full screen background image
Search
Tuesday 10 December 2024
  • :
  • :
Latest Update

‘பாபா பிளாக் ஷீப்’ திரை விமர்சனம்

‘பாபா பிளாக் ஷீப்’ திரை விமர்சனம்

Casting : Suresh Chakravarthi, Abhirami, Vinodhini Vaidynathan, Rj Vigneshkanth, Ammu Abhirami, Bose Venkat, Harshath Khan, Adhirchi Arun, Subbu Panchu, Abdul Ayaz, Narendra Prasad, Madurai Muthu, Settai Sheriff, Ram Nishanth, Vishwanath Sharma, Kutty Vino

Directed By : Rajmohan Arumugam

Music By : Santhosh Dhayanidhi

Produced By : Romeo Pictures – Raahul

புட் சட்னி ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘பாபா பிளாக் ஷீப்’. ஆர்.ஜே. விக்னேஷ் மற்றும் அவரது பிளாக் ஷீப் டீம், அம்மு அபிராம, அபிராமி அகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

சேலத்தில், ஒரே கட்டடத்தில் செயல்படுகிறது இரண்டு தனியார் பள்ளிகள். அதிலொன்று ஆண்கள் படிக்கும் பள்ளி. மற்றொன்று இருபாலர் பள்ளி. இரண்டு பள்ளியையும் பிரிக்கிறது ஓர் நெடுஞ்சுவர். சந்தர்ப்ப சூழலால், இந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு, இரண்டு பள்ளியும் ஒன்றாக்கப்படுகிறது. பிரித்து வைத்திருந்த போதே, எதிரும் புதிருமாக இருந்த இரண்டு கேங்குகள் கடைசி பெஞ்சுக்காக சண்டை போட்டுக்கொள்கின்றன. இந்த சண்டை இறுதியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக் கதை.

புட் சட்னி யூடியூப் மூலம் பிரபலமான ராஜ்மோகனின் இயக்குநர் அவதாரம் கொஞ்சம் தடுமாற்றமே. முழு நீள திரைப்படத்திற்கு உண்டான கதையோ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லாமல் படம் தடுமாறுகிறது. ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போக வேண்டிய சமூக விழிப்புணர்வு கருத்தை, சுற்றி வளைத்து சொல்லியுள்ளார்.

2கே கிட்ஸ் வாழ்க்கையை சொல்கிறேன் என்று கிரிஞ்சாகவே பல விஷயங்களை பேசியிருக்கிறார். அவர்கள் செல்போனை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை தவிர வேறு எதுவும் படத்தில் இல்லை. ஆர்.ஜே. விக்னேஷ், அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி இவர்களா 2கே கிட்ஸ் என்று கேட்கும் அவளவிற்கு உள்ளது அவர்களின் தோற்றம். காமெடி செய்பவர்களே சிரித்தால் தான் அது காமெடி என தெரிகிறது.

பெற்றோர்களின் உலகை பிள்ளைகளும், பிள்ளைகளின் உலகை பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என இருதரப்பும் சொல்லும் காரணங்கள் ஒட்டவே இல்லை. படத்தின் பிரதான கதாபாத்திரங்களான அயாஸ், நரேந்திர பிரசாத் இருவரும் நல்ல நடிப்பையே கொடுத்திருந்தாலும், அவர்களின் கதாபாத்திரம் வலுவாக எழுதப்படவில்லை. ஆர்.ஜே. விக்னேஷ் அப்பாவியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி காதல் தொடர்பான காட்சிகளில் நன்றாக நடித்திருந்தாலும், போதிய அளவுக்கான தாக்கத்தை அந்த கதாபாத்திரம் ஏற்படுத்தவில்லை. அபிராமி கடைசியில் வந்து அழுது புலம்புவதோடு சரி.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு தான் ஒரே ஆறுதல். வகுப்பறை காட்சிகளை விதவிதமான கோணங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதேபோல், சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை ரசிக்க வைத்த அளவுக்கு பாடல்கள் இல்லை.

ராஜ்மோகன் முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்புவார் என்று பார்த்தால், பாடாய்ப் படுத்தி எடுக்கிறார்!

மொத்தத்தில் பாபா பிளாக் ஷிப் – சுமார் ராகம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *