full screen background image
Search
Saturday 7 September 2024
  • :
  • :
Latest Update

Mr, Miss & Mrs. Thamizhagam 2022 winners are Mr. Arun, Ms. Amritha and Mrs. Aparna.

Mr, Miss & Mrs. Thamizhagam 2022 winners are Mr. Arun, Ms. Amritha and Mrs. Aparna.
It was glitz and glamour at the mega finale of the Indian media works MR, MISS & MRS Thamizhagam onboard the ITC Grand Chola on Aug 16th. Stars descended on the venue to join the participants from across the state as judges decided to select the best emerging talents. The show was choreographed by India’s leading fashion choreographer Faheem.

The event has two rounds. A traditional and western round. There were 30 participants in Mr. Category, 25 participants in miss category and 12 participants in Mrs. Category.

Star-Studded Attendance:shabbir Ali Qureshi (Bollywood actor – Mumbai), Shalini Chopra (Celebrity fashion influencer – Bangalore) , Nishat Afroze (Fashion stylist and lifestyle influencer- Kolkata), Manikandan (Mr. Fashion world – India), Varsha Venugopal ( Miss. Thamizhagam – 2021)

The lucky winners who won over the audience with their talent & the Grand Finale Winners of Mr, Miss, Mrs. Thamizhagam 2022:-

Mr. Thamizhagam 2022: Arun

Miss Thamizhagam 2022: Amritha

Mrs. Thamizhagam 2022: Aparna

The winners will represent the country at international platforms in Dubai organized by Indian Media Works.

Helping Hand: The funds raised in the event will be donated towards supporting the farmers.

Speaking about the event organizer John Amalan, he said, “Our mission is to scout fresh faces across the country and present them to the world. This platform offers them the gateway to an exciting new career in fashion.. We hope to unearth the next big stars in this great country of ours.”

However, along with the glamour, there is a serious mission to serve and reach out to the needy. Every year, Indian Media Works conducts several events in order to appreciate the positive change-makers in our society as well as to make monetary contributions towards social causes. Therefore, this extraordinary occasion not only aims at recognizing the stars of tomorrow but has a noble objective to give back to society, especially in this period of pandemics and crises. The funds raised in this event will be contributed towards supporting the farmers, monetarily or in kind.

மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 க்கான மாபெரும் அழகிப் போட்டியில் மிஸ்டர் தமிழகம் பட்டத்தை அருண், மிஸ் தமிழகம் பட்டத்தை அம்ரிதா,மிஸஸ் தமிழகம் பட்டத்தை அபர்ணா உள்ளிட்டோர் தட்டிச் சென்றனர்

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் *மிஸ்டர்,மிஸ்,மிஸஸ்-2022* க்கான இறுதிச்சுற்றில் மிஸ்டர் தமிழகம் பட்டத்தை அருண்,
மிஸ் தமிழகம் பட்டத்தை அம்ரிதா, மிஸஸ் தமிழகம் பட்டத்தை அபர்ணா ஆகியோர் வெற்றி பெற்று பட்டங்களை தட்டிச் சென்றனர்.

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தற்போது மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 இறுதிப்போட்டியை உலகத்தரத்தில் மிகப் பிரமாண்டமாக சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடத்தியது

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மிஸ்டர் பிரிவில் 30 நபர்களும், மிஸ் பிரிவில் 25 நபர்களும் மிஸஸ் பிரிவில் 12 நபர்களும் கலந்து கொண்டனர், பாரம்பரிய உடை மற்றும் வெஸ்டர்ன் உடைகள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்… போட்டியாளர்கள் பாரம்பரிய உடை மற்றும் வெஸ்டர்ன் உடைகளை அணிந்து அனைவரையும் கவரும் விதமாக ஒய்யாரமாக மேடையில் நடை போட்டனர்.

ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற அழகிப்போட்டி நிகழ்ச்சியில் அழகும், திறமையும் வாய்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 இறுதிப் போட்டியின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜான் அமலன் மற்றும் சினேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்

மேலும் ஷபீர் அலி குரேஷி,(பாலிவுட் நடிகர் – மும்பை ),ஷாலினி சோப்ரா,( செலிபிரிட்டி ஃபேஷன் இன்ஃப்ளூயன்சர் – பெங்களூர் ),நிஷாத் அப்ரோஸ்,( ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் & லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளூயன்ஸர் – கொல்கத்தா ),மணிகண்டன், ( Mr Fashion World – India ),வர்ஷா வேணுகோபால்,(மிஸ் தமிழகம் 2021)உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்

இறுதிச்சுற்று அழகிப்போட்டி நிகழ்ச்சியை பிரபல ஃபேஷன் கோரியோகிராஃபர் ஃபாஹீம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 இறுதி சுற்று போட்டியில் மிஸ்டர் தமிழகம் 2022-க்கான போட்டியில் வெற்றிபெற்ற அருணுக்கு பாலிவுட் நடிகர் சபீர் பட்டத்தை வழங்கினார், அதேபோல்மிஸ் தமிழகம் 2022-க்கான போட்டியில் வெற்றி பெற்ற அம்ரிதாவுக்கு நடிகை ஷிவானி ராஜசேகர் பட்டத்தை வழங்கினார் மற்றும் மிஸஸ் தமிழகம் 2022-க்கான போட்டியில் *வெற்றி பெற்ற அபர்ணாவுக்கு நடிகை ஷிரின் கான்ச்வாளா ,சினேகா ஆகியோர் இணைந்து பட்டத்தை வழங்கினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விரைவில் துபாய் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மாபெரும் போட்டியின் வாயிலாக கிடைத்த தொகையானது விவசாயிகள் மற்றும் விவசாய திட்டங்களுக்கு உதவும் வகையில் வழங்கப்படுமென இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜான் அமலன் தெரிவித்தார்.

ஜான் அமலன் ஏற்பாட்டில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் மாபெரும் விழாவாக அமைந்திருந்தது…




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *