Cricket icon MS Dhoni kits up for Viacom18
~ India’s most celebrated cricket captain and four-time IPL winning skipper to amplify network’s digital proposition ~
Mumbai, 9th March 2023: Viacom18 announced India’s most celebrated cricket captain and four-time IPL-winning skipper MS Dhoni as their Brand Ambassador. Dhoni will amplify the network’s vision for making live sports viewing synonymous with digital.
Dhoni, one of the most revered players in world cricket, will work with Viacom18 to make digital the preferred platform for fans to watch their favourite sport. The Chennai Super Kings icon will participate in several network initiatives featured on the JioCinema, Sports18 and his social media accounts. Fondly known as ‘Thala’, he will feature in JioCinema’s upcoming TATA IPL campaign.
“I truly believe that watching sports is best enjoyed when you can catch your favourite action on-the-go or from the comfort of your own home but with interactivity, choice and personalisation, something that only a digital platform can offer,” said MS Dhoni. “JioCinema is taking the proposition to a whole new level by engaging with fans in ways one could never think of. I can’t wait to be part of this paradigm shift and what is the future of sports viewing.”
“MS Dhoni’s leadership and game-changing abilities are well-documented, but his humble and grounded personality resonates with the digital natives, who value authenticity and transparency,” said Viacom18 – Sports CEO Anil Jayaraj. “Dhoni has set unparalleled benchmarks and evolved rapidly, which aligns with our vision and proposition on how sports viewing is best experienced on digital.”
“The peaks MS Dhoni continues to scale come through his innate ability to adapt and innovate, and that makes him a perfect fit for Viacom18’s ground-breaking digital-first offerings,” said MS Dhoni’s Manager (Midas Deals), Swaminathan Sankar. “Dhoni’s pan-India appeal will fortify the network’s ambition to reach out to every possible cricket fan and sports viewer.”
The 2023 season of TATA Indian Premier League tips off March 31 with defending champions Gujarat Titans taking on MS Dhoni-led Chennai Super Kings at the Narendra Modi Stadium in Ahmedabad. All matches will be live on JioCinema for no cost this season. In addition, JioCinema will offer 4K feed, multi-language and multi-cam presentation, interactivity through stats pack and Play Along feature for over 700mn+ internet users through the 2023 edition of TATA IPL.
JioCinema, which is available to Jio, Airtel, Vi, and BSNL subscribers, is live-streaming all the Women’s Premier League matches in five languages, including English, Hindi, Tamil, Telugu and Kannada.
Viewers can continue to watch their preferred sports by downloading JioCinema (iOS & Android). For the latest updates, news, scores, and videos, fans can follow Sports18 on Facebook, Instagram, Twitter and YouTube and JioCinema on Facebook, Instagram, Twitter and YouTube.
வயாகாம்18 – ன் பிராண்டு தூதராக களமிறங்கும் கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி
~ இந்தியாவால் அதிகம் கொண்டாடப்படும் கிரிக்கெட் கேப்டனும், நான்கு முறை ஐபில் தொடரை வென்ற அணியின் தலைவருமான தோனி வயாகாம் நிறுவனத்தின் டிஜிட்டல் திட்டத்தை மேலும் பிரபலமாக்குவார் ~
மும்பை: 8 மார்ச் 2023: தங்களது பிராண்டு தூதராக இந்திய மக்களின் பேரன்பை பெற்ற கிரிக்கெட் கிரிக்கெட் வீரரும், நான்கு முறை ஐபிஎல் போட்டியை வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்எஸ். தோனி நியமனம் செய்யப்பட்டிருப்பதை வயாகாம் 18 அறிவித்திருக்கிறது. நேரலையாக விளையாட்டுகளைப் பார்த்து ரசிப்பதை டிஜிட்டலோடு ஒருங்கிணைந்ததாக ஆக்க வேண்டுமென்ற வயாகாம்18–ன் தொலைநோக்குத் திட்டத்தை தோனி முன்னெடுத்துச் செல்வார்.
கிரிக்கெட் உலகில் அதிகம் மதிக்கப்படும் வீரர்களுள் ஒருவரான தோனி, தங்களது மனம் கவர்ந்த விளையாட்டை கண்டு ரசிக்க டிஜிட்டலை ரசிகர்களின் அதிகம் விரும்பப்படும் செயல்தளமாக ஆக்குவதற்கு வயாகாம்18 உடன் இணைந்து செயல்படுவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான தோனி, ஜியோ சினிமா, ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் அவரது சமூக ஊடக கணக்குகளில் இடம்பெறவிருக்கும் இந்த வலையமைப்பின் பல முன்னெடுப்புகளில் பங்கேற்பார். ‘தல’ என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜியோ சினிமாவில் விரைவில் ஒளிபரப்பப்படவிருக்கும் டாடா ஐபிஎல் விளம்பர படத்தில் தோனி இடம்பெறுவார்.
