Categories
Cinema News

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.

படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.

ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.

Mythri Movie Makers’ New Film, Featuring Dhruv Vikram, Directed by Karan Arvind Kumar Is Titled ‘Jackie – No Retakes Allowed’, First Look Poster Promises Stylish Action Extravaganza.

Leading Pan India Production House Mythri Movie Makers continues to expand its footprint beyond Telugu cinema, and the production house is now making its mark in Tamil with an exciting fourth venture, starring Kollywood Star Dhruv Vikram. Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, the film is directed by Karan Arvind Kumar. Dhruv, who has established himself with performances in diverse and intense roles, is now taking up a commercial subject that is designed to connect with a broader section of the audience.

The makers today unveiled the title along with the film’s first-look poster. Titled ‘Jackie- No retakes allowed’, the first look presents Dhruv Vikram in a larger-than-life mass avatar. The poster blends a gritty live-action treatment with a stylish comic-book-inspired aesthetic, instantly creating curiosity around the character and the world of the stylish action extravaganza.

Dhruv appears in a stylish brown outfit, sporting a distinctive hairstyle and an intense expression. His fierce posture adds to the character’s commanding presence, while his prominently extended fist gives the poster a dynamic, action-packed feel. The tagline “No Retakes Allowed” further amplifies the film’s edgy tone.

The first look succeeds in establishing Jackie as a stylish and action-driven commercial entertainer while offering a peek of Dhruv Vikram’s powerful new screen persona.

The film also boasts an impressive technical crew. National Award-winning composer Santhosh Narayanan is scoring the music, while Viki is handling the cinematography. Jayasuriya is responsible for the editing, with GM Sekhar overseeing production design. Renowned action choreographer Vikram Mor is designing the film’s action sequences.

Cast: Dhruv Vikram

Technical Crew:
Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili
Banner: Mythri Movie Makers
Director: Karan Arvind Kumar
Music: Santhosh Narayanan
DOP: Viki
Editing: Jayasuriya S
Production Design: GM Sekhar
Action: Vikram Mor
PRO: Yuvraaj
Marketing : First Show

Categories
Cinema News

துருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV 4’ பட தொடக்க விழா

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

துருவ் விக்ரம் நடிக்கும் ‘#DV 4’ பட தொடக்க விழா.

துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் நான்காவது படமாகவும் இது அமைய உள்ளது.

இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் .

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் #MythriTamil04 #DV4 படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு மற்றும் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சசி- ‘ஹாய் நானா’ சௌர்யுவ்- ஆதிக் ரவிச்சந்திரன்- ஆண்டனி பாக்யராஜ் – ராஜா – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் பாரம்பரியமான முகூர்த்த தருண படப்பிடிப்பை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் #DV 4 படத்தில் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.ஷபி மற்றும் கரண் அரவிந்த் குமார் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஜெயசூர்யா மேற்கொள்கிறார். தேசிய விருதை வென்ற விக்ரம் மோர் இப்படத்தின் ஆக்சன் காட்சிகளை வடிவமைக்கிறார். கமர்ஷியல் என்டர்டடெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி & ரவிசங்கர் யலமஞ்சிலி ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்கள்.

‘பைசன்’ படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படத்தில், அவர் முற்றிலும் மாஸ் ( Mass) பாணியிலான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் பெயர் பெற்ற இளம் நடிகரான துருவ் விக்ரம் தற்போது பரந்த அளவிலான ரசிகர்களைக் கவரும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி ‘, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட் ‘ஆகிய படங்களின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் துருவ் விக்ரம் இணைந்திருப்பது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

Mythri Movie Makers Announced Their 4th Tamil Film, Featuring Dhruv Vikram, Directed by Karan A Kumar; The Project #MythriTamil04 #DV4 Begins With Traditional Pooja Ceremony

Leading Pan India Production House Mythri Movie Makers is not restricting themselves to Telugu industry, and are making films in other languages as well. Meanwhile, they have announced their fourth Tamil venture, which marks 4th film as a lead actor for Dhruv Vikram. Karan Aravind Kumar will direct the movie billed to be an out-and-out commercial entertainer.

The project #MythriTamil04 #DV4 has officially been kickstarted, with a grand pooja ceremony held at Mythri office – MRC Nagar, Chennai. The launch event witnessed the presence of the film’s cast, crew, and several special guests. Dhruv Vikram looked stylish in a black polo T-shirt paired with cream trousers as he joined director Karan Aravind Kumar and the team for the auspicious occasion.

Director Keerthiswaran sounded the clapboard for the muhurtham shot. Directors Adhik Ravichandran, Ravikumar, Keerthiswaran, Antony Bhagyaraj, Raja, Sasi and Hi Nanna fame Shouryuv graced the launching ceremony.

Produced by Naveen Yerneni and Y Ravi Shankar, DV4 promises to showcase Dhruv Vikram in a completely mass-oriented avatar. Known for experimenting with intense and performance-driven roles, the young actor now appears ready to embrace a unique entertainer aimed at appealing to a wider audience.

Karan Aravind Kumar has also co-written the screenplay with Saby. The film boasts a talented technical crew. Cinematography will be handled by Viki, while Jayasuriya joins the project as editor. Costume designer Praveen Raja, production designer GM Sekhar, and action choreographer Vikram Mor complete the impressive lineup behind the camera.

Other details are awaited.

Cast: Dhruv Vikram

Technical Crew:
Producers: Naveen Yerineni & Ravi Shankar Yalamanchili
Banner: Mythri Movie Makers
Director: Karan Arvind Kumar
PRO: Yuvraaj

Categories
Cinema News

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.

‘Bison Kaalamaadan’ will light up screens this Diwali. Mari Selvaraj’s next explodes in theatres on October 17 – A Diwali celebration awaits with Applause Entertainment & Neelam Studios

The wait is over. The much-anticipated Tamil sports drama Bison Kaalamaadan is all set to hit theatres on October 17, 2025, as the biggest Diwali celebration in Tamil cinema this year. Produced by Applause Entertainment and Neelam Studios and directed by the acclaimed Mari Selvaraj, this gripping tale of guts and glory promises to captivate audiences.

Starring Dhruv Vikram in a transformative role, Bison Kaalamaadan brings together a stellar ensemble cast including Anupama Parameswaran, Director Ameer, Director Lal, Pasupathy and Rajisha Vijayan.

Directed by Mari Selvaraj and produced by Applause Entertainment and Neelam Studios, this film marks another significant milestone in Applause’s journey into Tamil cinema, continuing their commitment to collaborate with top-tier talent and deliver powerful, story-driven films.