கலைஞர் டிவியில் பார்த்திபனின் “இரவின் நிழல்” – சாதனைத் திரைப்படம்
நமது கலைஞர் தொலைக்காட்சியின் ஜூன் மாத திரைக் கொண்டாட்டத்தில், வருகிற ஜூன் 25 – ஞாயிறு பிற்பகல் 1.30 மணிக்கு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் “இரவின் நிழல்” திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து விருதுகளை வாரிக்குவித்த திரைப்படம் இரவின் நிழல். இது உலகின் முதல் நான்-லீனியர் கதைக்களத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், பிரிஜிடா சாகா, வரலட்சுமி சரத்குமார் , ரோபோ சங்கர், பிரியங்கா ரூத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்த்திபனின் இந்த சாதனை முயற்சி பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் வென்றுள்ள இந்த படத்திற்கு ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவையும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையையும் கவனித்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் சில சிங்கிள் ஷாட் படங்கள் வெளியாகி இருந்தாலும் அவைகள் பெரும்பாலும் லீனியர் படங்களாகவே இருந்திருக்கிறது. ஆனால் நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உலகில் இதுவரை எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. அப்படி இருக்கையில் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் விதமாக பார்த்திபனின் எடுத்திருக்கும் இந்த “இரவின் நிழல்” திரைப்படத்தை வரும் ஞாயிறு அன்று கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.