“மார்கழி திங்கள்” ரேட்டிங்: 2.5/5
Casting : Bharathiraja, Shyam Selvan, Rakshana, Naksha Saran, Suseenthiran, Appukutty
Directed By : Manoj K.Bharathiraja
Music By : Ilayaraja
Produced By : Suseenthiran
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மார்கழி திங்கள்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முத்திரை பதித்த இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.
போட்டி போட்டுக் படிக்கும் இருவருக்குள்ளே ஒரு கட்டத்தில் காதல் மலர்கிறது. கல்லூரி படிப்பை முடித்த பின்பு தான் திருமணம் அதுவரை இருவரும் சந்தித்து பேசக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார் கவிதாவின் தாத்தா. பின்னர் இருவரும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள்.
இந்த படிக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? எப்படி சமாளித்தார்கள் என்பதே இத்திரைபடத்தின் கதை. காதல் ஆணவ படுகொலைகளை மைய்யப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மனோஜ். சுசீந்திரன் தனது சொந்த ஊரான ஒட்டஞ்சத்திரம் பகுதியில் கதை களத்தை அமைத்துள்ளார்.படத்தின் முதல் காட்சி தொடங்கி பள்ளியில் படிப்பை விட காதலே அதிகமகா உள்ளது. கவிதாவாக நடிக்கும் ரக்ஷினி காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார். இதற்கு நேர் மாறாக வினோத்தாக நடிக்கும் ஷ்யாம் செல்வனும் சிறப்பாக நடித்துள்ளார்.
பாரதி ராஜாவின் குரலில் சிறிது கூட தளர்ச்சி தெரியாமல் தாத்தாவாக நன்றாக நடித்துள்ளார். இது ஒரு காதல் படம் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது இளையராஜாவின் இசைதான். பாடல் காட்சிகளிலும், பின்னணி இசையிலும் ஒரு இசை ராஜாங்கத்தை நடத்தி உள்ளார்.
சிறந்த இயக்குனராக வருங்காலத்தில் மனோஜ் இருப்பார் என நம்பலாம். அமைதியான கிராமம், அதை அப்படியே உணரச் செய்யும் வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு அருமை. தியாகுவின் திறமையான எடிட்டிங் பாரட்ட தக்கது.
தினேஷ் காசியின் பரபரப்பான ஸ்டண்ட் காட்சிகளும், ஷோபி பால்ராஜின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன படத்திற்கு கூடுதல் பலம்.மேலும் இந்த திரைப்படமும் ஆணவ கொலை, சாதிய பிரச்சனை.. போன்றவற்றை முன்னிலைப்படுத்திய கிராம பின்னணியிலான படைப்பாக இருக்கும் என அவதானிக்கப்படுகிறது.