full screen background image
Search
Saturday 25 April 2026
  • :
  • :
Latest Update

வாய்தா திரைப்பட விமர்சனம்

வாய்தா திரைப்பட ரேட்டிங்:3.5/5

Trending Cinemas Now
Homeசினிமா செய்திகள்வாய்தா (பட விமர்சனம்)
சினிமா செய்திகள்விமர்சனம்
வாய்தா (பட விமர்சனம்)
by Jai ChandranMay 16, 202269

படம்: வாய்தா

நடிப்பு: நாசர், மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர்சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர்

தயாரிப்பு: வராஹா சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார்

இசை-லோகேஸ்வரன்

ஒளிப்பதிவு-சேதுமுருகவேல் அங்காரகன்

இயக்கம்: மகிவர்மன்.சி.எஸ்

பி.ஆர். ஒ: யுவராஜ்

பணத்துக்கும், உறவுகளுக்கும் நீதி எப்படி வளைகிறது. எளியவர்க்கும், ஏழைக ளுக்கும் அது எப்படி இருட்டடிப்பு செய்யப் படுகிறது என்பதை சிவப்பு சிந்தனை யுடன் துணிச்சலாக பேசியிருக்கிறது வாய்தா.

சலவை தொழிலாளி ராமசாமி மீது இருசக்கர வாகனம் மோத அவரது தோள்பட்டை எலும்பு முறிகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பூட்டி வைக்கிறார். விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமிடயிடம் பேச்சுவார்த்தை நடத்தி சொர்ப்ப பணத்தை நஷ் ஈடாக தர முயல்கிறார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக் கிறார் முக்கியபுள்ளி. போலீஸ் வந்து ராம்சாமியை மிரட்டுகிறது. படிப்படியாக மோதல் முற்றி விவகாரம் கோர்ட்டுக்கு செல்கிறது. அங்கு நீதியை எப்படி தங்களுக்கு சாதமாக சிலர் வளைக்கின் றனர் என்பதை பட்டவர்த்தனமாக படம் விளக்குகிறது.

ஒரு சிறிய சம்பவத்தை கருவாக எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு சாதி அரசியல் நடக்கிறது என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசியி ருக்கிறார் இயக்குனர் மகிவர்மன் சி.எஸ்.

பெரியவர் ராமசாமிக்கு ஆதரவாக வாதாட முன்வரும் வக்கீல், “வரும் நஷ்ட ஈடு பணத்தில் தனக்கு எவ்வளவு பர்சன்டேஜ் மற்றவர்களுக்கு எவ்வளவு பர்சன்டேஜ் தரவேண்டும்” என்று கணக்கு சொல்வதும் அவரே நீதியை விலைபேசுவதும் கத்தரிக்கு தப்பி வந்த கடுமையான காட்சிகள்.

ஒவ்வொரு முறையும் வாய்தா கொடுத்து இழுத்தடிக்கும்போது வழக்கு நடத்து வதின் கஷ்டத்தை உணர்த்துகிறது.
இறுதிதீர்ப்பு வரும்போது இருப்பதும் போச்சு என்ற நிலைக்கு ராமசாமி தள்ளப் படுவது மனதை பாரமாக்கு கிறது.

வம்பு, வழக்குக்கு இடையே இளம் ஜோடி யொன்றின் காதலும் அதற்கு வரும் ஜாதிய குறுக்கீட்டையும் இன்னொரு வழக்காகவே மாற்றியிருக்க லாம்.

நாசர் தொடங்கி மு.ராமசாமி, புகழ் மகேந்திரன், பௌலின் ஜெசிகா, ராணி ஜெயா, காக்கா முட்டை பாட்டி, ரெஜின் ரோஸ், திருநாவுக்கரசு, பிரசன்னா பாலசந்திரன், முத்து அழகர் சாமி, ஆதன் குமார், மாஸ்டர் அபியங்கர் என அனைத்து கதாபாத்திரங்களும் உண்ர்வு களோடு ஒன்றியிருக்கின்றனர்.

லோகேஸ்வரன் இசையும், சேதுமுருக வேல் அங்காரகன் கேமராவும் கதையை ஓவர்டேக் செய்து கருவை கலைக்காதது ஆறுதல்.

விறுவிறுப்பை கூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் திசை மாறிவிடாமலிருந்த இயக்குனரை மெச்சலாம்.

வாய்தா- நீதியை திசை மாற்றும் வித்தை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *