full screen background image
Search
Sunday 9 February 2025
  • :
  • :
Latest Update

MR W-Movie News

MR W-Movie News

எஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும்
” மிஸ்டர் டபிள்யூ”
புது இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் அறிமுகம் |

சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”.

எஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, ” ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.
உடலுக்கு உடை அழகு.
முகத்திற்கு மீசை அழகு.
பாடலுக்கு நடனம் அழகு
என்று கூறி வரும் சமுதாயத்தில்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி . . ஊர்வசி … பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி ” என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை செம காமெடியுடன் சொல்லும் படம் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.

மிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் – அசார் நடன பயிற்சியையும், தமிழ் – நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் – ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் – அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.

சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார்.

இம்மாதம் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்படும் இப்படத்தை மிஸ்டர் சத்தி தமது சத்தி என் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்..

பிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு “மிஸ்டர் டபிள்யூ” என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.

“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான மிஸ்டர் சத்தி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *