full screen background image
Search
Thursday 23 January 2025
  • :
  • :

நினைவோ ஒரு பறவை

நினைவோ ஒரு பறவை

மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் நினைவோ ஒரு பறவை.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.

50 வயது நிரம்பிய கணவன் மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.

ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா? என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.

இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள் வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர் விரைவில் அதன் அறிவிப்பு வரும் இவர்கள் தான் கதையின் நாயகன் நாயகி.

தற்போது மீனாமினிக்கி என்ற பாடல் மிகப்பெரிய சாதனையாக வெளிவந்த 6 நாட்களில் 7 இலட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *