full screen background image
Search
Saturday 7 September 2024
  • :
  • :
Latest Update

ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ “சர்க்கார் வித் ஜீவா” 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது !!!

ஆஹா தமிழ் தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ “சர்க்கார் வித் ஜீவா” 16 செப்டம்பர் முதல் ப்ரீமியர் ஆகிறது !!!

ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் கலந்துகொள்ளும் நேர்த்தியான இந்த ‘நோ ரூல்ஸ்’ கேம்ஸ் ஷோவினை நடிகர் ஜீவா தொகுத்து வழங்குகிறார்.

100% தமிழ் பொழுதுபோக்கு OTT தளமான ஆஹா தமிழ் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான ‘சர்கார் வித் ஜீவா’ செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது. தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு இந்தியன் ஐடல் நந்தமூரி பாலகிருஷ்ணா வழங்கும் தெலுங்கில் அன்ஸ்டாப்பபிள்ஸ் வித் NBK, சமந்தாவுடன் SAMJAM போன்ற பிரமாண்ட ஷோ வை போல், இந்த ஷோவும் பிரமாண்டமானதாக இருக்கும். தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் ஆஹா, 100% உள்ளூர் பொழுதுபோக்கு OTT இயங்குதளம் என்கிற சிறப்பில், அதன் தமிழ் பதிப்பிற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஆஹா தமிழுக்கென பிரத்யேகமாக படைப்புகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது. தமிழின் முன்னணி நடிகர் ஜீவா, ஒவ்வொரு வாரமும் 4 பிரபலங்கள் விளையாடும் இந்த தனித்துவமான கேம் ஷோவில் தொகுப்பாளராக தனது OTT அறிமுகத்தை தொடங்க உள்ளார்.

இதைப் பற்றி நடிகர் ஜீவா கூறியபோது.., “எல்லோரும் SMS பட ஜீவாவை மீண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் என்னை மீண்டும் அப்படி பார்ப்பது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் விளையாட்டின் விதிகளை வளைக்கும் ஆற்றலுடன் இயங்கும், ஒரு இனிமையான தொகுப்பாளராகவும் பார்ப்பார்கள். சர்க்கார் எனும் இந்த கேம் ஷோவினை நான் மிகவும் ரசித்தேன், என் ரசிகர்களும் இதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன்!”

@ahatamil ’a First Reality SHOW, #SarkaarWithJiiva to premier with a bang on 16th Sep, 4 Celebrities to feature every week ‘NO RULES’
Game Show host @JiivaOfficial

#SarkaarWithJiiva @officialskyexch @VasanthAndCo_IN #PriyadarshiniMobiles @OsmanARazak

ஒவ்வொரு எபிஸோடிலும் நான்கு பிரபலங்கள் கலந்து கொள்ளும் ‘சர்கார் வித் ஜீவா’ ப்ரோமோவில் “இங்க ஆடறது தான் அவங்க, ஆனா ஆட்டம் என்னோடது (அவர்கள் விளையாட வந்திருக்கலாம், ஆனால் நான்தான் இங்கே உண்மையான வீரர்)” என்று ஜீவா கூறுவது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இந்த கேம் ஷோவில் பெரும் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் விரும்பும் பிரபலங்களான யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் வைபவ் ஆகியோர் முதல் எபிசோடை துவங்கி வைப்பது ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது. கேள்வி பதில் அடிப்படையிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவார்கள், 10 சுற்று கேள்விகளுக்கு ஏலம் விடுவார்கள். நட்சத்திரங்களைப் பற்றி இதுவரை கேள்விப்படாத ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேள்விகளுடன் பொழுதுபோக்கும் கலந்து, இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்தை உறுதியளிக்கிறது.

ஆஹா தளத்தின் CEO, அஜித் தாக்கூர் கூறும்போது..,
“ஆஹா அதன் பார்வையாளர்களுக்கு 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை மிக உயர்ந்த தரத்துடன் வழங்க உறுதி எடுத்துள்ளது. நேர்த்தியான மாறுபட்ட அனுபவத்துடன் கூடிய ரியாலிட்டி ஷோக்களை உருவாக்குதில் ஆஹா சிறந்து விளங்குகிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த ‘கேம் ஷோக்களை’ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான பொழுது போக்கும் அசத்தலான வேடிக்கையுடனும் நடிகர் ஜீவா 52 நட்சத்திரங்கள் கலந்து கொள்ள 13 வார நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார். ஆஹா தமிழ் 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை வழங்கும் பிளாட்ஃபார்ம். பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் (ஜிவி 2, குருதி ஆட்டம், மாமனிதன், கூகுள் குட்டப்பா, மன்மத லீலை, ரைட்டர்) மற்றும் பல்வேறு வகைகளில் (அம்முச்சி 2, ஈமோஜி, ஆன்யாஸ் டுடோரியல், ஆகாஷ் வாணி, இரை) அசல் வெப் தொடர்கள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்று வருகிறது. அடுத்ததாக வெளியாகவுள்ள ‘சர்கார் வித் ஜீவா’ ரியாலிட்டி ஷோக்களில் தனித்துவமானதாக ரசிகர்களை கவரும். நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.1/. உடன் சிறந்த ஒளிபரப்பு சேவையினை ஆஹா தளம் வழங்கி வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *