full screen background image
Search
Sunday 13 October 2024
  • :
  • :

வைகோ தலைமையில் தமிழாற்றுப்படை கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்றுகிறார் கவிஞர் வைரமுத்து

வைகோ தலைமையில் தமிழாற்றுப்படை
கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்றுகிறார்
கவிஞர் வைரமுத்து

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார்.

இதுவரை தொல்காப்பியர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் –– வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன் – கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் –- கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் என்று 18 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 19ஆம் படைப்பாகக் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றுகிறார்.

ஆகஸ்ட் 25 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்குகிறார். அருட்தந்தையர் வேதநாயகம் மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் மதுரா வாழ்த்துரை வழங்குகிறார். விழாவைத் திருநெல்வேலி பைந்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருக்கிறது.

நெல்லை பைந்தமிழ் மன்றச் செயலாளர் செ.திவான், ம.தி.மு.க நெல்லை மாநகரச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், ம.தி.மு.க புறநகர் மாவட்டச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன், வெற்றித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கோவில்பட்டி நாகஜோதி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, சிவகாசி ரவி, மதுரை சுரேஷ் யு.எஸ்.டி.சீனிவாசன், நெல்லை ஹரிஹரன், மருக்காலங்குளம் வைரமுத்துதாசன், செங்கோட்டை முரளி, கொட்டாகுளம் முருகன், கடையம் சொக்கலிங்கம், அச்சம்பட்டி செல்லத்துரை உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *