‘பதான்’ திரைப்பட ரேட்டிங்: 3.5/5
நீண்டையில் இடைவெளிக்குப் பிறகு திடத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானை திரையில் கண்டு களிக்க ரசிகர்கள் ஆயத்தமாகி உள்ளனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ளது பதான் திரைப்படம். இந்த படம் புக்கிங் ஓபன் ஆன நிலையிலேயே பல கோடி ரூபாய் வசூலை பிரித்து மேய்ந்துள்ளது.
4 வருடம் ஷாருக்கானின் திரை அவதாரம் இது என்பதாலும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதாலும் வெறித்தனாமாக புக்கிங் செய்துள்ளனர் ரசிகர்கள். ஹிந்தி திரையரங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய ரசிகர்களும் படத்துக்காக மிகப் பெரிய வரவேற்பைத் தந்திருக்கின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டு ஷாருக் நடிப்பில் வெளியான ஜீரோ திரைப்படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அவரது சினிமா வாழ்க்கையில் அமைந்தது. அதன்பிறகு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து கொடுக்கவேண்டும் என அவர் தாமதம் செய்தது, கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் 4 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாகியிருக்கிறது. இதே ஆண்டில் இன்னும் இரண்டு படங்கள் ரிலீசாக இருக்கின்றன.
உலகம் முழுக்க 7500 திரையரங்குகளில் ஷாருக்கான் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் முதல் காட்சியிலேயே கோடிகளில் பல மடங்காக வசூல் பெருகிக் கொண்டிருக்கும். அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைகளிலும் பெரிய படங்கள் எதுவும் வரவில்லை என்பதால் சரியான நேரத்தில் திட்டமிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.
கேஜிஎஃப் 2 படத்தை எப்படி பாராட்டினார்களோ அதைவிட இரு மடங்கு இருப்பதாக படத்தை பிரம்மித்து கூறி வருகின்றனர் ரசிகர்கள். ஷாருக்கானின் எண்ட்ரியே வெறித்தனமாக இருக்கிறது. தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பும் வேறு லெவலில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
பதான் படம் தேசத்துக்காக பாடுபடும் உண்மையான தேசப்பக்தி கொண்ட ஒரு பாதுகாப்பு அதிகாரியின் தியாகத்தையும் நேர்மையையும் எடுத்து கூறும் விதமாக அமைந்துள்ளது. 2019ம் ஆண்டு ஆர்ட்டிக்கிள் 370 ஐ எடுத்த பிறகு நிகழும் ஒரு கதையாகும்.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் இதற்காக ரிவெஞ்ச் எடுக்க முடிவு செய்கிறார். இந்தியாவில் பயிற்சி செய்துவரும் ஒரு தீவிரவாதியான ஜான் ஆப்ரகாமிடம் இதற்கான வேலையை ஒப்படைக்கிறார். ரா உளவு பிரிவு அதிகாரியான டிம்பிள் கபாடியா ஒரு சந்தேகத்துக்குள்ளான பெண்மணி குறித்த தகவலைப் பெறுகிறார். இவரால் இந்தியாவுக்கு ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருப்பதை கணிக்கிறார். அவரை தனக்கு முன்னரே தெரியும் என்பதுபோல அவருக்கு தோன்றுகிறது. இதனால் இந்தியாவுக்காக வேலை செய்யும் ஒரு ரா ஏஜெண்ட்டை சந்தித்து இதுகுறித்து பேசி அசைன்மண்ட்டை தர தீர்மானிக்கிறார்.
ஆனால் வழக்கம்போல கதாநாயகன் தனது பணியிலிருந்து விடுபட்டு தனது சொந்த வாழ்க்கை சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார். அவரது பின்கதையில் தீபிகா படுகோன் இருக்கிறார். எதனால் இப்படி இருக்கிறார் என்பதை கொஞ்சம் குழப்பி நம்மை அரைத்த மாவையே அரைத்து புளித்த தோசையைப் பறிமாறியிருக்கிறார்கள்.
புளித்த மாவு தோசை என்றாலும் காஸ்ட்லியான தோசை தான் என நம்பவைத்து பயங்கரமான பிரசென்டேசன்களைச் செய்து தங்கத்தால் ஆன தட்டில் வைத்து பறிமாறி நம்மை கதையோட்டத்தில் இழுத்து செல்கிறார்கள். வழக்கமான கதாநாயக துதிபாடல்கள் நிறைந்த ஆக்ஷன் படம் என்றாலும் இந்த படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். இதுமாதிரி நிறைய படங்களில் கதை வந்திருக்குறது ஆனா இதுதான் பர்ஸ்ட் டைம் என்பது போல, ஷாருக்கானே இதுமாதிரி 3,4 படங்களில் நடித்திருந்தாலும் இது வித்தியாசமான படம் என்பதை நம்ப வைக்க உங்களுக்கு பல காட்சிகளை நுழைத்திருக்கிறார்கள்.
ஜேம்ஸ் பாண்டு படத்தைப் போல ஒரே மாதிரியான பேட்டர்ன் கதைதான் ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யமாக்கி நேரம் போனதே தெரியாத மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள். இந்நிலையில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பதான் திரைப்படமானது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று ரிலீஸாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கானை அவரது ரசிகர்கள் திரையரங்குகளின் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.
‘பதான்’ ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும்.