full screen background image
Search
Wednesday 9 July 2025
  • :
  • :
Latest Update

“தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”- இயக்குநர் முத்தையா

Devarattam

CAST:
Gautham Karthik ,Manjima Mohan, Soori, Saravanan Sakthi, Bala ( 6 Movie Fame) , Vinodhini Vaidyanathan , Akalya Venkatesan , Bose Venkat , Chandhru ,

CREW:
Written & Directed by Muthaiya
Produced by K. E. Gnanavel Raja
Banner: Studio Green and Abi & Abi Pictures
DOP by Sakthi Saravanan
Music by Nivas K Prasanna
Editing by Praveen KL
Stunt by Dhilip Subbarayan
Stills by Murugan
PRO : Riaz K Ahmed
Audio Label: Think Music

Madhampatty Rangaraj Speech at Devarattam PressMeet ~ FocusNewz

Manjima Mohan Speech at Devarattam PressMeet ~ FocusNewz

#Muthaiah Speech at Devarattam PressMeet ~ FocusNewz

#NivasPrasanna Speech at Devarattam PressMeet ~ FocusNewz

Sakthi Film Factory #Sakthivelan Speech at Devarattam PressMeet ~ FocusNewz

#VelaRamamoorthy Speech at Devarattam PressMeet ~ FocusNewz

“தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”- இயக்குநர் முத்தையா

இயக்குநர் முத்தையா பேசும்போது,

“நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோவத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர். பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப்படத்தை முழுதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்.” என்றார். மேலும் படத்தில் கடும் உழைப்பை கொடுத்த ஹீரோ உள்பட அனைவருக்கும் நன்றி சொன்னார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,

“முத்தையா அவர்களோடு எனக்கு இது இரண்டாவது படம். இந்தப்படம் ஒரே ஷெட்யூலில் எடுத்த படம். இவ்ளோ பெரிய ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து வேலை செய்து எடுப்பது சாதாரணம் கிடையாது. நாங்கள் புரொடக்சன் சார்பில் யாருமே செல்லவில்லை. எல்லாவற்றையும் தன் சொந்தப்படம் போல முத்தையா அவர்களே பார்த்துக் கொண்டார். கவுதமையும் மஞ்சுமாவையும் கிராமத்து படத்தில் காட்டுவது சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் முத்தையா சரியாக வரும் என்றார். படம் பார்த்ததும் எனக்கு திருப்தியாகி விட்டது. இயக்குநர் சொன்னது போலவே செய்திருக்கிறார். படத்தில் எல்லாமே உறவுமுறைகள் பற்றியது. இந்தப்படத்தைப் பார்த்த பின் எனக்கு அக்கா இல்லையே என்ற ஏக்கம் வந்தது. இந்தப்படத்தைப் பார்த்த பின் அக்கா இல்லாதவர்கள் நமக்கு அக்கா இல்லையே என்று ஏங்குவார்கள். அக்கா இருப்பவர்கள் மேலும் பாசமாக இருப்பார்கள். வினோதினி , போஸ்வெங்கட் கேரக்டர் படத்திற்கு பெரிய பலம்.. வேல.ராமமூர்த்தி சார் கலக்கி இருக்கிறார். கவுதம் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். தேவராட்டம் படத்திற்கு பின் அவருக்கு பெரிய கரியர் அமையும்” என்றார்.

கவுதம் கார்த்தி பேசும்போது,

“இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்” என்றார்.

நடிகை மஞ்சுமா மோகன் பேசும்போது,

“தேவராட்டம் எனக்கு முக்கியமான படம். முத்தையா சார் முதலில் ஒரு படத்திற்காக கேட்டார். அப்போது டேட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. அப்போது அவர் மீண்டும் நான் உங்களை தேடி வருவேன் என்றார். சொன்னது போலவே இந்தப்படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார். கவுதம் நல்ல எனர்ஜியான நடிகர். படத்தில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி” என்றார்.

இசை அமைப்பாளர் நிவாஸ்.கே பிரசன்னா பேசும்போது,

“இந்தப்படத்தில் நல்ல பாடல்கள் அமைய முக்கியக் காரணம் முத்தையா சார் தான். அவருக்கு நன்றி. என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி. முத்தையா சாரிடம் கதைசொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்தப்படத்தை ஆர்.ஆரில் பார்த்து தான் சொல்கிறேன். இந்தப்படத்திற்கு பின் கவுதம் கார்த்தி மாஸ் ஹீரோவாக வருவார். மஞ்சுமா மோகம் திரையில் அழகாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன்” என்றார்.

எழுத்தாளரும் நடிகரும் ஆன வேல.ராமமூர்த்தி பேசும்போது,

“எனக்கு நல்ல அடையாளத்தை கொம்பன் படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி. அவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார். இந்த தேவராட்டம் படம் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம் அம்மாவின் பாசத்திற்கு ஈடானது. இந்தப்படம் இரு பெருங்குடும்பத்தின் கதை இது. அந்தப் பெருங்குடும்பத்தின் ஆணிவேராக என் கேரக்டர் இருக்கிறது. என்னுடைய கதைகளுக்கு தமிழில் ஒரு ஹீரோ இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதைத் தீர்க்க வந்தவர் கவுதம் கார்த்தி. அவர் நடிப்பில் எல்லாத் தளங்களிலும் கலக்கி வருகிறார். இந்தப்படம் சாதி படம் அல்ல. ஆட்டக்கலைகளை பற்றிய தகவல்களை திரட்டிய போது தேவராட்டம் என்ற ஆட்டத்தைப் பற்றி அறிந்தேன். தேவராட்டம் என்றால் தேவர்கள் ஆடும் ஆட்டமல்ல. இது எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்” என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *