full screen background image
Search
Friday 24 April 2026
  • :
  • :
Latest Update

எஸ்ஆர்எம் மாணவர் புரஞ்சாய் மோகன்  ₹ஒரு கோடி சம்பளத்தில்  அமேசான் ஜெர்மனி நிறுவனத்தில் பணி நியமனம்

எஸ்ஆர்எம் மாணவர் புரஞ்சாய் மோகன்  ₹ஒரு கோடி சம்பளத்தில்  அமேசான் ஜெர்மனி நிறுவனத்தில் பணி நியமனம் -வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி அமேசான் நிறுவனத்தின் பணி ஆணை வழங்கி பாராட்டு

    எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் நடத்திய பணி நியமன வளாக தேர்வில் புரஞ்சாய் மோகன் என்ற எஸ்ஆர்எம் பி. டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவரை அமேசான் ஜெர்மனி நிறுவனம் ₹1கோடி ஊதியத்தில் பணி நியமனம் செய்துள்ளது.பணி நியமனம் செயப்பட்ட மாணவர் புரஞ்சாய் மோகனுக்கு எஸ்ஆர்எம் பல்கலை வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி அமேசான் நிறுவனத்தின் பணி ஆணை யினை  வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இது சம்மந்தமாக சென்னையில் உள்ள ரமதா பிளாசா ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளகள் கூட்டத்தில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தரும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் டி. ஆர். பாரி வேந்தர் கூறியதாவது:

காட்டங்குளத்தூர் l (முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்)  உயர்கல்வி வழங்குவதுடன் மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் ஆராய்ச்சி, கண்டுபிடித்தல், உருவாக்குதல், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை உருவாக்கி கொடுப்பதுடன், திறமையான விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் வகையில் நிறுவனத்திழ்வுள்ள சர்வதேச அளவிலான விளையாட்டு அரங்குகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி பரிவர்த்தனை திட்டம் மூலமாக பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி பரிவர்த்தனை மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும்  வகையில் அமைந்துள்ளது.

 எஸ்ஆர்எம் நிறுவனம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவங்களின் வளாக பணி நியமன தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.எஸ்ஆர்எம் காட்டாங்குளத்தூர், மோடிநகர், ராமாபுரம், வடபழனி வளாகங்களின் மூலம் பயின்ற மாணவர்கள் 2020ம் ஆண்டில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும், கடந்தாண்டு(2021) 8ஆயிரத்துக்கும் இந்தாண்டு(2022)10,089 பெறும் பணி ஆணை பெற்றுள்ளனர்.இந்தாண்டு மாணவ மாணவியருக்கான பணி  நியமன வளாக தேர்வு காட்டங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஜூலை மாதம்  2021 தொடங்கியது. இதில் கடந்த மாதம் வரை  சர்வதேச அளவில் முன்னணி நிறுவங்களான அமேசான், பேபால், கூகுள், டொயோட்டா, டிசிஎஸ், காக்னிஜீன்ட், விப்ரோ, அக்கோலிட், ஹிட்டாச்சி, இன்போசிஸ், வோடாபோன், பார்ச்லேஸ், சீமென்ஸ், எல் அண்ட் டி கட்டுமானம், ஏர்டெல் ஆப்ரிகா, நீல்சன் கே,ஐபிஎம், ஜாண்டீர், பிடேலிட்டி, ஏர் ஆசியா, பிசேர்வா, பிலிப்ஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, வால் மார்ட், ஜே பி மோர்கன் உள்ளிட்ட1050க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியார்களை தேர்வு செய்தனர்.

இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அந்த நிறுவனங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில் எஸ்ஆர்எம் ல் பி. டெக் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்டருமெண்டஷன் இன்ஜினியரிங் இறுதியாண்டு பயிலும் புரஞ்சாய் மோகன் என்ற மாணவரை அமேசான் ஜெர்மனி என்ற பன்னாட்டு நிறுவனம் ஆண்டுக்கு ₹1கோடி ஊதியத்தில்  பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்காது. இதில் 4,000 க்கும் மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ₹10 லட்சத்திற்கும் மேலான சூப்பர் ட்ரீம்ஸ் ஆபர் ஊதியத்திலும்,₹5 லட்சத்திற்கும் மேலான ட்ரீம்ஸ் ஆபர் ஊதியத்திலும் மற்றவர்கள் நல்ல ஊதியத்திலும் பணி நியமனம் ஆணை பெற்றுள்ளனர்.      

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் சிவில்,பொருளாதார, அறிவு சார்ந்த வல்லுநர்கள் நாட்டிற்கு தேவை பொறியியல் பட்டதாரிகளை  உருவாக்குவத்தில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தீவிரம் காட்டிவருகிறது. அதோடு நாட்டு மக்களுக்கு தேவையான பொருளாதார வளர்ச்சி, மருத்துவ சேவை, நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

எஸ்ஆர்எம் நிறுவனத்தின் பொது சுகாதார கல்லூரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு  நோடல் மையமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் உள்ள எல்லா பொறியியல் பட்ட படிப்புகள், மருந்தியல், கட்டிடக்கலை, வணிக மேலாண்மை துறைகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் ஒப்புதல் பெற்றுள்ளது. ஆராய்ச்சி பணி சாதனைகளுக்கு அடல் ராங்கிங் அவார்ட் நான்காவது முறையாக கிடைத்துள்ளது. மேலும் அரசு துறைகள் மற்றும்  நிறுவனங்களுக்கு தேவையான 224 ஆராய்ச்சி  திட்டங்களை உருவாக்கி தர எஸ்ஆர்எம் கல்வி நிறுவனதுக்கு ₹115 கோடி நிதி வழங்கப்பட்டு ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

செய்தியாளர்கள் கூட்டத்தில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனதின் இணைவேந்தர் முனைவர் பி. சத்தியநாராயணன் கூறுகையில்:

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மாணவர்களின் திறனை மேம்படுத்தி அவர்களை நல்ல ஆராய்ச்சியாளர்களாக உருவாக்கும் வகையில் ஏராளமான ஆய்வு மையங்கள் ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்கள் சுய தொழில் முனைவோர்களாக உருவாக தொழில் நிறுவங்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
       
வளாக தேர்வு மூலம் ₹1கோடி ஊதியத்தில் அமேசான் ஜெர்மனி நிறுவனத்தில்  பணி நியமனம் ஆணை பெற்ற மாணவர்  புரஞ்சாய் மோகனுக்கு அதற்கான அமேசான் ஜெர்மனி நிறுவனத்தின் பணி நியமன ஆணையை டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி வழங்கி பாராட்டினார்.

இதில்  எஸ்ஆர்எம்  அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் துணை வேந்தர் முனைவர் சி. முத்தமிழ்செல்வன், பதிவாளர் முனைவர் எஸ். பொன்னுசாமி, வேலைவாய்ப்பு மையம் இயக்குனர் வெங்கட சாஸ்திரி ஆகியோர் பங்கேற்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *