full screen background image
Search
Sunday 19 January 2025
  • :
  • :

Caarthick Raju-Regina Cassandra ‘Mystery Thriller’ Movie – shooting kick-starts from January 13th, 2020

Caarthick Raju-Regina Cassandra ‘Mystery Thriller’ Movie – shooting kick-starts from January 13th, 2020

New-Age filmmaker Caarthick Raju, who is stealing the spotlights for his consistent directorial skills & successes of newfangled theme based stories – is all set to foray into his next film – which incidentally also marks the maiden production of “Apple Tree Studios”featuring Regina Cassandra in lead role. The film , which will go on floors from January 13th, 2020, is a mystery drama laced with action, adventure, comedy and thrills – & will be a bilingual simultaneously made in Tamil and Telugu.

“Apple Tree Studios” Producer Raj Shekar Varma says, “Apart from being a producer, I am really excited as an audience about the story that Caarthick Raju has written. It has an outstanding and never-heard-before story line, which kept me surprised at many points. In the recent times, it’s really great to see that our South- film Industry is getting steady and strong with female centric films. In this aspect, I earnestly felt that Apple Tree Studios should venture its film journey with one such movie and that’s when I came across the narration of Caarthick Raju. Furthermore, I could easily visualize that Regina Cassandra’s screen presence is going to enhance the film. She has been constantly escalating her stature as ‘Star’ by exhibiting prowess performance in every film. The effort she has been rendering for this film with severe preparations is really great and will be evident on the screen.

Tentatively titled “Production No.1”, this mystery thriller features Regina Cassandra as an archeologist. Currently, she is undergoing rigorous training in stunts as she wants to perform them without dupes. “We are kick-starting the film’s shoot from January 13th, 2020 in Courtallam and the major portions of this film will be shot in Live locations. We will be soon announcing the details about others in the cast and crew along with the first look,” says producer Raj Shekar Varma and signs off.

கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் !

திருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது.

Apple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது..

ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலமாக பெண் பாத்திரங்களை மையமாக கொண்டு, நல்ல அழுத்தமாக கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ் திரையில் ஜெயித்து வருகிறது. அந்த வகையில் Apple Tree studios முதல் தயாரிப்பாக பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட திரில்லர் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. கார்த்திக் ராஜு கதை சொன்ன போதே இந்த கதாப்பாத்திரத்திற்கு ரெஜினா கஸண்ட்ரா சரியாக இருப்பார் என நினைத்தேன் அவரும் கதை பிடித்து ஆவலுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் அவரை பெரிதும் ரசிப்பார்கள். தொடர்ந்து வித்தியாசமான கதாப்பத்திரங்களாக தேர்ந்தெடுத்து, ரசிகர்களை கவர்ந்து வரும் அவர் இப்படத்திலும் தன் திறமையை நிரூபிப்பார். கதாப்பாத்திரத்தின் மீது அவர் காட்டும் ஈடுபாடும் அதற்கு அவர் செய்துகொள்ளும் முன் தயாரிப்புகளும் திரைப்படத்தின் மீதான அவரது காதலை, அர்ப்பணிப்பை காட்டுகிறது. இப்படத்தை திரையில் பார்க்கும் போது நீங்களும் அதை காணலாம். இத்திரைப்படம் திரில்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

Production no 1 என தற்போதைக்கு தலைப்பிடபட்டிருக்கும் இத்திரைப்படத்தில் ரெஜினா கஸண்ட்ரா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கவுள்ளார். தற்போது அவர் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் தானே நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் குற்றாலத்தில் துவங்கவுள்ளது. படத்தின் பெரும்பான்மை காட்சிகள் நேரடி லொகேஷன்களில் படம்பிடிக்கப்படவுள்ளது. படத்தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் விவரம் ஃபர்ஸ்ட் லுக்குடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும் என்றார் தயாரிப்பாளர் ராஜ் சேகர் வர்மா.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *