full screen background image
Search
Friday 18 April 2025
  • :
  • :
Latest Update

வித்தியாசமான வரவேற்பு, வரவேற்ற K.T.குஞ்சுமோனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர் MM.கீரவாணி

வித்தியாசமான வரவேற்பு, வரவேற்ற K.T.குஞ்சுமோனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர் MM.கீரவாணி

மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனுக்கு வாழ்த்துப் பாடலுடன் கேரளாவுக்கு வருகை தந்த ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் M.M.கீரவாணி

பிரமாண்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.
அதேபோல ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தான் இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்றுத்தந்து இந்திய சினிமாவையே உலக அரங்கில் கவுரவப்படுத்தியவர் இசையமைப்பாளர் M.M.கீரவாணி.

இவர்கள் இருவரும் ஜென்டில்மேன்-2 படத்திற்காக முதன்முறையாக கைகோர்த்துள்ளனர். ‘ஜென்டில்மேன்’ இரண்டாம் பாகமாக ‘‘ஜென்டில்மேன்-2’’ படத்தை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்,K.T.குஞ்சுமோன்.

இப்படத்தின் பாடல் இசை கோர்ப்பு பணிக்காக கொச்சியில் உள்ள உலகப் புகழ்பெற்ற போல்காட்டி பேலசுக்கு வருகை தந்தார்,M.M.கீரவாணி.
அவரை பூச்செண்டு கொடுத்து கட்டியணைத்து வரவேற்றார், KTK. இதை பார்த்து கொண்டிருந்த கீரவாணியுடன் வந்த பெண்கள் பாட ஆரம்பித்தார்கள். அவர்கள் கீரவாணியை வாழ்த்தி பாடுகிறார்கள் என எதிபார்த்த KTK.. அதிர்ச்சியானார்.
“வணக்கம்.. வணக்கம்.. வணக்கம் சொல்ல வந்தோம் KTK..
உண்மையான ஜென்டில்மேன் என்றால் அது நீங்கதான் KTK..
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க அன்புள்ள KTK..
வாழ்த்துக்கள் சொல்லுவது உங்கள் MMK” !
என்கிற வரிகளுடன் தனது வாழ்த்துக்களை தெரியப்படுத்தினார் M.M.கீரவாணி.
சந்தோஷத்தில் உறைந்து போனார் KTK..

வரவேற்க வந்தவருக்கு இப்படி ஒரு வாழ்த்து நிகழ்வு திரையுலக வரலாற்றிலேயே புதிது என்று சொல்லலாம்.

கேரளாவுக்கு வந்திருந்த M.M.கீரவாணி, தன்னை வரவேற்ற தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோனை வாழ்த்தும் விதமாக அவரே எழுதி, அவரது இசைக்கலைஞர்களை வைத்து பாட வைத்து அனைவரையும் ஆச்சிரியத்தில் அதிர வைத்தார் இந்த ஆஸ்கர் நாயகன்.

பாடல் கம்போசிங் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதில், கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், டைரக்டர்
A.கோகுல் கிருஷ்ணா பங்கு கொண்டனர்.

இப்படத்தின் பூஜை விரைவில் சென்னையில் நடைபெறும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *