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இப்படத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த படம், திரைப்படங்கள் மீதான எங்களின் காதல் மற்றும் எங்களின் அயராத உழைப்பு, இது உலகளாவிய தளத்தில் புதிய உயரங்களை எட்டுவதைக் காண மகிழ்ச்சியாகவுள்ளது.

நடிகர் விஷ்வக் சென் பேசுகையில், “காமி படத்தில் ஷங்கரின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது அசாத்தியமான பயணமாக இருந்தது. வித்யாதரின் சிறப்பான இயக்கத்தில் எங்கள் குழுவினர் அயராது உழைத்து, ஒரு தலைசிறந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படம் நீண்ட நாட்களாக பெரும் உழைப்பில் உருவாகி வந்தது. அதற்குப் பலனாக, இப்படம் தியேட்டரில் பார்வையாளர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. பார்வையாளர்களின் அன்பு ZEE5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம் தொடரும் என்று நம்புகிறேன். நாங்கள் உருவாக்கிய மேஜிக்கை ZEE5 இன் பார்வையாளர்கள் காண ஆவலாகக் காத்திருக்கிறேன்”.

ZEE5 பற்றி

ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது , ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

Categories
Audio Launch Cinema News

இந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்!

இந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக உருவாகும் திரைப்படம்!

பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல் OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும் நிறுவனம். Crowd Funding எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது.

இதன் ஒருங்கினைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்ச்சி குறித்து கூறுகையில் “YouTube இனையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்க்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் YouTube இனையதளத்தின் பங்கு அபாரமானது.

இது வரை எத்தனையோ படங்களும் YouTube இணையதளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. அப்படங்கள் ஒன்று திரையரங்கு சிக்கலினாலோ, தணிக்கை பிரச்சனையாலோ அவ்வாறு வெளியாகியுள்ளன. ஆனால் இது வரை YouTube வெளியீட்டிற்கென்று இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டதில்லை. இதை பற்றி எனது நண்பர்களிடம் விவாதித்த போது YouTube வெளியீட்டிற்க்கென்றே ஒரு படத்தினை பிரத்யேகமாக தயாரித்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. அவர்களும் இது ஒரு நல்ல முயற்ச்சி என்றும் அதில் தயாரிப்பாளர்களாக தாங்களும் பங்குகொள்வதாக நம்பிக்கை தந்தனர். இதனை தொடர்ந்து இதற்கான கதை தெர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தற்போது இறுதி செய்து விட்டோம்.

இப்படத்தினை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருக்கிறோம். இப்படம் முதன்மையாக YouTube இனையதளத்தில் வெளியானாலும் இதர OTT எனப்படும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடும் முயற்ச்சியிலும் ஈடுபடவிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும் இத்திரைப்படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான இலக்கு.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை விரைவில் வெளியிடவிருக்க்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.


#YouTube @arvindhtweets @CtcMediaboy @YouTubeIndia @YouTube @onlynikil

In a first, feature film to be exclusively produced & released on YouTube!

Indian Cinema, which originated with silent films, has been continuously evolving with each passing phase. During the last few years, films have begun releasing not just in theatres but also on OTT platforms.

Looking to take this evolution to the next level, NextGen, an enterprising firm, is now attempting, for the first time ever in India, to make a film exclusively for the YouTube platform.

The firm is looking to make this film through crowdfunding simultaneously in four languages namely Tamil, Telugu, Malayalam and Hindi.

Speaking about this effort, Aravindh Srinivasan of NextGen says, “Today, the YouTube platform has an important role to play in ensuring the success of a film. By presenting the teasers, trailers and songs through YouTube, filmmakers manage to get viewers and fans interested in their films and thereby raise expectation levels. Therefore, YouTube’s contribution in this regard is humungous.

“Several films have been released directly on YouTube. However, all of these films have done so either because of a problematic theaterical release or Censor issues. However, until now, no Indian film has been made with the sole intention of releasing it exclusively on YouTube. When I discussed this issue with my friends, the thought ‘Why not make a film exclusively for the YouTube platform?’ arose in me. My friends found this to be a good idea and promised to join in as producers for the venture. Following the support provided by friends, we began actively searching for a good script that could be made into an entertaining film. After an extensive search, we have now finalised the script.

“We intend to make this film simultaneously in four languages — Tamil, Telugu, Malayalam and Hindi. Although this film will first release on YouTube, we intend to make an attempt to release it on other OTT platforms and through TV channels also. Our prime focus is to ensure that this film, which is to be presented free of cost to viewers, is of international standards. We will shortly announce the cast and crew of this film.”

#YouTube @arvindhtweets @CtcMediaboy @YouTubeIndia @YouTube @onlynikil

Categories
Audio Launch Cinema News

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

என நான்கு மொழிகளில் தயாராகும்

மன்சூரலிகானின் “ கடமான்பாறை “

பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ்.T / இசை – ரவிவர்மா பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான்,

கலை – ஜெயகுமார் / நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்

ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார்

ஆக்கம் , இயக்கம் – மன்சூரலிகான்.

படம் பற்றி இயக்குனர் மன்சூரலிகானிடம் கேட்டோம்…

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் கட்டடித்து விட்டு தாந்தோன்றித் தனமாக வாழ்வதால் ஏற்படும் பிரச்சனைகள், இன்றைய இளைய சமுதாயத்தின் மனோபாவம், இதை நகைச்சுவையாக பிரதிபலிப்பதுதான் இந்த கடமான் பாறை.

படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன அந்த பாடல்கள் ஒவ்வென்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தில் சதாசிவ் கோனே நீர்வீழ்ச்சியிலும் ,பாப்பநாய்டு பேட்டை, மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் மன்சூரலிகான்.