“’உங்களது சொந்த இல்லத்தில் சௌகரியமாக அமர்ந்திருக்கும்போதோ அல்லது வெளியிடங்களில் இருக்கும்போதோ உங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு நிகழ்ச்சிகளை இணைந்து செயல்படும் திறன், விருப்பத்தேர்வு மற்றும் தனிப்பயனாக்கல் ஆகிய அம்சங்களோடு பார்க்கும்போது தான் அதனை மிகச்சிறப்பாக ரசித்து அனுபவிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், இத்தகைய அம்சங்களை எல்லாம் ஒரு டிஜிட்டல் செயல்தளத்தால் மட்டுமே வழங்க முடியும். ஒருவரால் கற்பனை செய்ய முடியாத வழிமுறைகளில் ரசிகர்களோடு பிணைப்பினை செய்வதன் மூலம் இச்செயல்பாட்டை ஜியோ சினிமா முற்றிலும் புதிய உயரத்திற்கு எடுத்துச்செல்கிறது. இந்த முன்னுதாரண மாற்றம் தான் விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதற்கான எதிர்காலமாக திகழப்போகிறது என்பதால், இதன் ஒரு அங்கமாக பங்கேற்பதற்கு நான் மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.” என்று எம்எஸ். தோனி கூறினார்.
“எம்எஸ் தோனியின் தலைமைத்துவ பண்பும், விளையாட்டின் போக்கையே மாற்றியமைக்கும் திறனும் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரது எளிமையான, இனிமையான ஆளுமைத்திறன், வெளிப்படைத் தன்மையையும், உண்மைத்தன்மையையும் பெரிதும் மதிக்கும் டிஜிட்டல் ஆர்வலர்களை சிறப்பாக ஈர்க்கிறது. விளையாட்டில் நிகரற்ற அளவுகோல்களை நிறுவி, மிக விரைவாக பெறும் வளர்ச்சி கண்ட சாதனையாளரான தோனியின் பண்பியல்புகள், விளையாட்டு நிகழ்ச்சிகளை டிஜிட்டலில் தான் மிகச்சிறப்பாக கண்டு ரசிக்க முடியும் என்ற எங்களது குறிக்கோள் மற்றும் செயல்திட்டத்தோடு மிகச்சிறப்பாக ஒத்துப்போகின்றன.” என்று வயாகாம்18 – ஸ்போர்ட் பிரிவின் தலைமை செயல் அலுவலர் திரு. அனில் ஜெயராஜ் கூறினார்.
“யதார்த்த நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்கின்ற மற்றும் புத்தாக்கம் செய்கின்ற அவரது உள்ளார்ந்த திறனின் வழியாகவே எம்எஸ். தோனி தொடர்ந்து வெற்றிச் சிகரங்களை எட்டி வருகிறார். வயாகாம்18 – ன் டிஜிட்டல் ஃபர்ஸ்ட் என்ற புரட்சிகரமான திட்டத்திற்கு மிகப்பொருத்தமான நபராக இதுவே எம்எஸ். தோனியை நிலைநிறுத்துகிறது. இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கும் தோனியின் ஈர்ப்புத்திறன், நாட்டின் மூலை முடுக்கில் எல்லாம் இருக்கின்ற அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களை சென்றடைய வேண்டும் என்ற இந்த வலையமைப்பின் பெருவிருப்பத்தை நிஜமாக்குவது நிச்சயம்,” என்று எம்எஸ். தோனியின் மேலாளர் (மைதாஸ் டீல்ஸ்), திரு. சுவாமிநாதன் சங்கர் கூறினார்.
டாடா இந்தியன் பிரீமியர் லீக் – ன் (ஐபிஎல்) 2023 சீசன், வரும் மார்ச் 31-ம் தேதி, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தற்போதைய சேம்பியன்ஸ் அணியான குஜராத் டைட்டன்ஸ், எம்எஸ். தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடும் நிகழ்வோடு தொடங்கவிருக்கிறது. இந்த சீசனுக்கு எந்த கட்டணமுமின்றி, அனைத்துப் போட்டிகளும் ஜியோ சினிமாவின் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன. இதற்கும் கூடுதலாக, டாடா ஐபிஎல் – ன் 2023 போட்டித்தொடர் முழுவதிலும் 700 மில்லியனுக்கும் அதிகமான இன்டர்நெட் பயனாளிகளுக்கு புள்ளி விவரங்கள் தொகுப்பு, சேர்ந்து விளையாடும் (பிளே அலாங்) சிறப்பம்சம் ஆகியவற்றின் வழியாக இன்டராக்டிவிட்டி, 4K ஃபீடு, பல்வேறு – மொழிகளில் மற்றும் மல்ட்டி-கேம் பிரசன்டேஷன் என பல சிறப்பம்சங்களை ஜியோ சினிமா வழங்கும்.
ஜியோ, ஏர்டெல், Vi மற்றும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு கிடைக்கப்பெறும் ஜியோ சினிமா, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் விமன்ஸ் ப்ரீமியர் லீக் போட்டிகளை தற்போது நேரலையாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.
ஜியோ சினிமாவை (iOS & ஆண்ட்ராய்டு) பதிவிறக்கம் செய்வதன் மூலம் தங்கள் மனதிற்குப் பிடித்தமான விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் தொடர்ந்து கண்டு ரசிக்கலாம். மிக சமீபத்திய நிகழ்நிலைத் தகவல்கள், செய்திகள், ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் மீது ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம், டிவிட்டர் மற்றும் யூடியூப் மீது ஜியோசினிமாவையும் ரசிகர்கள் பின்தொடரலாம்.