full screen background image
Search
Sunday 8 September 2024
  • :
  • :
Latest Update

பாலிவுட், கோலிவுட் பிரபலங்களின் பாராட்டை குவிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’

பாலிவுட், கோலிவுட் பிரபலங்களின் பாராட்டை குவிக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’

தனுஷ் முதல் வித்யா பாலன் வரையிலான கோலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொண்டாடும் அமேசான் ப்ரைம் வீடியோவின் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் நீண்ட வடிவிலான அசல் தமிழ் தொடரான ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. இந்த வலைதள தொடர் உலகளாவிய அளவில் பார்வையாளர்களின் இதயங்களையும், அவர்களது ஆன்மாக்களையும் வென்றிருக்கிறது. படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி இந்த தொடர் மூலம் தங்களின் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்த தொடரை பார்த்து ரசித்தவர்கள், இணையவாசிகள், திரைப்படத்துறையினர் என அனைவரும் கை வலிக்க கைகுலுக்கி படக்குழுவினரையும், இந்த தொடரையும் பாராட்டியுள்ளனர்.

பாலிவுட்டை சேர்ந்த இயக்குநர்கள் ஹன்சல் மேத்தா, அனுராக் காஷ்யப், நடிகை வித்யா பாலன், நடிகை பூமிகா பட்நாகர், நடிகர் விக்ராந்த் மாஸே, எழுத்தாளர் சேத்தன் பகத், தயாரிப்பாளர் குனீத். மோங்கா, நடிகர் தனுஷ், நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடரை கண்டு ரசித்த அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” சுழல் = தி வோர்டெக்ஸ் அற்புதமான கிரைம் திரில்லர் தொடர். முழுவதும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் தொடர். இதில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஆர். பார்த்திபன் உள்ளிட்ட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் தொடரை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி உண்மையிலேயே குறிப்பிடத்தக்க திறமைசாலிகள். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பிரபலமான இந்தி திரைப்பட இயக்குநர் ஹன்சல் மேத்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடரில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. இந்தத் தொடரை முழுமையாக காண்பதற்கான விருப்பமும் இருக்கிறது. நுட்பமாக எழுதப்பட்ட திரைக்கதை மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த தொடர் முழுநீள கவர்ச்சியான துடிப்பான திரில்லர் என குறிப்பிடலாம்.” என பதிவிட்டிருக்கிறார்.

முன்னணி பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” நம்பிக்கை தரும் படைப்பாளிகளான புஷ்கர் & காயத்ரி அவர்கள் மீண்டும் ஒரு நம்பக்கூடிய வகையிலான படைப்பை வழங்கி, தங்களின் திறமையை இரண்டு புதிய இயக்குநர்களுடன் இணைந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர் தனித்துவமான எழுத்து, காட்சி கோணங்கள்.. என புத்திசாலித்தனமான அசல் தொடராகவும், ஒப்பற்ற தலை சிறந்த படைப்பாக வெளியாகியிருக்கிறது. குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகை வித்யாபாலன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடருக்காகவும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பிற்காகவும் அனைவராலும் பாராட்டப்படுவார். ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ எனும் பெயருக்கேற்றபடி உண்மையாக இந்த கிரைம் திரில்லர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னை ஆழமாக இழுத்துச் செல்கிறது. ரெஜினாவாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி அவர்களை இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் காண இருக்கிறீர்கள். இதற்காகவே இந்தத் தொடரை அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என‌ பதிவிட்டிருக்கிறார்.

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” நான் எப்போதும் புஷ்கர் & காயத்திரி அவர்களின் படைப்புகளுக்கு ரசிகன். இந்த வார இறுதியில் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இதன் முன்னோட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது. முழு தொடரும் பரபரப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடரின் குழுவினருக்கு வாழ்த்துக்களுடன் அன்பையும், அதிர்ஷ்டத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” நான் தற்போது மூன்றாவது அத்தியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். பார்ப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை. நடிகர் கதிர் கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறார். இதற்காக புஷ்கர் & காயத்ரி அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ தொடர் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருக்கிறார்.

எழுத்தாளர் சேத்தன் பகத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், ” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடரை கண்டு ரசித்தேன். சூழ்ச்சிகள், மர்மங்கள், ரகசியங்கள் நிறைந்த திரில்லர். அத்துடன் இது ஒரு விஷுவல் ட்ரீட். அற்புதமான கதை சொல்லல், கதாபாத்திரங்கள் நேர்த்தியாக எழுதப்பட்டு உயிர்ப்புடன் உள்ளன. கதை பார்வையாளர்களை இறுதிவரை கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்தத் தொடரை நீங்கள் காண்பதற்கு தவறவிடாதீர்கள். ‘சுழல் =தி வோர்டெக்ஸ்’ குழுவினருக்கும் அமேசான் பிரைம் வீடியோவிற்கும் வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகை பூமி பட்நாகர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” இன்று அமேசான் பிரைம் வீடியோவில் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர் வெளியாகியிருக்கிறது. இதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு கதை உண்டு. ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, கதிர் என ஒவ்வொரும் தங்களுடைய அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்.” என பதிவிட்டிருக்கிறார்.

பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” இந்தியாவில் தற்போது நடைபெறும் மூச்சடைக்க கூடிய கதை சொல்லல். திரைப்பட தயாரிப்பில் புதிய பரிணாம வளர்ச்சியின் சக்திவாய்ந்த சாட்சியாக ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர் அமைந்திருக்கிறது. புஷ்கர் & காயத்ரி பரபரப்பான மர்மத்தை ஒன்றாக இணைந்து கொண்டுவருகிறார்கள். இது தெற்கிலுள்ள விசித்திரமான நகரத்தை தொந்தரவு செய்யும் விவரிக்க முடியாத சூழ்நிலைகளை ஆராய நம்மை அழைக்கிறது. நவீன சினிமா வாழ்க்கையைவிட பெரிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் உள்ளூர் கலாச்சாரங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலம் உயிர்ப்புடன் வழங்கப்படும் ஒரு முக்கிய திரில்லராக இந்தத் தொடர் இருக்கிறது. இதற்காக அமேசான் பிரைம் வீடியோவிற்கும் ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ தொடர் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், ” சுழல் = தி வோர்டெக்ஸ் தொடரில் என்னுடைய சகோதரர் சாம் சி. எஸ். அவர்களின் டைட்டில் பாடல் வியக்க வைத்தது. பின்னணி இசையும் பரபரப்பாக கதையோட்டத்துடன் இணைந்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

புலனாய்வு திரில்லரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் நீண்ட வடிவிலான தமிழ் அசல் தொடராகும். இது உலகளவில் பார்வையாளர்களை புயலாக தாக்கியிருக்கிறது. இந்த தொடர் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது.

From Dhanush to Vidya Balan and Samantha Prabhu, these celebrities are all praise for Amazon Prime Video’s Suzhal- The Vortex

Amazon Prime’s most awaited Suzhal- The Vortex has finally been released and there is no doubt that the the streaming service’s first long form original series is taking over the hearts and souls of the global audience. Pushkar and Gayatri have once again proved themselves to be masterminds with the success of their latest creation and everybody including netizens and the film fraternity are all praise for the series.

Taking to their social media, several Indian celebrities praised Suzhal – The Vortex.

Popular actor Dhanush says “ An amazing crime thriller! #Suzhal is a series that will keep you hooked throughout!”

Proclaimed Indian director Hansal Mehta shared “ there is something about Suzhal that keeps you wanting more until you get closure. Intricately written and well-detailed characters, a gripping narrative, and a pulsating thriller is #Suzhal”

https://www.instagram.com/p/Ce5upZbjM73/?igshid=YmMyMTA2M2Y=

Bollywood director Anurag Kashyap says “The ever-dependable and trustworthy @pushkar.gayatri have done it again. Armed with two new directors, Suzhal is an exceptionally written, shot , brilliant most original series. A total masterpiece”.

https://www.instagram.com/p/Ce6HpycKaKV/?igshid=YmMyMTA2M2Y=

Bollywood actress, Vidya Balan was all praise for the series and Sriya Reddy’s performance. She said “True to its name ‘the vortex’, this crime thriller keeps pulling me in deeper with each episode. @sriya_reddy as Regina is the most fearless thing you’re gonna see in a while🔥 strongly recommend Suzhal”

https://www.instagram.com/p/Ce6Og_Utq5t/?utm_source=ig_web_copy_link

Actress Samantha Ruth Prabhu says “Always been a fan of @pushkar.gayatri’s work. Looking forward to binge-watch #Suzhal this weekend. The trailer looked exciting and I am sure the entire series will be even more thrilling. Wishing the entire team of Suzhal lots of love & luck :)”

https://www.instagram.com/p/Ce6ZNU0hGvI/?utm_source=ig_web_copy_link

Taking to his social media, Vikrant Massey says “ Already on my 3rd episode and can’t stop watching”.

https://www.instagram.com/p/Ce6VYVtoEy2/?utm_source=ig_web_copy_link

Indian author Cheran Bhagat says “Loved Suzhal: The Vortex, a thriller that is full of intrigue, mysteries, and secrets, it is a visual treat!”
https://www.instagram.com/p/Ce6Pff3IJyi/?utm_source=ig_web_copy_link

Actress Bhumi Pednekar writes “Started Suzhal on @primevideoin today!”
https://www.instagram.com/p/Ce6WnFpInCM/?utm_source=ig_web_copy_link

Producer Guneet Monga writes, “Suzhal is a powerful reminder of the evolution of breathtaking storytelling and filmmaking happening right now in India.

https://www.instagram.com/p/Ce6BRSOo6b0/?igshid=MDJmNzVkMjY=

Music composer Anirudh composes “ What a watch Suzhal has been, my brother @samcsmusic the title track is on fire!” https://www.instagram.com/p/Ce6kG-bPwVu/?utm_source=ig_web_copy_link

The investigative thriller Prime Video’s first long-form Tamil original and it has certainly taken the global audience by a storm. The series is currently streaming on Prime Video in over 30 languages across 240 countries and territories.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *