‘மாவீரன்’ திரைப்பட ரேட்டிங்: 3/5
Casting : Sivakarthikeyan, Aditi Shankar, Saritha, Mysskin, Sunil, Monisha Blessy, Yogi Babu, Vijay Sethupathi (Voice)
Directed By : Madonne Ashwin
Music By : Bharath Sankar
Produced By : Shanthi Talkies – Arun Viswa
சிவகார்த்திகேயன் – மடோன் அஷ்வின் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதித்தி ஷங்கர், வில்லனாக மிஷ்கின் மற்றும் சரிதா, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பை கொண்ட மாவீரன் மக்களை ஏமாற்றமடைய விடவில்லை.
இத்திரைப்படம் ஃபேண்டஸி வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் தன் மக்களுக்காக துணிந்து செயல்படும் ஒரு வீரனாக மாறுவதே கதைக்களம். அரசின் ஆணைப்படி குப்பதில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் அங்கு பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
அனைத்து சிக்கல்களையும் பொறுத்துக்கொண்டு வாழும் கோழையாக இருக்கும் சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சியும் செய்கிறார். அப்போது திடீரென அவருக்கு கிடைக்கும் சூப்பர் பவரை வைத்துக் கொண்டு மக்களுக்காக போராடி மிஷ்கினின் கோபத்திற்கு ஆளாகிறார். அதில் இருந்து மீண்டு தன் சிக்கல்களை அவர் தீர்க்கிறாரா இல்லையா என்பது தான் படம்.
படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க காமெடி காட்சிகளால் நிறைந்துள்ளது. சிவகார்த்திகேயன் – யோகி பாபு நகைச்சுவைகள் மிகவும் சூப்பராக வந்துள்ளது. காமெடி எனும் பெயரில் கிரிஞ் செய்யாமல் அப்பகுதியை அஷ்வின் நன்றாக எழுதியுள்ளார். இடைவேளை தான் படத்தின் உச்சம். சிவகார்த்திகேயனின் கேரியரிலேயே சிறந்த இன்டர்மிசன் கொண்ட படம் என பலர் பாராட்டியுள்ளனர்.
தொடர்ந்து வரும் இரண்டாம் பாதி அதற்கு அப்படியே மாற்று. தரமான ஆக்க்ஷன் காட்சிகளை கொண்டாலும் இரண்டாம் பாதி சற்று தடுமாறியது. சில காட்சிகள் ஒரே மாதிரி தொடர்ந்து வருவது ஒரு அளவுக்கு மேல் சலிப்பை உண்டாக்கியது. மேலும் சில பகுதி சுலபமாக கணிக்கும்படி அமைந்தது. மற்றபடி மாவீரன் ஜெய்த்துவிட்டான்.
சிவகார்த்திகேயன் முதலில் காமெடி முகத்தையும் பின்னர் ஆக்க்ஷன் முகத்தையும் காட்டி அசத்தியுள்ளார். அதித்தி ஷங்கர் மற்றும் மிஷ்கின் தங்களின் பணியைச் சிறப்பாக செய்துள்ளனர். தொடர் சுமார் படங்களை தந்த சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டட்ர் உறுதி. மற்றுமொரு முறை தன்னை நிரூபித்துள்ளார் தேசிய விருது இயக்குனர் மடோன் அஷ்வின். குடும்பத்துடன் சேர்ந்து சென்று பார்க்கக் கூடிய ஓர் படம்.
மொத்தத்தில் ‘மாவீரன்’ அநியாயத்தை தட்டி கேக்கும் ‘வீரன்’