‘ட்ரிகர்’ திரைப்பட ரேட்டிங்: 2.5/5
இயக்குனர் ஷாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ட்ரிகர். இந்த படத்தில் அதர்வா, தன்யா, அருண் பாண்டியன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ், மிராக்கிள் மூவீஸ் சேர்ந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான அதர்வாவின் ட்ரிகர் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
தந்தை மீது சுமத்தப்படும் களங்கத்தை நீக்க போராடும் மகன் பாச போராட்டம் தான் படத்தின் ஒன் லைன். படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பிரபாகரன்(அதர்வா) இருக்கிறார். அவர் ஒரு கடத்தல் கும்பலை பிடிக்க செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பிரச்சனையில் பிரபாகரன் சிக்கி வேலை பறிபோகிறது. இருந்தாலும் அண்டர் கவர் போலீசாக இருந்து காவல்துறையினர் செய்யும் தவறுகளை கண்காணிக்கும் வேலை பிரபாகரனுக்கு கொடுக்கப்படுகிறது.
படத்தின் கதை:
இன்னொரு பக்கம், வில்லன் மைக்கேல் சிறை கைதிகளையும், அடியாட்களையும் ஒன்றிணைத்து குழந்தைகளை கடத்துகிறான். எதிர்பாராத ஒரு சம்பவத்தில் ஹீரோ – வில்லன் இருவருமே மோதிக் கொள்ள நேர்கிறது. இந்த பிரச்சனையின் பின்னணியில் ஹீரோ தந்தையின் கடந்த காலமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதை பிரபாகரன் கண்டுபிடிக்கிறார். இறுதியில் குழந்தைகள் கடத்தப்படுவது எப்படி? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? ஹீரோவின் தந்தைக்கும் இந்த கும்பலுக்கும் என்ன சம்பந்தம்? கடத்தல் கும்பலை ஹீரோ ஒலித்தாரா? என்பதை படத்தின் மீதி கதை.
படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டும் போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார். வழக்கம்போல் தன்னுடைய ஆக்சன் காட்சிகளிலும், எமோஷன் காட்சிகளிலும் அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பா மீது சுமந்த களங்கத்தை நீக்க துடிக்கும் ஒரு பாசமான மகனாக எல்லோரும் மனதிலும் அதர்வா இடம் பிடித்திருக்கிறார். அதர்வாவுக்கு ஜோடியாக தன்யா நடத்தி இருக்கிறார். காதல் காட்சிகளோ, டூயட் பாடல்கள் இல்லாத ஒரு அற்புதமான காதல் என்று சொல்லலாம்.
மேலும், அதர்வாவின் அப்பாவாக அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். காவல்துறையில் கடமை தவறாமல் பணியாற்றும் அதிகாரியாக அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல் வித்தியாசமான முறையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஷாம் ஆண்டன். ஆனால், ஒரு சில காட்சிகள் வழக்கமான போலீஸ் கதையாக இருக்கிறது. அதர்வா நடித்த 100 படத்திலேயே பல பயங்கர பரபரப்பை கொடுத்திருந்தார் ஷாம் ஆண்டன்.
இந்த படத்திலும் திரில்லிங்கும் சஸ்பென்சுக்கும் பஞ்சம் இல்லாமல் கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்.
வில்லனாக ராகுல் தேவ் செட்டி நடித்திருக்கிறார். ஆனால், இவருடைய உருட்டல், மிரட்டல் எதுவும் பெரிதாக எடுபடவில்லை என்று தான் சொல்லணும். படத்திற்கு பாடலுக்கான அவசியமே இல்லை என்பது போல தான் இருக்கிறது. ஆனால், ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. அனாதை ஆசிரமம், குழந்தை கடத்தல் என்ற கான்செப்ட் பல படங்களில் பார்த்தாலும் இந்த படத்தில் சில வித்தியாசமான விஷயங்களை காண்பித்திருக்கிறார் இயக்குனர்.
முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதியில் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றிருக்கிறது. ஆனால், சில தேவையற்ற காட்சிகளை நீக்கியிருந்தால் படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்திருக்கலாம். பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு அதர்வாவின் ட்ரிகர் ஓகே என்று சொல்லலாம்.
பிளஸ்:
அதர்வாவின் நடிப்பு சிறப்பு.
தந்தை மகனின் பாச கதை.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.
மைனஸ்:
திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் இயக்குனர் செலுத்தி இருக்கலாம்.
முதல் பாதி மெதுவாக செல்கிறது.
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்.
தேவையில்லாத பாடல்கள்.
வழக்கமான குழந்தை கடத்தல் கதை.
மொத்தத்தில் ட்ரிகர் – பாய்ண்டை நோக்கி