முதல் இடத்தில அந்த டாலரை வைத்தவுடனே குள்ள மனிதர்கள் போகும் பாதை உண்டானது.இந்த பாதையில் எந்த ரத்த காட்டேரிகளும் உள்ளே போக முடியாது .மிகவும் சிறிதாக இருந்தது.அவர்களின் கைகள் மட்டும் உள்ளே கொஞ்ச தூரம் போனது.ரத்தக்காட்டேரிகள் நினைத்தது ஒன்றாகவும் நடந்தது இன்னொன்றாகவும் இருந்தது .தளபதி அந்த பாதையை அடியோடு ஒழிக்க உத்தரவிட்டான்.ரத்தக்காட்டேரிகள் தங்கள் கைகளால் அதை உடைக்க முற்பட்டனர்.

அவர்கள் உடைக்க முயற்சிக்கும் போது ஏற்பட்ட சப்தம் உள்ளே இருந்த குள்ள மனிதர்களுக்கு கேட்டது.புற்றுக்குள் இருந்த பாம்புகள் வெளிவருவதைப் போல அந்த பாதையிலிருந்து குள்ள மனிதர்கள் அதிரடி ஆயுதங்களோடு ரத்தகாட்டேரிகளின் கைகளை காயப்படுத்தி விட்டு படபடவென வெளியே வரத்தொடங்கினார்கள்.
https://www.amazon.in/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-vampires-experiences-ebook/dp/B08CCRH2MW/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&qid=1594284004&sr=8-1











