திகில் திரைப்படங்கள் எவ்வளவோ வெளியாகின்றன. ஆனால், அவற்றிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் சென்று புதிய உணர்வினை ரசிகர்களுக்குக் கொடுப்பதுடன், சினிமாவையும் அடுத்து என்னவென்று யோசிக்கும் முயற்சியாகவே காட்டுப்புறா திரைப்படத்தைப் பார்க்கவேண்டும்.
குழந்தைகளுக்கான திரைப்படம் என்று சொல்லும் பல படங்கள் வருகின்றன. ஆனால், அவையெல்லாம் குழந்தைகளை மட்டுமே டார்கெட் செய்தவையாக இருக்கின்றனவா? குழந்தைகளுக்குத் தேவையானவற்றை சொல்லிக்கொடுக்கின்றனவா என்ற கேள்வி நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் இருந்துவருகிறது. அவற்றுக்கு தீர்வு சொல்லும் விதத்தில் காட்டுப்புறா உருவாக்கப்பட்டிருக்கிறது.