full screen background image
Search
Monday 16 June 2025
  • :
  • :
Latest Update

‘மிக்ஜாம்’ புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு!

‘மிக்ஜாம்’ புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு!

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது. பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது.

இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ், எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். ’வெப்பன்’ படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *