லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் தொடரின் பிரீமியருக்கு முன் இறுதி ட்ரெய்லர் வெளியீடு
மும்பை, இந்தியா —ஆகஸ்ட் 24, 2022 — பிரைம் வீடியோ வழங்கும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவரின் இறுதி டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இரண்டாம் காலத்தில் மத்திய பூமியின் விரிவாக்கத்தையும் டோல்கீனின் புகழ்பெற்ற மற்றும் அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்கள் எப்படி முரண்பாடுகளைக் கடந்து அதிக தூரம் பயணித்து மத்திய பூமிக்கு வரும் தீங்குகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதை இந்த இரண்டு நிமிடம் மற்றும் 36 வினாடிகள் கொண்ட இந்தப் புதிய டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்புதிய தொடரில் தீங்குக்கு எதிராக விதியின் சோதனைக்கு எப்படி பல்வேறு கதாபாத்திரங்கள் உள்ளாகின்றன என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய கதாபாத்திரங்களான கலாட்ரியல் (மார்ஃபிட் கிளார்க்), எல்ராண்ட் (ராபர்ட் அராமயோ), ஹை கிங் கில்-கலாட் (பெஞ்சமின் வாக்கர்) மற்றும் செலிபிரிம்பர் (சார்லஸ் எட்வர்ட்ஸ்); ஹார்ஃபூட்ஸ் எலனோர் “நோரி” பிராண்டிஃபுட் (மார்கெல்லா கவெனாக்) மற்றும் லார்கோ பிராண்டிஃபுட் (டிலான் ஸ்மித்); தி ஸ்ட்ரேஞ்சர் (டேனியல் வெய்மன்); நியூமெனோரியன்ஸ் இசில்டுர் (மாக்சிம் பால்ட்ரி), ஈரியன் (எமா ஹார்வத்),
எலெண்டில் (லாயிட் ஓவன்), பாராசன் (டிரிஸ்டன் கிராவெல்),
மற்றும் குயின் ரீஜண்ட் மிரியல் (சிந்தியா அடாய்-ராபின்சன்); ட்வார்ப்ஸ் கிங் டுரின் III (பீட்டர் முல்லன்), பிரின்ஸ் டுரின் IV (ஓவைன் ஆர்தர்), மற்றும் பிரின்சஸ் திசா (சோபியா நோம்வெட்); சவுத்லேண்டர்ஸ் ஹால்பிரண்ட் (சார்லி விக்கர்ஸ்); ப்ரோன்வின் (நசானின் போனியாடி); மற்றும் சில்வன்-எல்ஃப் அரோண்டிர் (இஸ்மாயில் குரூஸ் கோர்டோவா). ஆகியோர் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளனர்
இந்த பல சீசன் சித்திரத்தின் முதல் இரண்டு எபிசோடுகள் பிரைம் வீடியோவில் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகம் முழுவதும் செப்டம்பர் 1-2 வெள்ளியன்று (நேர மண்டலம் சார்ந்தது) வெளியாகும் மற்றும் வாரந்தோறும் புதிய எபிசோடுகள் கிடைக்கும்.