full screen background image
Search
Saturday 14 December 2024
  • :
  • :
Latest Update

ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் வெளியீடு !!

ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் வெளியீடு !!

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் !!

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பரபரப்பான திரில் அனுபவம் தரும் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டீசரில், ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ஜெயராமின் அசத்தல் நடிப்பு என, ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் அட்டகாசமான திரில்லருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு அறிவிப்புகள் வெளியாகும்.

எழுத்து இயக்கம் : வினில் ஸ்கரியா வர்கீஸ்
தயாரிப்பு : ஸ்ரீஜித் K.S மற்றும் பிளெஸ்ஸி ஸ்ரீஜித்
ஒளிப்பதிவு : RR விஷ்ணு
இசை : 4 மியூசிக்ஸ்
எடிட்டர்: தீபு ஜோசப்
வசனங்கள்: வின்சென்ட் வடக்கன், டேவிட் K ராஜன்
கலை இயக்குனர்: ஆஷிக் S
கிரியேட்டிவ் டைரக்டர்: ஸ்ரீஜித் கோடோத்
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
ஆடை வடிவமைப்பாளர்: தன்யா பாலகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஆக்‌ஷன் நூர், K கணேஷ் குமார், அஷரஃப் குருக்கள்
புரடக்சன் கண்ட்ரோளர் : ஜாவேத் செம்பு
முதன்மை இணை இயக்குநர்கள்: வினோத் PM, விஷக் R வாரியர்
இணை தயாரிப்பாளர்: அபிஜித் S நாயர்
தயாரிப்பு நிர்வாகி: K சக்திவேல்
ஒலி வடிவமைப்பாளர்: ரெங்கநாத் ரவி
DI : ரமேஷ் C P
ஸ்டில்ஸ்: ராகுல் ராஜ் R
புரமோஷன் ஸ்டில்ஸ் : ஷஃபி ஷக்கீர்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
டிஜிட்டல்: ரஞ்சித் M
டிசைன்ஸ்: 100 டேஸ்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *