‘தி ஹிட்டன் புரொடெக்டர்’ திரைப்பட ரேட்டிங்: 4.5/5
CAST & CREW
Wei Zhang as Briar
Bingjun Zhang as Bramble
Xiao Tan as Vick
Bingbing Wang as Niannian
Siyu Wang as Maodou
‘தி ஹிட்டன் புரொடெக்டர்’ இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற படம்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு விறுவிறுப்பான அனிமேஷன் சாகச திரைப்படமாக இந்த வாரம் வெளியாகிறது. பிரையர், பிராம்பிள் மற்றும் விக் ஆகிய மூவரும் நியான் என்ற புராண கதாபாத்திரத்தை தேடி செல்லும் போது எதிர்பாராத விதமாக மாய சக்திகள் நிறைந்த உலகிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு நடக்கும் சம்பவங்கள் மனிதர்களின் உலகையும், மந்திர உலகையும் காப்பாற்றும் பெரிய போராட்டத்துக்குள் இவர்களை இழுத்துச் செல்கின்றன.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் காட்சியமைப்பும் அனிமேஷனும் தான். சீன பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட உலகம் கண்களை கவர்கிறது அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் colour tone மற்றும் lighting 👌🏻. அதிரடியான சண்டைக் காட்சிகள், மாய சக்திகள் மற்றும் வண்ணமயமான காட்சிகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
கதையில் நகைச்சுவைக்கும் நல்ல இடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் கலகலப்பான செயல்கள் குழந்தைகளிடம் நல்ல சிரிப்பை வரவழைக்கின்றன. அதே நேரத்தில் தவறுகளை ஒப்புக்கொள்வது, குடும்பத்தின் அன்பை மதிப்பது மற்றும் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது போன்ற நல்ல கருத்துகளையும் படம் இயல்பாக சொல்லுகிறது.
சில இடங்களில் சீன புராணக் கதைகள் பற்றிய பின்னணி தெரியாதவர்களுக்கு சில விஷயங்கள் முழுமையாக புரியாமல் போகலாம். இருந்தாலும் அது படத்தின் மொத்த சுவாரசியங்களை பெரிதாக பாதிக்காது. படத்தின் இறுதியில் அன்பு தான் இவ்வுலகில் முக்கியம் என்ற கோட்பாட்டுடன் முடித்திருப்பது சிறப்பம்சம்.
மொத்தத்தில் ‘தி ஹிட்டன் புரொடெக்டர்’ சுவாரஸ்யமான சாகசம், நகைச்சுவை மற்றும் குடும்ப பாசம் ஆகியவற்றை இணைத்து தரமான பொழுதுபோக்கை வழங்கும் ஒரு சிறந்த அனிமேஷன் திரைப்படமாக திகழ்கிறது.






















