full screen background image
Search
Monday 21 April 2025
  • :
  • :

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறன் கணவன் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறனின் கணவர் மணிமாறன் நேற்று காலமானார் .சுமார் ஓராண்டு காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று பகல் 12 மணிக்கு மறைந்து விட்டார். இந்த இழப்பு இளம்பிறை ஈடு செய்ய முடியாதது. மதுரையில் நேற்று மாலை 6 மணியளவில் மதுரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மணிமாறன் பற்றி நடிகர் சிவகுமார் கூறியது :-

தூத்துக்குடியில் உள்ள APC மஹாலக்ஷ்மி கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருந்து, பிறகு அதே கல்லூரியில் தாளாளராக ஓய்வு பெற்றவர் இளம்பிறை மணிமாறன் அவர்கள்.

இவர் தமிழ் இலக்கியங்களில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம், கந்தபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள் என்று அனைவற்றையும் கரைத்து குடித்தவர். கிட்டத்தட்ட 5000 மேடைகளில் இலக்கியங்கள் பற்றி உரையாற்றியிருக்கிறார்.

2009-ல் என்னுடைய வீட்டிற்கு வந்தார். நான் முழு கம்பராமாயணத்தையும் 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கூறினேன். அதைக் கேட்ட அவர் இதைப் பயிற்சி செய்ய எவ்வளவு நாள் ஆனது என்று கேட்டார்கள். ஒரு வருடம் என்றேன். நீங்கள் செய்தது அசுர சாதனை என்று பாராட்டினார். அதேபோல், மஹாபாரதம் பேசும்போதும் மேடையில் அமர்ந்து எனக்கு ஊக்கமளித்தார். அவரின் சாதனைகளுக்கு பின்புலமாகவும், தூணாகவும் இருந்தவர் தான் அவருடைய கணவர் மணிமாறன்.ஈடு செய்யமுடியாத அந்த மாமனிதரை இழந்து வாடும் அவரது மனைவி இளம்பிறை மணிமாறனுக்கும் , அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன் .




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *