full screen background image
Search
Tuesday 8 July 2025
  • :
  • :
Latest Update

ராமநாதபுரம் அக்னி வெயிலில் நினைத்ததை சாதித்த விக்ரம் சுகுமாரன்

*கருவேலம் முள்ளிலும், மணல் கல்லிலும் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்தது*

*வாந்தி எடுத்து மயக்கம் அடைந்த நடிகர் சாந்தனு*

தமிழ் சினிமாவுல முதன்முதலாக ஒரு படம் இயக்குகின்ற இயக்குனர்கள் எல்லோருமே ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வர வேண்டும் என்று கடுமையாக உழைப்பதுண்டு.

ஏனென்றால் அறிமுக இயக்குனர்கள் அனைவருக்கும் அந்த முதல் படம் தான் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற படமாக திருப்புமுனையாக அவர்களது வாழ்க்கையில் அமையும்.

அப்படி தன் முதல் படமான *மதயானை கூட்டம்* படத்திலேயே மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இயக்குனர் *விக்ரம் சுகுமாரன்* தனது இரண்டாம் படைப்பான *இராவண கோட்டம்* திரைப்படத்தை எப்படி எடுத்து இருப்பார் இதோ உதாரணம் சில படப்பிடிப்பு நிகழ்வுகள்.

பொதுவாக மாதங்கள் பன்னிரண்டில் அக்னி நட்சத்திரம் வரும் மாதமான மே மாதம் தலைநகரமான சென்னையிலும் சரி அவரவர் சொந்த ஊரிலும் சரி ஒரு இருபதிலுருந்து இருபைதைந்து நாள் கடுமையான வெயில் தாக்கத்தை சந்திக்க வேண்டும்.
ஒரு சிலர் இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் கோடை விடுமுறைக்கு சுற்றுலா தலங்களான ஊட்டி, கொடைக்கானல் சென்று அந்த வெயிலில் இருந்து தப்பித்து விடுவார்கள்

ஆனால் இவர்கள் செய்யும் வேலை வெயிலில் இருந்து தப்பித்து விடுவது அல்ல,
அந்த வெயிலின் தாக்கத்தையும் அதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பையும் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் காட்சியாக காண்பிப்பது ஒன்று மட்டுமே இவர்களது குறிக்கோள்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் *இராவண கோட்டம்* படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவருமே படத்தின் இறுதி காட்சி இவ்வளவு கஷ்டப்பட்டு படமாக்கி இருக்காங்களே எங்க எடுத்திருப்பாங்க, எப்படி எடுத்திருப்பாங்க அப்படின்னு ஆவலா இருப்பீங்க.

அக்னி நட்சத்திர வெயிலில் ராமநாதபுரம் முழுவதும் மண்கள் கருப்பு நிறமாகவும் மணலில் இருக்கும் சிறு சிறு கற்கள் கூட கால் வைத்தால் காலில் காயமாகிவிடும் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் ராமநாதபுரத்தில் தான் அந்த இறுதிக் காட்சி கஷ்டப்பட்டு படமாக்கப்பட்டது.

படபிடிப்பின் போது துணை நடிகர்களுக்கு ஏதாவது உடல் ரீதியான கோளாறு ஆகிவிட்டாலே படபிடிப்பு பாதியில் நின்று விடும்.
அல்லது படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக பத பதைத்து விடுவார்கள். அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஹீரோவான சாந்தனு அவர்களுக்கு அந்த வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் வாந்தியும் லேசான மயக்கமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்படி உடல் ரீதியான தொந்தரவுகளை அனுபவித்துக் கொண்டு சாந்தனு சிறிது நேரத்திலேயே தன்னை தயார் படுத்தி கொண்டு சிரமத்தை பார்க்காமல் நடித்துக் கொடுத்தது மிகவும் பெருமையாக இருந்தது என்று இயக்குனர் விக்ரம் சுகுமாரன் தெரிவித்தார்.

படபிடிப்பில் இருந்த செல்வம் என்கிறவர் கூட படப்பிடிப்பின் போது திடீரென அந்த அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் தாங்காமல் சிறிது நேரம் மயக்கம் அடைந்து விட்டார் நாங்கள் என்னவோ ஏதோ என்று நினைத்து ஓடி பார்க்கையில் சிறிது நேரத்தில் முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் மனிதர் எழுந்து விட்டார் அப்பதான் எங்களுக்கு உயிரே வந்தது.

*வாழ்க்கையில் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாமல் கிடைத்தது வாழ்க்கையில் என்றுமே நிலைக்காது*

இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ, பொருந்தாதோ எங்களின் பட குழுவினர்களுக்கும் பொருந்தும்.

ஏனென்றால் என்னுடைய இயக்கத்தில் கஷ்டப்பட்ட அனைவரும் ரசிகர்கள் தந்த வெற்றியின் மூலம் பலனும்,பயனும் அடைந்து விட்டோம்.

தமிழ் ரசிகர்கள் தந்த இந்த உற்சாக வெற்றி என்னுடைய அடுத்த படைப்பிற்கான ஊக்கமாகவே கருதுகிறேன்.

நிச்சயமாக என்னுடைய அடுத்த படைப்பு இதே போல் பரபரப்பான வெற்றி படமாக அமையும் என்பதில் துளி அளவு சந்தேகம் இல்லை.

என்றென்றும் உங்கள் அன்பில் எதிர்பார்ப்பில்-விக்ரம் சுகுமாரன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *