05 ஜனவரி 2023
சென்னை.
பிளாக் ஷீப் டிவிக்காக ஒன்றுகூடிய 90ஸ் டெலிவிஷன் தொகுப்பாளர்கள்!
Coimbatore InterCity Express Carries #BlacksheepTV promotion 🥳
.
உங்களை தேடி உங்கள் வீடுகளில் – @TVBlacksheep விரைவில்
24 மணி நேரமும் கட்டணமின்றி @bs_value App மூலம் உங்கள் உள்ளங்கைகளிலும் ❤
#Blacksheepschikkubukku #blacksheeptvupdate #blacksheeptv #bsvalueapp
பிளாக் ஷீப் நிறுவனமானது இணையத்தில் பார்வையாளர்களை மகிழ்வித்தும், அவர்களுக்கு சமூக கருத்துக்களை எளிய முறையில் நகைச்சுவை கலந்த பாணியில் தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை சிறப்பாக வழங்கி வருகிறது. பிளாக் ஷீப் நிறுவனம் அதன் அடுத்த கட்டமாக பிளாக் ஷீப் டிவி மூலம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி துறையில் கால் தடம் பதிக்க உள்ளது. தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் வைகைப்புயல் வடிவேலுதான் பிளாக் ஷீப் தொலைக்காட்சியின் பிரதிநிதியாக (அம்பாசிடராக) உள்ளார்.
ஜனவரி 10 ஆம் தேதி தனது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராக இருக்கும் பிளாக் ஷீப் நிறுவனம், முதல்கட்டமாக அதற்கான விளம்பர நிகழ்வை இன்று ஆரம்பித்திருக்கிறது. சென்னை முதல் கோயமுத்தூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி முழுவதும் பிளாக் ஷீப் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த ஸ்டிக்கர்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ரயிலை 90களில் தொலைக்காட்சியின் வாயிலாக நம்மை கவர்ந்த தொகுப்பாளர்கள் அர்ச்சனா ,விஜய் ஆதிராஜ் , விஜய்சாரதி, டாப் 10 சுரேஷ், ஜேம்ஸ் வசந்தன் , மெட்ரோ ப்ரியா மற்றும் பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதியம் 02:30 மணிக்கு நடைபெற்றது.