Categories
Cinema News

திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் கார்த்தியின் ‘விருமன்’

திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் கார்த்தியின் ‘விருமன்’

திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் வெற்றியைப் பெற்றிருக்கும் கார்த்தியின் ‘விருமன்’

‘விருமன்’ வெற்றிக்காக கார்த்திக்கு மாலை அணிவித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் தகவல் வெளியானது. இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.
கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான ‘விருமன்’ வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
Cinema News

25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் !

25 நாளை கடந்தும், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் “மாயோன்” திரைப்படம் !

புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை என பரபர திரில்லர் திரைப்படமாக வெளியான “மாயோன்” ரசிர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்குகளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.

ஒரு திரைப்படம் ஒரு வாரம் முழுதாக ஓடினாலே மிகப்பெரிய வெற்றி என கொண்டாடப்படும் தற்போதைய தமிழ் சினிமாவில், மாயோன் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து, ரசிகர்களின் பேராதரவில் 4 வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாக திரையரங்குளில் 25 ஆம் நாளை கடந்துள்ளது.

அருமையான திரைக்கதை. அட்டகாசமான உருவாக்கம். நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணை கவரும் பிரமாண்ட காட்சிகள் என மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை குவித்துள்ளது.

மாமனிதன், வேழம் படங்களுடன்
“மாயோன்” திரைப்படம் வெளியானது மற்ற படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள் கூட்டத்தால் இப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்து வருகிறது.

மாயோன் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பெரும் பொருட்ச் செலவில், நமது பாரம்பரிய பெருமைகளை பறை சாற்றும் விதமாக பெரிய நட்சத்திரங்கள் மற்றும் பெரிய தொழில் நுட்ப கலைஞர்களுடன் ஒரு அதிரடி திரில்லராக மாயோன் 2 ஆம் பாகம் உருவாகவுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது .