‘சந்திரமுகி 2’ திரைப்பட ரேட்டிங்:3/5
Casting : Raghava Lawrance, Kangana Ranaut, Vadivelu, Radhika, Suresh Menon, Lakshmi Menon, Mahima Nambiar, Shrusti Dange, Subiksha, Ravi Mariya, Vignesh
Directed By : P.Vasu
Music By : MM Keeravani
Produced By : Lyca Productions – Subashkaran
ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் ‘சந்திரமுகி’. திகில், காமெடி, பாடல்கள், மாஸ், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்று எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்திய படம் அது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் விமர்சனம் இதோ.
படத்தில் ரங்கநாயகியாக நடிக்கும் ராதிகா குடும்பத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் மொத்த குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்தால் தான் கோயிலுக்கு சரியாகும் என்று சொல்கிறார்கள். ஆனால், ராதிகா மகள் வீட்டை விட்டு மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறார். இதனால் அவரை ஒதுக்கி விடுகிறார்கள். பின் ராதிகா மகள் இறந்து விடுகிறார்.
தற்போது பிரச்சனை தீர குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால் இறந்து போன தன்னுடைய மகளின் குழந்தைகளும், அவர்களுக்கு பாதுகாவலனாக ராகவா லாரன்ஸும் ராதிகா வீட்டிற்கு பாதுகாவலனாக இவர்கள் அனைவரையும் குலதெய்வ கோயிலுக்கு ராதிகா அழைத்துக் கொண்டு செல்கிறார். பின் அவர்களை குலதெய்வ கோயிலுக்கு அருகில் இருக்கும் வேட்டையபுரம் அரண்மனையில் தங்க வைக்கிறார். அனைவரும் எதிர்பார்த்தது போல சந்திரமுகி அறைக்குள் ஒருவர் செல்கிறார். அவர் வழக்கம் போல் தப்பித்து விடுகிறார். அதற்குப் பிறகு சந்திரமுகி யாரு உடம்பில் புகுந்தார்? சந்திரமுகியின் சந்திரமுகி வேட்டையன் என்ன செய்தார்? ராகவா லாரன்ஸ்க்கும் வேட்டையனுக்கும் என்ன தொடர்பு? என்பது தான் படத்தின் மீதி கதை. ராகவா லாரன்ஸ் வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், காமெடி காட்சிகள் பெரிதாக செட் ஆகவில்லை.
மேலும், வேட்டையின் கதாபாத்திரத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து கங்கனாவின் நடிப்பு, நடனம் அனைத்தும் சூப்பராக இருக்கிறது. முதல் பாகத்தில் வடிவேல் சூப்பராக காமெடிகள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், இந்த படத்தில் கொஞ்சம் குறைவு என்று தான் சொல்லணும். பி வாசுவின் இயக்கம் சிறப்பாக இருக்கிறது. சந்திரமுகி காட்சிகளில் அவர் பிரம்மாண்டமாக வியக்க வைக்கும் அளவிற்கு காண்பித்து இருக்கிறார். குறிப்பாக வேட்டையன்- சந்திரமுகி இருவரும் வரும் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
ராதிகா, ரவிமரியா, விக்னேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ருஷ்டி டாங்கே என ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தும் யாருக்கும் வேலையே இல்லை. மறைந்த நடிகர்கள் மனோ பாலா, ஆர்.எஸ்.சிவாஜியும் வீணடிக்கப்பட்டிருக்கின்றனர். முதல் பாகத்தில் உண்மையான சந்திரமுகி யாரென்று பார்வையாளர்களுக்கு தெரிவதை திசை திருப்பவாவது நயன்தாரா தேவைப்பட்டார். ஆனால், இதில் நாயகி மஹிமா நம்பியாருக்கு அந்த வேலையும் இல்லை. லட்சுமி மேனன் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் ஒரிஜினல் சந்திரமுகியாக வரும் கங்கனா தன்னுடைய நடனத்தாலும், நடிப்பாலும் ஈர்க்கிறார். ஆனாலும் க்ளைமாக்ஸுக்கு முன் வரும் பாடலில் ஜோதிகாவின் நடிப்பை நகலெடுக்க முயன்று தோற்கிறார். படத்தில் பரிதாபமான உயிரினம் அந்த பாம்புதான். முதல் பாகத்தில்தான் அந்த பாம்பை அம்போவென விட்டுவிட்டார்கள் என்றால், இந்தப் படத்திலும் அதற்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இனியும் கூட அந்த பாம்பு ‘சும்மா’ இருப்பதற்கு உதாரணமாக மீம்ஸ்களில் இடம்பெறப் போகிறது என்பதை நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்கிறது.
’சந்திரமுகி’ முதல் பாகத்தில் வரும் ‘தேவுடா தேவுடா’ பாடல் போல ஒரு பாடல் வேண்டுமா? அது இருக்கிறது. ‘அந்திந்தோம்’ பாடல் போல ஒன்று வேண்டுமா? அதுவும் இருக்கிறது. ‘கொஞ்ச நேரம்’ பாடல் வேண்டுமா? அதுவும் இருக்கிறது. ‘ராரா’ பாடல் வேண்டுமா? அதுவும் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறது. ஆனால் எல்லாமே ரொம்ப சுமாராக இருக்கிறது. பின்னணி இசையால் படத்தை பல இடங்களில் கஷ்டப்பட்டு தூக்கி நிறுத்த முயல்கிறார் ஆஸ்கர் வாங்கிய எம்.எம்.கீரவாணி. பெரும் ஹிட்டடித்த ‘ராரா’ பாடல் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ட்யூனை மாற்றி கொத்து பரோட்டோ போட்டிருக்கிறார்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. நடிகர்களின் உடை, அலங்காரம், பின்னணி என அனைத்தும் இந்தி மெகா சீரியல்களை ஞாபகமூட்டும் அளவுக்கு ‘பளிச்’சிடுகின்றன. தூங்கும்போது கூட படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மேக்கப்பில் மிளிர்கின்றனர்.
18 ஆண்டுகளுக்கு முன்பு வந்த முதல் பாகத்திலேயே கூட தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத ‘ஸ்பிலிட் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ போன்ற மருத்துவ காரணங்களை சொல்லி ஜல்லியடித்திருப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் மருந்துக்கு கூட புதுமை என்று ஒன்று இல்லவே இல்லை. கிட்டத்தட்ட முதல் பாகத்தை அப்படியே பட்டி டிங்கரிங் செய்து ‘வேட்டையன்’, ‘செங்கோட்டையன்’ என்று ஏதேதோ செய்து குதறி வைத்துள்ளனர்.
’மணிசித்ரத்தாழ்’, ‘ஆப்தமித்ரா’, ‘சந்திரமுகி’ என அனைத்து வடிவங்களிலும் வரவேற்பை பெற்ற ஒரு படைப்பின் பெயரை பயன்படுத்தி, நினைவில் வைக்கத்தகுந்த ஒரு அம்சம் கூட இல்லாத ஒரு படத்தை அதுவும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கியிருக்க வேண்டாம்.. இவர்களை அடுத்து கீரவாணியின் இசை படத்திற்கு கூடுதல் படத்தை சேர்த்திருக்கிறது. பாடல்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கவில்லை என்றாலும் இசை தூள் கிளப்புகிறது. மேலும், படத்தில் இசை மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். ஆக மொத்தம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இந்த படம் ஓகே என்று சொல்லலாம்.