full screen background image
Search
Saturday 18 April 2026
  • :
  • :
Latest Update

Vegathadai Short Film Launch Photos

இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் பயணிக்கும் இளைஞர்களுக்காண பாடமே ‘வேகத்தடை’!

முறையற்ற வழிகாட்டுதல் இல்லாமல் அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இளைஞர்களுக்கு ஒரு அடிப்படை பாடம் இந்த ” வேகத்தடை” எனும் குறும்படம்.

சமூக சேவகர் நெல்லை தமிழோவியன் (எ) எம்.டி.ஜூபைர் பாருக் ‘சமுதாய விழிப்புணர்வு புரொடெக்சன்’ தயாரிப்பில், தேசிய அளவில் சாதனை பெண்களுக்கான விருது பெற்ற சமூக சேவகி திருமதி.தமிழ்செல்வி நிக்கோலஸ் அவர்களின் கதையில், ‘நேரம் காலம்’, ‘நல்ல பொண்ணு கெட்ட பையன்’ ஆகிய குறும்படங்களை இயக்கிய நடிகர், இயக்குநர் திரு.வீ.கே.செல்வராஜ் அவர்களின் மற்றுமொரு படைப்பு தான் இந்த “வேகத்தடை” எனும் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம்.

இந்த குறும்படம் நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித், சௌந்தர் ராஜா, அபி சரவணன், பாடலாசிரியர் முருகன் மந்திரம் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். படம் பற்றி இயக்குனர் கூறுகையில்,

நாள்தோறும் நடக்கும் பல விபத்துகள் கட்டாயம் நமது மனதை பாதித்திருக்கும். விபத்துகளில் முக்கியமான காரணமான அதிவேக பயணம் மற்றும் சாலை விதிகளில் பொறுப்பில்லாமை குறித்து தெளிவுபடுத்த அறிவுறுத்த நாமும் முயன்றிருப்போம். இங்கு நமது அனைவரின் சார்பிலே இந்த படத்தை கொடுத்துள்ளேன்.

ஒளிப்பதிவு: மோகன்குமார் ஆரணி

இசை: ஜோயல்.

படத்தொகுப்பு: ஜெரால்டு.

“Knowing but not Doing” என்ற ஆங்கில பழமொழியை போல நல்லவைகளை நாம் அறிவோம் ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் நமக்கு அவ்வளவாய் அக்கறை இருப்பதில்லை.

“அதிவேக பயணம், அருகிலே மரணம்” நம்மின் கவனக்குறையால் நம் மரணம் நொடியிலேயே நிகழ்ந்து விடுகிறது.ஆனால் நம்மை சார்ந்துள்ள பெற்றோர்,நண்பர்கள்,உறவுகள் மனதுக்குள் ஆராவடுவாய் வலி தந்து கொண்டே தான் இருக்கும்.தலைக்கவசம் அணிவதும் நிதானமாக செல்வதும் இக்கால தலைமுறைக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. ஆனால் நீ அணியும் தலைகவசமே உன் தாயின் கண்ணீரை வரவிடாமல் தடுக்கும் உன் மிதவேகமே அன்பானவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் என்பதை குறும்படத்தில் இரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கிறேன்.

மொத்தத்தில்அனைத்து விதமான இரசிகர்களும் இளைஞர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் வேகத்தடை.இது போன்ற சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு பாராட்டுக்கள்.

“மிதவேகமே போதும்

தலைக்கவசமே தெய்வம்

தவிர்க்காதீர்கள் சாலை விதிகளை”




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *